பூர்த்தி செய்யாதவர்களுக்கு இனி ஆசிரியர் நியமனம் இல்லை........ - !
பூர்த்தி செய்யாதவர்களுக்கு இனி ஆசிரியர் நியமனம் இல்லை........ - !
பூர்த்தி செய்யாதவர்களுக்கு இனி ஆசிரியர் நியமனம் இல்லை........ - !
தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யாது கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற, நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வி இளங்கலைப் பட்டங்களின் தரத்தை மதிப்பிடுவதற்கு ஒரு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்குத் தேசிய தரநிலைகளுக்கு இணங்கும் பட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு --- நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி...
அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொழும்பு துறைமுக நகரத்தில் அமையப்பெற்றுள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட 70 ரூபாய் குடிநீர் போத்தலை 200 ரூபாய்க்கு நுகர்வோருக்குக் குறித்த நிறுவனம் விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் ரூபாய் 500,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம்..
இங்கிலாந்து கிரிக்கெட் அணி செப்டம்பர் 2026ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் விளையாட உள்ளதை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
முகாமில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் ; மேலுமொரு இராணுவ அதிகாரி கைது
முல்லைத்தீவு, முத்துதையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்று உயிரிந்த இளைஞனின் சம்பவம் தொடர்பில் மேலுமொரு இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இடதுகரை, ஜீவநகர் பகுதியிலுள்ள சிங்கப்படைப்பிரிவின் 12வது பற்றாலியனின் படைப்பிரிவை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
முகாமினுள் புகுந்த இளைஞர்களை தாக்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 3 சிப்பாய்களும் இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அவர்களுடன், இன்று கைது செய்யப்பட்ட 4 சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முகாமினுள் அத்துமீறி புகுந்திருந்த நிலையில் இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்பட்ட நிலையில், தப்பியோடி, குளத்தில் மூழ்கியதாலேயே மரணித்ததாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வடக்கு - கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்
மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் அனைத்துக் கட்சிகளும் அவ்விடயத்தில் இணைந்து செயற்படுவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை
நீண்ட காலமாக தாமதமாகி வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை மீண்டும் தொடங்குவதற்காக, இலங்கை சீன ஏற்றுமதி -இறக்குமதி வங்கியிடமிருந்து (EXIM) 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான சீன யுவானை கடன் வாங்க உள்ளது.
இதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த வாரம் அமைச்சரவை ஒப்புதலைப் பெற்றுள்ளார்.
மேலும் திட்டத்தின் முதல் பகுதியை முடிக்க இலங்கை அரசின் நிதியிலிருந்து கூடுதலாக 438 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தில் 36வீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது.
டொலரிலிருந்து யுவானுக்கு மாற்றப்பட்ட கடன், இலங்கையின் அமெரிக்க டொலர் இருப்புக்களைக் குறைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
கம்பத்தில் ஏறிய நபரால் பதற்றம்
வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவியை மீட்டு வரவழைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, ஒரு நபர் மின் கம்பத்தின் மேல் ஏறியதால் கறுவாத்தோட்ட பொலிஸ் பிரிவிலுள்ள அந்த இடத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் வரவழைக்கப்பட்டு, கூட்டு நடவடிக்கையின் மூலம் அந்த நபரை பாதுகாப்பாக கீழே இறக்கினர். பல மணி நேரத்திற்குப் பிறகு, அவர் காயமின்றி மீட்கப்பட்டார்.
சம்பவத்தின் போது ஊடகங்களுக்குப் பேசிய அந்த நபர், தனது மூன்று குழந்தைகளும் தங்கள் தாய் தங்கள் முன்பாக இல்லாமல் சிரமப்படுவதாகவும், அவரை இலங்கைக்குத் திரும்புவதற்கு வசதி செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார் என்றும் விளக்கினார்.
சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூர்த்தி செய்யாதவர்களுக்கு இனி ஆசிரியர் நியமனம் இல்லை........ - !
No comments