பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் மற்றும் கற்கைநெறி தெரிவுகள் ஆன்லைன் மூலம் வெளியாகி உள்ளது.(2024 உயர்தர பெறுபேறுகள் அடிப்படையில்)..... - !
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் மற்றும் கற்கைநெறி தெரிவுகள் ஆன்லைன் மூலம் வெளியாகி உள்ளது.(2024 உயர்தர பெறுபேறுகள் அடிப்படையில்)..... - !
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் மற்றும் கற்கைநெறி தெரிவுகள் ஆன்லைன் மூலம் வெளியாகி உள்ளது.(2024 உயர்தர பெறுபேறுகள் அடிப்படையில்)..... - !
University Admission for Academic Year 2024/2025
Check Cutoff : CLICK HERE
மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள்|DISTRICT WISE CUT OUT PDF|
Z-SCORE ENGLISH CLICK HERE
பாகிஸ்தானில் நிலநடுக்கம்...
பாகிஸ்தானில் 25/08/2025 காலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 25 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந் நிலநடுக்கம் 36.10 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 71.26 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், இந் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம், பாதிப்பு குறித்து எதுவித தகவலும் இல்லை.
இலங்கை தனியார் - அரச பேருந்து சேவைகளின் நேரங்களில் மாற்றம்....
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளை ஒருங்கிணைந்த கூட்டு நேர அட்டவணையின் கீழ் இயக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
கொழும்பு - சிலாபம், கொழும்பு - புத்தளம், கொழும்பு - ஆனமடுவ, கொழும்பு - எலுவன்குளம், கொழும்பு - கல்பிட்டி, நீர்கொழும்பு - கல்பிட்டி, கொழும்பு - மன்னார், கொழும்பு - தலைமன்னார், கொழும்பு - குளியப்பிட்டி, கொழும்பு - நிக்கவெரட்டிய, கொழும்பு - குளியப்பிட்டி, கொழும்பு - அனுராதபுரம், கொழும்பு - வவுனியா, கொழும்பு - கிளிநொச்சி, கொழும்பு - யாழ்ப்பாணம், கொழும்பு - காங்கேசன்துறை, கொழும்பு - காரைநகர், கொழும்பு - துனுக்காய் ஆகிய வழித்தடங்களை இந்த ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டு நேர அட்டவணை முறையின் கீழ் இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 25/08/2025 நள்ளிரவு முதல் கொழும்பு, பஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பேருந்து முற்றத்தில் இந்த வழித்தடங்கள் நேர மாற்றத்தின் பிரகாரம் தொடங்கும் என்று தேசிய போக்குவரத்து ஆணைகுழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா தெரிவித்தார்.
நான்கரை மணி நேர பயணத்திற்குப் பிறகு, பேருந்து ஓட்டுநருக்கு ஓய்வு தேவைப்படுகின்றது. ஆகவே, அதற்கேற்றாற்போல் நேர முகாமைத்துவம் சீரமைத்துக் கொடுக்கப்படும்.
மேலும், பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவகத்தில் சுகாதாரமான உணவு வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய தொடர்ந்து கண்காணிப்பு இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
டயானா கமகே - நீதிமன்றில் ஆஜர்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து, 10 மில்லியன் மதிப்புள்ள சரீரப்பிணையில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் மீது தாக்கல் செய்யப்பட்ட ஏழு வழக்குகள் முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதியை பார்க்க வருவதை மட்டுப்படுத்தவும் -
உடல் நல குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தேசிய வைத்திசாலைக்கு வருகைதரும் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நலன்விரும்பிகள் வருகையை மட்டுப்படுத்துமாறு வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டு பிரதிப்பணிப்பாளர் வை்ததியர் ருக்ஷான் பெல்ல,
முன்னாள் ஜனாதிபதியை நேரில் சென்று பார்ப்பதற்காக பலர் வருவதால், அது அவரது உடல்நிலைக்கு சிலவேளைகளில் ஆபத்தை விளைவிக்கக்கூடுமெனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரின் வயது காரணமாகவே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிப்பதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தேவையான அனைத்து விடயங்களையும் செய்யுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் மற்றும் கற்கைநெறி தெரிவுகள் ஆன்லைன் மூலம் வெளியாகி உள்ளது.(2024 உயர்தர பெறுபேறுகள் அடிப்படையில்)..... - !
No comments