நாடளாவிய ரீதியில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு..... - !
நாடளாவிய ரீதியில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு..... - !
நாடளாவிய ரீதியில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு..... - !
நாடாளாவிய ரீதியில் 39,267 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மொழி மீதான விவாதங்களின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் கடந்த 2023.01.17 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து நீதிமன்றால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட் டிருந்த நிலையில் அதற்கான போட்டிப் பரீட்சை இடைநிறுத்தப்பட்டு தற்போது வரை பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை.
நாடளாவிய ரீதியில் 39,267 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றது. கல்விச் சுற்றறிக்கையின்படி 2604 வெற்றிடங்கள் அகற்றப்பட்டுள்ளன.
2022ஆம் ஆண்டின் டிப்ளோமா மாகாண பாடசாலைகளுக்கு கடந்த 2025.05.02 ஆம் திகதியிலிருந்து நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் பாடசாலைகளுக்கு 345 நியமனங்களும் தேசிய பாடசாலைகளுக்கு 968 நியமனங்களும் ஆங்கில பாடசாலைகளுக்கு 381 நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மாகாணங்கள் உள்ளிட்ட அனைத்து நியமனங்களும் சிங்களப் பாடசாலைகளில் – 2281 நியமனங்களும் தமிழ் மொழி பாடசாலைகளில் 1401 நியமனங்களும் ஆங்கில மொழி பாடசாலைகளுக்கு 679 நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன என பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் விசேட சோதனை
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 907 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனைகளின் போது குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பல்வேறு குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 343 பேரும் இந்த சோதனை நடவடிக்கையின் போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைக்காக பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை உறுப்பினர்கள் உட்பட 6,129இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பங்கேற்றுள்ளனர்.
சோதனை நடவடிக்கையின் போது, 27,388 பேர் சோதனை செய்யப்பட்டனர். மேலும் 7,509 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 9,758 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த சோதனை நடவடிக்கையின் போது இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 58 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதோடு, கவனக் குறைவாக வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து குற்றச்சாட்டுக்களின் கீழ் 2,992 நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், பூஸ்ஸ சிறைச்சாலையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது, 11 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதற்கமைய, நேற்றைய (8) நாளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 1 கிலோ 547 கிராம் ஹெரோயின், 726 கிராம் 107 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டன.
நாட்டில் புற்றுநோய் வேகமாக அதிகரிப்பு....
நாட்டில் நுரையீரல் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாக வெலிசறை தேசிய மார்பு வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் 2,000 - 3,000 நுரையீரல் நோயாளிகள் பதிவாவதாகக் கூறினர்.
நிகழ்வில் பேசிய சுவாச நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் சமன் இத்தல்மல்கொட, நுரையீரல் புற்றுநோய் ஆண்களிடையே இரண்டாவது மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது என தெரிவித்தார்.
மேலும் கருத்து வௌியிட்ட வைத்திய நிபுணர்,
"தற்போது, இலங்கையில் ஆண்களிடையே நுரையீரல் புற்றுநோய் இரண்டாவது மிகவும் பொதுவான புற்றுநோயாகும்.
அத்துடன் 2021 ஆம் ஆண்டின் தரவுகளைக் கருத்தில் கொண்டால், நுரையீரல் புற்றுநோய் அவர்களின் முதல் 10 புற்றுநோய்களில் ஒன்றாகும்.
இலங்கையில் கடந்த 5-10 ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்பு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடமும் பதிவாகியுள்ளது.
இந்த நுரையீரல் புற்றுநோய்க்கு புகைபிடித்தல் ஒரு முக்கிய காரணியாகும்.
மேலும், தற்போதைய ஆய்வு அறிக்கைகளின்படி, ஒருபோதும் புகைபிடிக்காதவர்களும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறிந்துள்ளோம்.
குறிப்பாக, புகைபிடிப்பதில் நேரடியாக ஈடுபடாத பெண்களும் நுரையீரல் புற்றுநோயின் அதிகரிப்பைக் காண்கிறார்கள்.
இது நமது காற்றில் உள்ள காற்று மாசுபாட்டிற்கும் நமது வீடுகளில் உள்ள காற்றுக்கும் நேரடித் தொடர்பைக் கொண்டிருக்கலாம்.
ஆண்டுதோறும் பதிவாகும் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கையை 2021 முதல் ஆம் ஆண்டு முதலான தரவுகளை கருத்தில் கொண்டால், ஆண்டுதோறும் 2,000-3,000 புதிய புற்றுநோயாளர்கள் பதிவாகின்றன." என்றார்.
இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய நிபுணர் எஷாந்த் பெரேரா, இந்த நோயின் அறிகுறிகளை குறைத்து மதிப்பிட முடியாது என்று கூறினார்.
"மார்பகப் புற்றுநோயைப் பற்றி பொதுமக்களுக்கு எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? பல முக்கியமான அறிகுறிகள் உள்ளன.
சுவாச நோயாளிகளிடம் காணப்படும் இருமல். குறிப்பாக இருமல் நீண்ட நேரம் நீடித்தால், இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால், அல்லது அடிக்கடி வந்தால், அது மிக முக்கியமான அறிகுறியாகும்.
நாம் அதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அத்துடன் இருமல் சரியாகி அடுத்த மாதம் மீண்டும் வந்தால், அது பல சுவாச நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.
இன்னொரு விடயம் என்னவென்றால், இருமும் போது இரத்தம் வருதல், சிலருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படல் போன்றவை மார்பக புற்றுநோயால் ஏற்படலாம்.
அத்துடன் மார்பகப் புற்றுநோய் அமைந்துள்ள பகுதியில் இருந்து மார்பு வலி பரவத் தொடங்கும் போது, பல்வேறு இடங்களில் வலிமிகுந்த நிலைமைகள் ஏற்படலாம்.
மேலும், சில நோயாளிகளுக்கு நீண்ட காலமாக இருக்கும் காய்ச்சல், பசியின்மை மற்றும் அசாதாரண எடை இழப்பு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
இது உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவக்கூடும்.
அது எங்கு பரவுகிறது மற்றும் நிலைபெறுகிறது என்பதைப் பொறுத்து ஏற்படும் அறிகுறிகள் மாறுபடும். "எனவே இந்த மார்பகப் புற்றுநோயைப் பற்றி நாம் அறிந்திருப்பது மிகவும் முக்கியம்." என்றார்.
செய்மதி ஒன்று விண்ணில் செலுத்தப்பட்டது.. இப்போது அந்த ‘ராக்கெட் மனிதர்’ எங்கே?
பொலன்னறுவையில் இன்று (ஆகஸ்ட் 09, 2025) நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில், அமைச்சர் வசந்த சமரசிங்க, சர்ச்சைக்குரிய சுப்ரீம்சாட் விவகாரம் குறித்து மீண்டும் கருத்து தெரிவித்தார். முக்கியமான அபிவிருத்தி விவாதங்கள் நடைபெற வேண்டிய இத்தருணத்தில் இவ்விவகாரம் மீண்டும் எழுப்பப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“இந்த நிறுவனம் 2012 மே மாதம் நிறுவப்பட்டது. ஆனால், அதே ஆண்டு நவம்பரில் 12,000 மில்லியன் ரூபாய் முதலீட்டில் செய்மதி ஒன்று விண்ணில் செலுத்தப்பட்டது,” என்று அமைச்சர் கூறினார். மேலும், 2014/15 நிதியாண்டு நிதி அறிக்கைகளில் இந்தச் செய்மதியின் கணக்குகள் பிரதிபலிக்கப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நாட்டின் செய்மதி விண்வெளி உரிமையை முறையான டெண்டர் செயல்முறை இன்றி இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது எவ்வாறு எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
“இப்போது அந்த ‘ராக்கெட் மனிதர்’ எங்கே இருக்கிறார்? அவர் இன்னும் இருக்கிறாரா? இலங்கையின் முதல் விண்வெளி விஞ்ஞானி என்று அவரை அழைத்தார்கள். ஆனால், அவருக்கு ராக்கெட்டுகள் பற்றி எதுவும் தெரியாது, தனக்குச் சொல்லப்பட்டவற்றை மட்டுமே அவர் மீண்டும் கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன,” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“அரசாங்கம் பணிகளைத் தொடங்கும்போது, இதுபோன்ற விவகாரங்கள் பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக எழுப்பப்படுகின்றன,” என்று அவர் வலியுறுத்தினார். தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சமரசிங்க மீண்டும் நினைவூட்டினார்.
வெடித்து சிதறிய வெடிப்பொருட்கள் - ஆறு இராணுவத்தினர் உயிரிழப்பு
லெபனானில் ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறியதில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.
வெடி பொருட்களைஅகற்றும் பணியில் இராணுவ வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக வெடித்து சிதறி உள்ளது.
இதன் போது பலர் காயமடைந்துள்ளனையும் குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு..... - !
No comments