மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை........ - !
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை........ - !
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை........ - !
நாட்டின் சில பகுதிகளில் நாளை (20) முதல் வெப்பத்தின் அளவு, மனித உடலால் உணரப்படும் அளவிற்கு எச்சரிக்கை மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, கிழக்கு, வடமத்திய மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் வெப்பமான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் அறிவிப்பின் படி, நாளை (20) முதல் 10 மாவட்டங்களுக்கு வெப்பத்தின் அளவு குறித்து ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண், குறித்த மாவட்டங்களில் சில இடங்களில் ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்தும் மிகுந்த அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.
எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு.
நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க முடியாமைக்கு கடந்தகால அரசாங்கங்களே காரணம் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுடன் கடந்த அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் ஓயில் நிறுவனம், ஆர்.எம். பார்க் தனியார் நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களால், எரிபொருள் விலையைக் குறைத்தால், அந்த நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கத்துக்கு விடுத்துள்ள அரசாங்கத்தின் அறிவிப்பு..
கைரேகை வருகைப் பதிவு மற்றும் கூடுதல் நேர ஊதியம் தொடர்பான அரசாங்க முடிவுகளை தபால் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமைச்சரவை பேச்சாளர் நாலிந்த ஜயதிஸ்ஸ இன்று (19) தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜயதிஸ்ஸ, குறுகிய கால வேலைநிறுத்தங்கள் கூட தபால் துறைக்கு நிதி இழப்பை ஏற்படுத்துவதாகவும், நீண்டகால வேலைநிறுத்தங்கள் கருவூலத்திற்கு பாரமாக அமைந்து, எதிர்கால சம்பளம் மற்றும் கூடுதல் நேர ஊதியங்களை பாதிக்கலாம் எனவும் எச்சரித்தார்.
தபால் தொழிற்சங்கங்கள் முன்வைத்த 19 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வு கண்டுவிட்டதாக ஜயதிஸ்ஸ கூறினார்.
“எனினும், கைரேகை பதிவு மற்றும் கூடுதல் நேர ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் ஏற்க முடியாதவை. அவை பரிசீலிக்கப்பட மாட்டாது. கைரேகை பதிவு முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில குழுக்கள் பல்வேறு அரசியல் தொடர்புகளைக் கொண்டுள்ளன. இந்த முறையை ஏற்காதவர்கள் வேறு வேலைவாய்ப்பை தேடிக்கொள்ளலாம்,” என்று அவர் கடுமையாக தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) முதல் தபால் ஊழியர்கள் 19 கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கூடுதல் நேர ஊதிய மாற்றங்கள் மற்றும் கைரேகை வருகைப் பதிவு முறையை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளடங்கும். இந்த வேலைநிறுத்தம் நாடு முழுவதும் முக்கிய சேவைகளை பாதித்துள்ளது.
தபால் மாஸ்டர் ஜெனரல் ருவான் சத்குமார, கைரேகை முறையை நியாயப்படுத்தி, தணிக்கைகளில் வருகைப் பதிவு இன்றி சம்பளம் மற்றும் கூடுதல் நேர ஊதியம் கோரப்பட்டதாக வெளிப்படுத்தினார். தொழிற்சங்கங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த வேலைநிறுத்தம் நியாயமற்றது என அவர் விமர்சித்தார்.
தீர்வுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை, மேலும் ஜயதிஸ்ஸவின் பேச்சுவார்த்தை முன்மொழிவுக்கு தொழிற்சங்கங்கள் இதுவரை பதிலளிக்கவில்லை.
உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த ---அமைச்சரவை அனுமதி....
விவசாயிகளுக்கான உரமானியத்தை வழங்குவதற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதியும், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கம் விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்கும் போது அந்தந்த விவசாயிகளுக்கு குறித்த மானியம் சரியான நேரத்தில் கிடைக்கின்றமையையும், அந்த நிதியுதவியை தமது விவசாய நடவடிக்கைகளுக்கான உரத்தேவைக்காக முழுமையாகப் பயன்படுத்துகின்றமையையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், இந்த பின்னூட்டல் செயற்பாட்டுக்கு வசதியளித்து விவசாயிகளுக்கு உர விநியோகத்தை மிகவும் முறைசார்ந்த வகையிலும், வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்காக கியூ.ஆர் குறியீடு அல்லது பொருத்தமான முறையொன்றைப் பயன்படுத்த வேண்டியமை கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய, உரமானிய வேலைத்திட்டத்திற்கு தகைமை பெறுகின்ற அனைத்து விவசாயிகளும் விவசாய விடயதான அமைச்சின் கீழ் பிரதேச செயலாளர்கள் மூலம் அடையாளங் காண்பதற்கும், அவ்வாறு தகைமை பெறுகின்ற விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்குவதற்கும் கியூ.ஆர் முறைமை அல்லது பொருத்தமான டிஜிட்டல் பொறிமுறையை உருவாக்குவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு...
தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 10,000 இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க அந்த நாட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எல்லை மோதலுக்குப் பிறகு கம்போடிய தொழிலாளர்கள் அவர்களது சொந்த நாட்டிற்கு திரும்புவதால், தாய்லாந்தில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், தாய்லாந்தில் வயதானவர்களின் தொகை அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சியடையும் தொழிலாளர் எண்ணிக்கை காரணமாக சுமார் 3 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை தாய்லாந்து நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் வேலை வாய்ப்புகளை வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த 30,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டிய தாய்லாந்து அதிகாரிகள், முதல் கட்டமாக அவர்களில் 10,000 தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை........ - !
No comments