40 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும் - பிமல் தெரிவிப்பு........ - !

 40ஆண்டுகளுக்கு முன்பே  செய்திருக்க வேண்டும் - பிமல் தெரிவிப்பு........ - !





40 ஆண்டுகளுக்கு முன்பே  செய்திருக்க வேண்டும் - பிமல் தெரிவிப்பு........ - !




 

40 ஆண்டுகளுக்கு முன்பே  செய்திருக்க வேண்டும் - பிமல் தெரிவிப்பு........ - !



40 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய ஒருவர், இப்போது எங்கள் அரசாங்கத்தின் கீழ் மட்டுமே விசாரிக்கப்படுகிறார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 


யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


கடந்த காலங்களில் பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை, படுகொலைகள் செய்யப்பட்டமை, தமிழர்களின் நூலகம் எரிக்கப்பட்டமை, தமிழர்களுக்கு எதிரான கலவரங்களுக்கு காரணமான ஒருவரை கைது செய்திருப்பது தவறு என சுமந்திரன் கூறுகிறார்.


அவர் ரணிலுடன் நெருக்கமானவர், சிலவேளைகளில் ரணிலின் வீட்டில் இருந்து கூட அந்த கருத்தை சொல்லி இருக்கலாம்.


1980களின் முற்பகுதியில் நடந்த முக்கிய சம்பவங்கள், 1981ல் யாழ்ப்பாண நூலகம் எரிப்பு மற்றும் ஜூலை 1983 கலவரம் உள்ளிட்டவற்றின் போது அமைச்சரவையில் ரணில் விக்கிரமசிங்க வகித்த பங்கிற்கு அவர் பொறுப்புக்கூற வேண்டியிருந்தது என்று அமைச்சர் கூறினார்.


1987 மற்றும் 1990 க்கு இடையில், அவரது அரசாங்கத்தின் கீழ் 60,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர் படலந்த சித்திரவதை கூடம் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார், இதற்காக சட்டமா அதிபர் மூலம் இன்னும் விசாரணைகள் நடந்து வருகின்றன. இதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை," என்று அமைச்சர் மேலும் கூறினார்.


2015 ஆம் ஆண்டு பிணைமுறி மோசடியில் ரணில் விக்ரமசிங்கவின் தொடர்பு தெளிவாகத் தெரிந்தாலும், அந்த வழக்கிலும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.


கறுப்பு ஜுலைக் கலவரம், யாழ்ப்பாண நூலக எரிப்பு, படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்குப் பொறுப்பு கூறவேண்டியவர். 


இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க மட்டும் அல்ல, எப்படியான நபரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டே செயற்பட வேண்டும் என்றும் இந்த விடயத்தில் எவரும் விதி விலக்கல்ல என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



திரையரங்குகளில் அதிரடி சோதனை 



கொழும்பில் உள்ள மூன்று திரையகங்களின் சிற்றுண்டிச்சாலைகளில் நுகர்வோர் அதிகார சபையினர் சோதனைகளை நடத்தியுள்ளனர்.


நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமான விலையில் பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த முறைப்பாடுகளை தொடர்ந்தே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.


இதன்போது, அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமான விலையில் பொருட்களை விற்க வேண்டாம் என்று அனைத்து வணிகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.


இதேவேளை இதுபோன்ற முறைப்பாடுகள் இருக்குமானால், அலுவலக நேரங்களில் நுகர்வோர் அதிகாரசபையின் 1977 அவசர எண்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு அதிகாரசபை கோரியுள்ளது.



மருத்துவர்கள் நாட்டிலிருந்து வெளியேறும் நிலை - எச்சரிக்கும் அதிகாரிகள்



இலங்கையின் சுகாதாரத் துறையில் கடுமையான நெருக்கடி ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  எச்சரித்துள்ளது.


செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அதன் செயலாளர் மருத்துவர் பிரபாத் சுகததாச, 


பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக 2,500க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.


மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வெளியேறுவது மருத்துவமனைகளை கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 


சுகாதார அமைச்சின் "குறுகிய பார்வை மற்றும் திறமையற்ற கொள்கைகள்" நிலைமையை மோசமாக்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பொருளாதார நீதி, நியாயமான சிகிச்சை மற்றும் தொழில்முறை பாதுகாப்பு மூலம் மருத்துவர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான பலமுறை முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


இருந்தபோதிலும், அமைச்சு ஒரு நிரந்தர பொறிமுறையை செயல்படுத்தத் தவறிவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அரசாங்க சுகாதார அமைப்பில் இருக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்ட சூழலை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துவதாக மருத்துவர் பிரபாத் சுகததாச குறிப்பிட்டார்.



இளைஞன் துப்பாக்கிச் சூட்டில் பலி; கொழும்பில்  சம்பவம்



கொழும்பு - பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில்  24/08/2025 அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 


இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


கல்கிஸ்ஸையை சேர்ந்த 25 வயதான கிஹான் துலான் பெரேரா என்பவரே சம்பத்தில் உயிரிழந்தார். 


இந்த சம்பவத்தில் மற்றொரு நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


குறித்த இளைஞன் உள்ளிட்ட 09 பேர் பொரலஸ்கமுவ பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீதியில் நடந்து சென்றபோது, ​​


முச்சக்கர வண்டியில் பிரவேசித்த ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 


இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், இரு தரப்பினரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.



முன்னாள் ஜனாதிபதியை பார்க்க வருவதை மட்டுப்படுத்தவும் 

     


உடல் நல குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தேசிய வைத்திசாலைக்கு வருகைதரும் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நலன்விரும்பிகள் வருகையை மட்டுப்படுத்துமாறு வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 


இது தொடர்பில் கருத்து வெளியிட்டு பிரதிப்பணிப்பாளர் வை்ததியர் ருக்ஷான் பெல்ல,


முன்னாள் ஜனாதிபதியை நேரில் சென்று பார்ப்பதற்காக பலர் வருவதால், அது அவரது உடல்நிலைக்கு சிலவேளைகளில் ஆபத்தை விளைவிக்கக்கூடுமெனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் அவரின் வயது காரணமாகவே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிப்பதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தேவையான அனைத்து விடயங்களையும் செய்யுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 




40 ஆண்டுகளுக்கு முன்பே  செய்திருக்க வேண்டும் - பிமல் தெரிவிப்பு........ - !


No comments

Theme images by fpm. Powered by Blogger.