பாடசாலை மாணவர்களுக்கு --- மன அழுத்தம் அதிகரிப்பு........ - !

பாடசாலை மாணவர்களுக்கு  --- மன அழுத்தம் அதிகரிப்பு........ - !





பாடசாலை மாணவர்களுக்கு  --- மன அழுத்தம் அதிகரிப்பு........ - !




 


பாடசாலை மாணவர்களுக்கு  --- மன அழுத்தம் அதிகரிப்பு........ - !



பாடசாலை மாணவர்களிடையே மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாடசாலை சுகாதார கணக்கெடுப்பில், 22.4% மாணவர்கள் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 11.9% மாணவர்கள் கவலை காரணமாக தூக்கமின்மையை எதிர்கொள்வதாகவும், 18% மாணவர்களுக்கு மனச்சோர்வு அறிகுறிகள் தென்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் உளநலப் பணிப்பாளர் காரியாலயத்தின் பதில் பணிப்பாளர் வைத்தியர் லக்மினி மாகொடரத்ன குறிப்பிட்டுள்ளார். 


மேலும், 75% மாணவர்களுக்கு நெருக்கமானவர்கள் இல்லை எனவும் நாட்டில் தினசரி சுமார் 8 உயிர்மாய்ப்புகள் பதிவாகுவதாக தேசிய மனநல நிறுவனத்தின் வைத்தியர் சஜீவன அமரசிங்க கூறினார். 


1996இல் உலகளவில் உயிர்மாய்ப்புகளில் இரண்டாம் இடத்தில் இருந்த இலங்கை, தற்போது ஒரு இலட்சத்திற்கு 15 உயிர்மாய்ப்புகளாகக் குறைந்துள்ளது.


ஆண்டுக்கு 3,500 உயிர்மாய்ப்புகள் நிகழ்ந்தாலும், ஊடகங்கள் இவற்றை பெரிதாக வெளியிடுவது குறைந்துள்ளது, இது ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.



நன்கொடையாக வழங்கிய சீனா...

      


சீன மக்கள் குடியரசு 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள அனர்த்த நிவாரண உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.


இந்த உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்றது.


சீனத் தூதுவர் அதிமேதகு குய் ஜென்ஹாங் அண்மையில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத துயகொந்தாவிடம் இந்த உபகரணங்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.


இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர்:


இலங்கைக்கு சீனா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவை பாராட்டாமலிருக்க முடியாது.


எமது, நாடு அடிக்கடி இயற்கை அனர்த்தங்களை குறிப்பாக காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மோசமான வெள்ள நிலைமைகளை எதிர்கொள்கிறது.


இந்த நன்கொடை ஒரு சரியான நேரத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது.


பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சரியான நேரத்தில் உதவி வழங்குவதை உறுதி செய்வதற்காக, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தால் இந்த உபகரணங்கள் நிர்வகிக்கப்படும்.


இரு நாடுகளுக்குமிடையிலான வலுவான பிணைப்பை எடுத்துரைத்த அவர், இந்நன்கொடை அவசர காலங்களில் இலங்கையுடனான சீனாவின் உறவை பிரதிபலிக்கிறது என்பதை வலியுறுத்தினார்.


இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக சீனா இதற்கு முன்னரும் உதவி வழங்கியுள்ளது




இலங்கை மீதான புதிய அமெரிக்க வரிகள் அமுல்...

     


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று (07) முதல் அமுலுக்கு வரும்.


அதன்படி, நாட்டிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இன்று முதல் அமெரிக்கா 20 சதவீத வரி விதிக்கும்.


பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை அறிமுகப்படுத்தியது, மேலும் இலங்கை மீது 44 சதவீத வரிவிதிக்கப்பட்டது.


அந்த வரிவீதம் அமுல்படுத்தப்பட்டால், அது நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், எனவே நிவாரணம் பெற இலங்கை அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது.


அந்த விவாதங்களின் போது நாட்டின் பிரதிநிதிகள் 24 சதவீத உயர் வரி விகிதத்தைக் குறைப்பதில் வெற்றி பெற்றதால், இலங்கை மீது விதிக்கப்பட்ட வரி வீதம் 20 சதவீதமாகும்.


இருப்பினும், இந்த புதிய வரிக் கொள்கை கடந்த மாதம் 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதியால் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.


இதற்கிடையில், அமெரிக்கா விதித்த கட்டண வீதத்தை மேலும் குறைக்க பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க கூறியுள்ளார்.



விற்பனை செய்யப்படும் அழகுசாதன பொருட்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள் எச்சரிக்கை...

    


இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.


49 வகையான அழகுசாதன பொருட்கள் பயன்படுத்த பொருத்தமற்ற அளவில் கன உலோகங்கள் இருப்பதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.


சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் அவற்றில் முக்கியமானவை என அதிகாரசபையின் போட்டித்திறன் மேம்பாட்டு பணிப்பாளர் சமந்த கருணாரத்ன தெரிவித்தார்.


பொருத்தமற்ற அழகுசாதன பொருட்கள் ஒன்லைனில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



செப்டம்பர் முதல் இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கிறது 

    


எதிர்வரும் செப்டெம்பர் முதல் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.


இறுதியாக 2024 மே மாதம் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான சேவை தொடர்ந்தது.


இந்த நிலையில் 2025 செப்டம்பர் 23, 25 அன்று சேவை மீண்டும் தொடங்கியவுடன், டெல் அவிவ் – கொழும்பு வழித்தடம் விமான நிறுவனத்தின் குல்லிவேர் ஏர்பஸ் A330-200 விமானத்தின் மூலமாக இணைக்கப்படும்.


விமான நிறுவனம் வாராந்திர விமானப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளது.




பாடசாலை மாணவர்களுக்கு  --- மன அழுத்தம் அதிகரிப்பு........ - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.