விடுக்கப்பட்ட எச்சரிக்கை.... - !
விடுக்கப்பட்ட எச்சரிக்கை.... - !
விடுக்கப்பட்ட எச்சரிக்கை.... - !
அரசாங்கம் அவசரமான, குழப்பமான மற்றும் திட்டமிடப்படாத மின்சாரத் துறை சீர்திருத்த செயல்முறையை செயல்படுத்துவதாக இலங்கை மின்சார வாரிய பொறியாளர்கள் சங்கம் (CEBEU), குற்றம் சாட்டியுள்ளது.
இந்த செயல்முறையானது நாடு முழுவதுமான மின் தடை, பெருமளவிலான பணிநீக்கங்கள் மற்றும் முழுத் துறையையும் சீர்குலைக்க வழிவகுக்கும் என்று தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
சட்டத் தேவைகள், நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் மின்சாரத் துறை சீர்திருத்தச் சட்டத்தின் விதிகளைப் புறக்கணித்து, அதிகாரிகள் "மிகவும் எளிமையான முறையில்" பணியாளர் பணி நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
"தற்போதைய சீர்திருத்த அதிகாரிகளுக்குள் சரியான பொறுப்புக்கூறல் மற்றும் நடைமுறை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நாட்டின் மிக முக்கியமான துறையாக இருந்தாலும், சிலர் சீர்திருத்த செயல்முறையை இலகுவாக எடுத்துக்கொள்கிறார்கள். இறுதி விளைவு என்னவாக இருக்கும்?" என்று CEBEU இணைச் செயலாளர் பொறியாளர் அமல் அரியரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, தற்போதைய தன்னார்வ ஓய்வூதியத் திட்டம், ரூ. 5 மில்லியனாக வரையறுக்கப்பட்டுள்ளது, இது "போதுமானதாக இல்லை", மேலும் இது மிகவும் திறமையான பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் வெளிநாடுகளில் வேலை தேட வழிவகுக்கும் என CEBEU தொழிற்சங்கம் மேலும் எச்சரித்துள்ளது.
அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் வெளியேறினால், துறை சரிந்துவிடும், மின்வெட்டு தவிர்க்க முடியாததாகிவிடும் எனவும் கூறியுள்ளது.
இலங்கையில் அதிகரித்த பணவீக்கம்
11 மாதங்களுக்குப் பிறகு, கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டை (CCPI) அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது.
புள்ளியியல் துறை வெளியிட்ட தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் -0.3% இலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 1.2% ஆக அதிகரித்துள்ளது.
இங்கு, உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 1.5% இலிருந்து 2.0% ஆகவும், உணவு அல்லாத வகை ஜூலை மாதத்தில் -1.2% இலிருந்து 0.8% ஆகவும் அதிகரித்துள்ளது.
பாடசாலை கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்துள்ள 9ஆம் தர !
கர்நாடக மாநிலம் ஷாஹாபூர் தாலுகாவில் உள்ள பாடசாலை ஒன்றில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாடசாலை கழிவறையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாணவியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்,
சுமார் 9 மாதங்களுக்கு முன்பு மாணவி அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், அதனால் கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது.
அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், குறித்த சம்பவத்திற்கு காரணமான மர்மநபர் குறித்து எதுவிதமான தகவல்களும் தெரியவரவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவியும், குழந்தையும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி முழுமையாக குணமடைந்த பிறகு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுமி கர்ப்பமானது குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்க தவறியதற்காக பாடசாலை முதல்வர், செவிலியர், விடுதி வார்டன் மற்றும் மாணவியின் சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு -- வங்கிகள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை....
வங்கிக் கணக்குகள் தொடர்பில் சந்தேகத்திற்கு இடமான இணைப்புக்களை அழுத்த வேண்டாம் என்று வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
மோசடியாளர்கள், வங்கிப் பயனர்களை தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைத் திருட வடிவமைக்கப்பட்ட போலி வங்கி வலைத்தளங்களுக்கு வழிநடத்துகிறார்கள்.
மோசடியான மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் மோசடி இணைப்புகளைப் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி போலி வலைத்தளங்ககுக்கு அவர்களை உள்ளீர்க்கின்றார்கள்.
இந்த தளங்கள் பெரும்பாலும் அதிகாரப்பூர்வ வங்கிகளின் இணையதளங்களை பிரதிபலிக்கும் வகையில் மாற்றப்பட்ட எழுத்துக்கள் அல்லது அதனை ஒத்த பெயர்களை பயன்படுத்துகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும், அதிகாரப்பூர்வ வலைத்தள முகவரிகளை நேரடியாக உலாவிகளில் தட்டச்சு செய்யவும், உள்நுழைவு விபரங்களை உள்ளிடுவதற்கு முன்பு URLகளை கவனமாகச் சரிபார்க்குமாறு வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயல்பாடு தொடர்பிலும் உடனடியாகப் முறைப்பாடளிக்குமாறு வங்கிகள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளன.
நாட்டில் அரியவகை நுளம்பினம் கண்டுபிடிப்பு...
இலங்கையில் முதன்முறையாக அரிய வகை நுளம்பினம் ஒன்றை உள்ளூர் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.
இந்த இனம் Culex (Lophoceraomyia) cinctellus ஆகும்.
இந்த கண்டுபிடிப்பு நுணுக்கமான உருவவியல் பகுப்பாய்வு மற்றும் மூலக்கூறு (DNA) சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இது இலங்கையின் நுளம்பு இனத்தில் இணைந்த சமீபத்திய நுளம்பு இனமாகும்.
ஆசிய பசுபிக் வெப்பமண்டல
குறித்த ஆராய்ச்சிக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் விலங்கியல் துறையின் வைத்தியர் ஆர். எம். டி. பி. தாரக ரணதுங்க தலைமை தாங்கியுள்ளார்.
இது கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI), வயம்ப பல்கலைக்கழகம் மற்றும் ருஹுன பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் வல்லுநர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு ஆசிய பசுபிக் வெப்பமண்டல மருத்துவ இதழிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
"இலங்கையில் நுளம்பு ஆராய்ச்சியில் இது ஒரு மைல்கல்" என்று ஆய்வில் தொடர்புபட்ட பேராசிரியர் ரணதுங்க கூறியுள்ளார்.
இலங்கையில் இந்த நுளம்பின் கண்டுபிடிப்பு என்பது சூழலியல் மற்றும் நோய் பரப்புகை அதன் பங்கை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்பதாகும் என்று மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் Culex (Lophoceraomyia) cinctellus இனங்கள் இன்னும் நோயைப் பரப்புவதாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அதன் கண்டுபிடிப்பு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் பாரவா வைரஸ் ஒட்டுண்ணிகள் மற்றும் ஆர்போ வைரஸ்கள் பரவுவதில் அதே துணை இனத்தைச் சேர்ந்த குலெக்ஸ் இனங்கள் ஈடுபட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தின் பாதுரா கொட பகுதியில் அக்டோபர் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை ஏழு மாத காலப்பகுதியில் இந்த நுளம்பு தொடர்பான ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை.... - !
No comments