கல்வியை கைவிடாமல் இருப்பதை உறுதி செய்ய... - !

கல்வியை கைவிடாமல் இருப்பதை உறுதி செய்... - !





கல்வியை கைவிடாமல் இருப்பதை உறுதி செய்ய... - !




 

கல்வியை கைவிடாமல் இருப்பதை உறுதி செய்... - !



பாடசாலைக் கல்வியை நிறைவு செய்யும் வரை, ஒரு பிள்ளை கூட கல்வியை கைவிடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் ஜனாதிபதி  பணிப்புரை விடுத்துள்ளார்.  


மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 


மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை மகளிர் பணியகம், தேசிய பெண்கள் குழு, முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம், நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகிய நிறுவனங்களினால் 2025 வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து தனித்தனியாக ஆராயப்பட்டது. 


குறிப்பிட்ட நிதியாண்டிற்குள் இந்த வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளை உரிய திட்டங்களுக்கு முறையாகப் பயன்படுத்தி, அவற்றின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் வகிபாகத்தையும் வலியுறுத்தியதோடு, அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். 


கிராமிய வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட, பெண்களை வலுவூட்டும் வேலைத் திட்டங்களைத் தயாரிக்குமாறு இதன்போது ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள், மீன்பிடி, விவசாயம் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட அனைத்து அமைச்சுகளின் நோக்கமும் கிராமிய மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 


சிறுவர் பராமரிப்பு மையங்களில் உள்ள பிள்ளைகள் மற்றும் பாடசாலையை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்யும் வரை, ஒரு பிள்ளை கூட கல்வியை கைவிடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்தார். 


சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்களுக்கு இடம்பெறும் அழுத்தங்கள் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க பரந்த பொறிமுறையை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.



ஊடகர்களை அச்சுறுத்துவதை நிறுத்த கோரி கொழும்பில் போராட்டம்



வடக்கு - கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்த கோரி  கொழும்பில்  நாளை  போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. 


ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.


நாடாளுமன்றச் சுற்று வட்டத்தில் நாளை காலை 9 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான க.குமணனைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கடந்த 17ஆம் திகதி அளம்பில் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து சுமார் 7 மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர். 


அத்துடன் மேலதிக விசாரணைகளுக்கு அழைக்கப்படும் போது, முன்னிலையாக வேண்டும் எனவும், விசாரணை விடயங்கள் தொடர்பில் வெளியில் கூறக் கூடாது எனவும் கடுமையாக அறிவுறுத்தியே குமணன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஆண்டகை மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினரை சந்தித்த ஜனாதிபதி



கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் நேற்று  பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.


வருடத்திற்கு மூன்று முறை நடைபெறும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் குறித்து கர்தினால் ஆண்டகை, ஜனாதிபதிக்கு விளக்கினார்.


மேலும்,  கத்தோலிக்க சபையில் எழுப்பப்பட்ட கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.


இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரல்ட் அந்தோணி பெரேரா மற்றும் பேரவையின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



 தேவையற்ற பொருட்களை அகற்ற விசேட திட்டம்



அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்ற விசேட திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


"செயிரி வாரம்" என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 04 ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 


அரச நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் சுதந்திரமாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கு ஏற்ற சுத்தமான, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் ஆபத்தற்ற சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 


க்ளீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்படவுள்ளதுடன், தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களை அடையாளம் கண்டு தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவது இதன்போது இடம்பெறவுள்ளது. 


இந்த வாரத்தில் அரசு நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களின் தொகுப்பையும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.


வானில் நிகழ்ந்த அதிசயம்; வைரலாகும் காணொளி



மேற்கு ஜப்பானில்  பிரகாசமான ஒளியுடன் கூடிய தீப்பந்து ஒன்று வானிலிருந்து வீழ்ந்ததாக ஜப்பானியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நேற்றுமுன்தினம் மாலை இச் சம்பவம் இடம்பெற்றது. 


இது ஒரு பிரகாசமான விண்கல் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 


அவை தீப்பந்து விண்கற்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.


ககோஷிமா மற்றும் மியாசாகி பகுதிகளில் உள்ள மக்கள் சமூக ஊடகங்களில் இந்த பிரகாசமான விண்கல் வீழ்ந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர். 



கல்வியை கைவிடாமல் இருப்பதை உறுதி செய்... - !


No comments

Theme images by fpm. Powered by Blogger.