மனைவி கர்ப்பமானதால் --- துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர கணவர்..... - !
மனைவி கர்ப்பமானதால் --- துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர கணவர்..... - !
மனைவி கர்ப்பமானதால் --- துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர கணவர்..... - !
தனது மனைவி கர்ப்பமானதால் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணி மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டம், காமா ரெட்டி கூடா பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி(25). இவர் மகேந்தர் ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான புதிதில் எந்த பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். இந்த நிலையில் சுவாதி கர்ப்பம் ஆனார். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே திடீரென குடும்பத் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மகேந்தர் ரெட்டி, சுவாதியை வெட்டிக் கொலை செய்தார். பிறகு அவரது உடலை அப்புறப்படுத்த அதை துண்டு துண்டாக வெட்டினார். அவற்றை ஒரு பொலித்தீன் கவரில் சுற்றி புறநகர் பகுதியில் இருந்த ஆற்றில் வீசினார்.
இதனிடையே உடலை வெட்டும் சப்தம் அக்கம்பக்கத்தினருக்கு கேட்டு, அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு மகேந்தர் ரெட்டி உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவரில் போட்டதை பார்த்தனர். இதையடுத்து போலீஸுக்கு தகவல் அளித்தனர்.
ஆற்றில் உடல் பாகங்களை வீசிவிட்டு வந்த மகேந்தர் ரெட்டியை பொலிஸார் கைது செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்த உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் வீசிய உடல் பாகங்களையும் பொலிஸார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் மகேந்தர் ரெட்டியிடம் விசாரணை நடத்தியதில் மகேந்தர் ரெட்டியும் சுவாதியும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள். எனவே சுவாதி மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள மகேந்திர ரெட்டி விரும்பவில்லையாம்.
இந்த காரணத்தால் ஏற்கெனவே அவர் ஒரு முறை அந்த பெண்ணின் கருவை கலைத்துள்ளாராம். ஆனாலும் அவர் மீண்டும் கர்ப்பமான நிலையில் ஆத்திரமடைந்த மகேந்தர் ரெட்டி, சுவாதியை வெட்டிக் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் மனைவியை காணவில்லை என்றும் தனது மைத்துனியிடம் (சுவாதியின் தங்கை) மகேந்தர் ரெட்டி தெரிவித்திருந்தாராம். கொலையை மறைக்க இப்படி நாடகமாடியதாக தெரிகிறது.
ஆனால் பொலிஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மகேந்தர் ரெட்டி உண்மையை தெரிவித்தார். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரணிலை முன்பே கைது செய்திருக்க வேண்டும் - பிமல் தெரிவிப்பு...
40 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய ஒருவர், இப்போது எங்கள் அரசாங்கத்தின் கீழ் மட்டுமே விசாரிக்கப்படுகிறார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை, படுகொலைகள் செய்யப்பட்டமை, தமிழர்களின் நூலகம் எரிக்கப்பட்டமை, தமிழர்களுக்கு எதிரான கலவரங்களுக்கு காரணமான ஒருவரை கைது செய்திருப்பது தவறு என சுமந்திரன் கூறுகிறார்.
அவர் ரணிலுடன் நெருக்கமானவர், சிலவேளைகளில் ரணிலின் வீட்டில் இருந்து கூட அந்த கருத்தை சொல்லி இருக்கலாம்.
1980களின் முற்பகுதியில் நடந்த முக்கிய சம்பவங்கள், 1981ல் யாழ்ப்பாண நூலகம் எரிப்பு மற்றும் ஜூலை 1983 கலவரம் உள்ளிட்டவற்றின் போது அமைச்சரவையில் ரணில் விக்கிரமசிங்க வகித்த பங்கிற்கு அவர் பொறுப்புக்கூற வேண்டியிருந்தது என்று அமைச்சர் கூறினார்.
1987 மற்றும் 1990 க்கு இடையில், அவரது அரசாங்கத்தின் கீழ் 60,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர் படலந்த சித்திரவதை கூடம் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார், இதற்காக சட்டமா அதிபர் மூலம் இன்னும் விசாரணைகள் நடந்து வருகின்றன. இதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை," என்று அமைச்சர் மேலும் கூறினார்.
2015 ஆம் ஆண்டு பிணைமுறி மோசடியில் ரணில் விக்ரமசிங்கவின் தொடர்பு தெளிவாகத் தெரிந்தாலும், அந்த வழக்கிலும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
கறுப்பு ஜுலைக் கலவரம், யாழ்ப்பாண நூலக எரிப்பு, படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்குப் பொறுப்பு கூறவேண்டியவர்.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க மட்டும் அல்ல, எப்படியான நபரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டே செயற்பட வேண்டும் என்றும் இந்த விடயத்தில் எவரும் விதி விலக்கல்ல என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கழிவறையில் கேமரா பொருத்தி ஆபாச படம் எடுத்த
வைத்தியசாலையின் பெண்கள் கழிவறையில் இரகசியமான முறையில் கேமரா பொருத்தி பெண்களின் அந்தரங்கத்தை நிர்வாணமாக படங்களை எடுத்தார் என்றக் குற்றச்சாட்டில் ஆண் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே அரச மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையின் பெண்கள் கழிவறையில் இரகசியமான முறையில் கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை பெண் வைத்தியர் கண்டுள்ளார்.
இது குறித்து மருத்துவமனையின் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். அதன் பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இது தொடர்பாக அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ரயான் சோ (வயது 28) என்ற வைத்தியர் இரவு நேரத்தில் பெண்களின் கழிவறைக்குள் சென்று வருவதை கண்டு பிடித்தனர்.
சிங்கப்பூர் வம்சாவளியை சேர்ந்தவரான அவரை பொலிஸார் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது அவருடைய சல்லாப புத்தி காரணமாக மருத்துவமனையின் பெண்கள் கழிவறையில் ரகசியமான முறையில் கேமரா பொருத்தி, கழிவறைக்கு செல்லும் பெண்கள் உடைகளை கழற்றும் போது, ஆபாசமாக படம் எடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
2021-ம் ஆண்டு பயிற்சி வைத்தியராக பணியில் சேர்ந்ததில் இருந்து இவ்வாறு செய்து வருவதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவருடைய செல்போன் மற்றும் மடிக்கணினிகளில் இருந்த 4,500 வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன.
அவர் கைது செய்யப்பட்டநிலையில் அவருடைய சிங்கப்பூர் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளது.
தற்போது ரூ.28 லட்சம் பிணைத்தொகை செலுத்தப்பட்டதன்பேரில் அவரை பிணையில் விடுவிக்கப்பட்டார்.
நீண்ட தூர பேருந்துகள் அறிமுகம்
இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் துறையால் இயக்கப்படும் நீண்ட தூர பேருந்து சேவைகள் இன்று நள்ளிரவு முதல் கூட்டு நேர அட்டவணையின் கீழ் இயங்கும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) அறிவித்துள்ளது.
கொழும்பு-சிலாபம், கொழும்பு - புத்தளம், கொழும்பு - ஆணைமடுவு, கொழும்பு - எழுவன்குளம், மற்றும் கொழும்பு - கல்பிட்டி உள்ளிட்ட பல முக்கிய வழித்தடங்களில் புதிய அட்டவணை அறிமுகப்படுத்தப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) தெரிவித்துள்ளது.
மேலும் நீர்கொழும்பு- கல்பிட்டி, கொழும்பு - மன்னார், கொழும்பு - தலைமன்னார், கொழும்பு - குளியாபிட்டி, கொழும்பு - நிக்கவெரட்டிய, கொழும்பு - அனுராதபுரம், கொழும்பு - வவுனியா, கொழும்பு - கிளிநொச்சி, கொழும்பு - யாழ்ப்பாணம், கொழும்பு - காங்கேசன்துறை, கொழும்பு - காரைநகர் மற்றும் கொழும்பு - துணுக்காய் ஆகிய வழித்தடங்களிலும் புதிய அட்டவணை அறிமுகப்படுத்தப்படும்.
அனைத்து பேருந்துகளும் நள்ளிரவில் கொழும்பில், பாஸ்டியன் மாவத்தையில் (BastianMawatha). உள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தங்கள் பயணங்களை ஆரம்பிக்கவுள்ளது.
நான்கு மணி நேர பயணத்திற்குப் பிறகு ஓட்டுநர்களுக்கு நியமிக்கப்பட்டஓய்வு நிறுத்தம் வழங்கப்படும்.
செல்லும் வழியில் அங்கீகரிக்கப்பட்ட உணவகங்களில் பயணிகளுக்கு சுகாதாரமான உணவு வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.
ரணிலின் உடல்நிலையில் - நீதிமன்றத்தில் ஆஜராக முடியுமா என்பது குறித்து நாளை தீர்மானம்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை திருப்திகரமான நிலையை எட்டியுள்ளாக கொழும்பு தேசிய வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பதில் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க,
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள சிறப்பு வைத்தியர்கள் முன்னாள் ஜனாதிபதியை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர், தற்போது அவரது உடல்நிலை திருப்திகரமான நிலையில் இருந்தாலும், திடீரென அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் வைத்தியர் கூறினார்.
இருப்பினும், இன்று பிற்பகல் நடைபெறும் வைத்தியர்களின் கலந்துரையாடலுக்குப் பிறகு, நாளை (26) நீதிமன்றத்தில் ஆஜராக முடியுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று வைத்தியர் பிரதீப் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.
மனைவி கர்ப்பமானதால் --- துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர கணவர்..... - !
No comments