பாடசாலை இடைவேளையை (Interval period) -- இரண்டு தடவை வழங்க முடிவு ..புதிய கல்வி சீர்திருத்தம்!
பாடசாலை இடைவேளையை (Interval period) -- இரண்டு தடவை வழங்க முடிவு ..புதிய கல்வி சீர்திருத்தம்!
பாடசாலை இடைவேளையை (Interval period) -- இரண்டு தடவை வழங்க முடிவு ..புதிய கல்வி சீர்திருத்தம்!
பாடசாலை இடைவேளையை (Interval period) -- இரண்டு தடவை வழங்க முடிவு ..புதிய கல்வி சீர்திருத்தம்!
-- தவணை பரீட்சை இல்லை
-- பாட புத்தகத்துக்கு பதிலாக modules
-- பாடசாலை நேரத்தை அதிகரித்தல்
மத்தள விமான நிலைய மேம்படுத்தல்
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் ( MRIA) செயற்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்காக, தனியார் துறையிடமிருந்து புதிய முதலீடுகளை அழைக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த செயன்முறையை மேம்படுத்தவும், பயன்படுத்தப்படாத வசதிக்கு புதிய முதலீட்டாளர்களை பெறுவதற்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
முன்னதாக விமான நிலைய நடவடிக்கைகளை ரஷ்யா - இந்தியா கூட்டு முயற்சிக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
அமெரிக்கத் தடைகளுக்கு ஒரு தரப்பினர் உட்பட்டதனால் தேசிய வான்வெளியின் இறையாண்மை குறித்து எழுந்த பிரச்சினை காரணமாக குறித்த ஒப்பந்தத்தில் இருந்து அமைச்சு விலகியது.
புதிய முதலீட்டு அழைப்பின் மூலம் பெறப்பட்ட அனைத்து திட்டங்களையும் அரசாங்கம் கவனமாக மதிப்பாய்வு செய்ததன் பின்னர் விமான நிலையத்தை புதுபிப்பதற்கான முதலீட்டாளர்களை தேர்ந்தெடுக்கும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த நரேந்திர மோடி
இந்தியாவின் தற்போதைய பிரதமரான நரேந்திர மோடி இந்தியாவின் இரண்டாவது நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
2014 தொடக்கம் இன்று (25.07.205) வரை தொடர்ந்து 4,078 நாட்கள் இந்தியாவின் பிரதமராகப் இவர் பதவி வகித்து வருகிறார். அறிக்கைகளின் பிரகாரம், இதற்கு முன்பு மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவராக இந்திரா காந்தி விளங்கினார்.
1966 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி தொடக்கம் 1977 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்திரா காந்தி (Indira Gandhi) தொடர்ச்சியாக பிரதமராகப் பதவி வகித்திருந்தார்.
இந்திரா காந்தி 4,077 நாட்கள் பிரதமராகப் பதவி வகித்த நிலையில் நரேந்திர மோடி இன்றுடன் 4,078 நாட்கள் பிரதமராக பதவி வகித்து அவரின் சாதனையை முறியடித்துள்ளார்.
இதே போன்று, 1947 முதல் 1964 வரை பதவி வகித்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் வரலாற்றில் மிகவும் நீண்ட காலம் பதவி வகித்த முதலாவது இந்திய ஆட்சியாளர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
25 OTT தளங்களுக்கு தடை -- ஆபாச காட்சிகளை ஒளிபரப்பும்
ஆபாச, அநாகரிக உள்ளடக்கம் மற்றும் சட்ட விதிமீறல் தொடர்பாக 25 OTT தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த வலைதளங்களை பொதுமக்கள் அணுக முடியாத வகையில் அவற்றை முடக்குமாறு இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, சட்ட விவகாரத் துறை, எப்ஐசிசிஐ, சிஐஐ போன்ற தொழில் அமைப்புகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு சட்ட விதிகளை மீறியதற்காகவும் இவை தடை செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட தளங்கள் பட்டியலில் ALTT, ULLU, Big Shots App, Desiflix, Boomex, Navarasa Lite, Gulab App, Kangan App, Bull App, Jalva App, Wow Entertainment, Look Entertainment, Hitprime, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, HotX VIP, Hulchul App, MoodX, NeonX VIP, Fugi, Mojflix, Triflicks உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
முதியவர் கைது -- 62 வயது
யாழ்ப்பாணம், வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 62 வயது கடை உரிமையாளர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (19) அன்று, துறையூர் கடற்றொழில் சங்கத்திற்கு அருகிலுள்ள கடைக்கு சிறுமி ஜூஸ் வாங்கச் சென்றபோது, கடை உரிமையாளர் சிறுமியை குளிரூட்டிக்குள் ஜூஸ் எடுக்குமாறு கூறி, அவர் ஜூஸ் எடுக்க முற்பட்டபோது பின்புறமாக கட்டியணைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
பதற்றத்துடன் வீடு திரும்பிய சிறுமி, இச்சம்பவத்தை தனது தாயாருக்கு தெரிவித்தார். ஆனால், சமூகம் மற்றும் அயலவருக்கு அஞ்சிய தாயார், முதலில் பொலிஸ் முறைப்பாடு செய்ய தயங்கினார்.
பின்னர், சமூக நலன்விரும்பிகளின் முயற்சியால், கடந்த 23ஆம் திகதி கிராம உத்தியோகத்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 24ஆம் திகதி வேலணை பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அதே நாளில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு, நேற்று (25) பிற்பகல் குறித்த சந்தேக நபரை கைது செய்தனர். அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை இடைவேளையை (Interval period) -- இரண்டு தடவை வழங்க முடிவு ..புதிய கல்வி சீர்திருத்தம்!
No comments