மாணவர்கள் தொடர்பாக -- கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு..... - !
மாணவர்கள் தொடர்பாக -- கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு..... - !
மாணவர்கள் தொடர்பாக -- கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு..... - !
அனைத்துப் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு தினசரி உடல் தகுதித் திட்டங்களை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தலைமையில் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பில் இந்த முடிவு குறித்து கலந்துரையாடப்பட்டதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அமைச்சுக்கு கல்வி அமைச்சுக்கும் இடையில் கூட்டுக் குழுவை நிறுவுவதற்கும் கூட்டத்தில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டதாக பிரதி அமைச்சர் செனவிரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை விளையாட்டு சங்கங்கள் மற்றும் தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு இடையே இந்தக் குழு ஒருங்கிணைந்து செயல்படும், பயிற்சியாளர்களுக்கான வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுகளில் தொடர்ச்சியை உறுதி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு..
பொலிஸ் பரிசோதகர்கள் 51 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தரத்திற்கு பதவிஉயர்வு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எவ்.யு .வுட்லர் தெரிவித்துள்ளார்.
இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக வழக்கு...
மேலும் இரண்டு ஜனாதிபதிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஆட்கடத்தல் , ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அரச பணத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டுகளில் முன்னாள் வழக்கு தொடரப்பட உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகள் சட்ட உதவியை நாடியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தபால் ஊழியர்களுக்கும் ---அமைச்சருக்குமிடையே கலந்துரையாடல்....
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இடையே இன்று (24) சிறப்பு கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தபால் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம், கூட்டு தபால் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தம் இன்று 7ஆவது நாளாகவும் தொடர்கிறது.
வேலைநிறுத்தம் தொடங்கியதை அடுத்து, நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தபால் சேவைகளைப் பெற வந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இருப்பினும், இந்த விடயம் குறித்து இன்று அமைச்சருடன் விவாதிக்கத் தயாராக இருப்பதாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
இதற்கிடையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பல உறுப்பினர்கள் தற்போது சேவை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளதால், நாளைக்குள் (25) தபால் சேவைகளை வழக்கம் போல் மேற்கொள்ள முடியும் என்று இலங்கை தபால் சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்தார்.
மருந்துகளுக்கு பற்றாக்குறை - சுகாதார அமைச்சர்..
கடந்த அரசாங்கத்தில் முறையான விலைமனுக்கோரல் முறைக்கு வெளியே மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதால், நாட்டில் தற்போது சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில் ,
கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் இல்லாததன் விளைவாகவே சில மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் விடப்பட்டிருந்தால், மருந்துகள் சரியாக வந்திருக்கும். அடுத்த ஆண்டுக்கு விலைமனுக்கோரல் விட்டுள்ளோம்.
தற்போதைய மருந்து பற்றாக்குறையை சமாளிக்க, பிராந்திய கொள்முதல்களுக்காக வைத்தியசாலைகளுக்கு ரூ. 3,500 மில்லியன் ஒதுக்கியுள்ளோம்.
இரண்டாவது, அவ்வப்போது சில நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மருந்துகளை நன்கொடையாகப் பெறுகிறோம். சில நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிலையை அடைந்துவிட்டோம், எனவே இந்தப் பிரச்சினையை நாம் எதிர்கொள்ள முடியும்." என்று கூறியுள்ளார்.
இந்தோனேசிய தூதுவர் பாராட்டு
இந்தோனேசியாவின் இலங்கைக்கான தூதுவர் திவி குஸ்டினா டோபிங் ( Dewi Gustina Tobing ) கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பண்ணில இடையிலான சந்திப்பு அண்மையில் பத்தரமுல்லை, செத்சிரிபாயவில் அமைந்துள்ள அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.
அபிவிருத்தி இலக்கை வெற்றி கொள்வதற்கான அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை மற்றும் இலங்கையில் வறுமை ஒழிப்பிற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பாகப் பாராட்டிய தூதுவர் எதிர்காலத்தில் தொடர்ந்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சுட்டிக்காட்டினார்.
அங்கு அமைச்சர், கலாச்சாரம், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக இலங்கை இந்தோனேசியா இடையே காணப்படும் ராஜதந்திர தொடர்புகளின் முக்கியத்துவம் மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளப்படும் வேலைத்திட்டம் குறித்து தூதுவருக்குத் தெளிவு படுத்தினார்.
இந்தோனேசியா நாட்டின் 80வது சுதந்திர நிகழ்வுகளுக்காக இலங்கையின் இந்தோனேசியா கவுன்சிலர் அலுவலகம் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்கு அமைச்சருக்கு இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்தோனேசிய தூதுவராலயத்தின் அரசியல் இணைப்பாளர் Laial K. Unniarti வும் பங்கேற்றார்.
மாணவர்கள் தொடர்பாக -- கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு..... - !
No comments