ரணிலுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு... - !

ரணிலுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு... - !





ரணிலுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு... - !




 


ரணிலுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு... - !



செவ்வாய் (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க.


நீதிமன்றத்தில் மின்சாரம் திரும்பியது



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்ற அறையில் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.


மின்சாரம் தடைபட்டதால், வழக்கில் உத்தரவு வழங்குவது மேலும் 30 நிமிடங்கள் தாமதமானது.



கட்டுநாயக்க விமான நிலையத்தில் குவிந்து கிடக்கும் பொதிகள்



தபால் ஊழியர்களது வேலை நிறுத்தப் போராட்டத்தினால், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த ஏராளமான கடிதங்கள் மற்றும் பொதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கிக்கிடப்பதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.


அதன்படி, வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட 5000 கிலோகிராம் கடிதங்கள், பார்சல்கள் மற்றும் ஆவணங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சரக்குப் பகுதியில் தேங்கியுள்ளதாக தபால் மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.


நேற்று மூன்றாவது நாளாக தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.


மேலும், ரயில் நிலையங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில் பெருந்தொகையான கடிதங்கள், பார்சல்கள் மற்றும் பொருட்கள் தேங்கி கிடப்பதாகவும், அவை இன்னும் எண்ணப்படவில்லை எனவும் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.


இந்த வேலைநிறுத்தம் காரணமாக, தபால் அலுவலகங்களில் பொது சேவை நடவடிக்கைகள் மற்றும் அனைத்து கடித விநியோக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.


நேற்று தபால் சேவைகளை பெற வந்த பொதுமக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் வீடு திரும்ப வேண்டியேற்பட்டுள்ளது.


தபால் ஊழியர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் போனதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.


இதேவேளை, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.பி.சி. நிரோஷனா, தபால் ஊழியர்களால் தொடங்கப்பட்ட தொடர்ச்சியான வேலைநிறுத்தம் தொடரும் என தெரிவித்துள்ளார்.



அழைப்புக்கள் உங்களுக்கும் வரலாம் - மக்களே உக்ஷார்!



பொது மக்களுக்கு , பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிகாரி என கூறி, பணம் கோரும் போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.


 வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து அவர்களின் வர்த்தகத்தில் தவறுகள் இருப்பதாக கூறி, அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க, பண்ம் கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தான் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்யுமாறு கோரும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.


இவ்வாறான போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் 1977 அல்லது 0771088922 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. 



 விமான நிலையத்தில் தீ வைத்த பயணி



இத்தாலியின் மிலன் நகரில் மால்பென்சா விமான நிலையத்தில் உடைமைகளை சோதனை செய்வதற்காக பயணிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். 


அப்பொழுது விமான நிலைய ஊழியருக்கும் பயணிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 


இதனால் கோபமடைந்த பயணி, அவர் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து கண்ணாடியை உடைத்து, அங்கிருந்த கவுண்டருக்கும் தீ வைத்துள்ளார். 


தகவலறிருந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தீயை அணைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இச் சம்பவத்தில் யாருக்கும் எதுவித காயமும் ஏற்படவில்லை. 


இருப்பினும் பயணியின் இச் செயலால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது



பயங்கரவாத தடைச் சட்டம் இரத்துச்செய்யப்படும் 

     

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டம்பர் மாத இறுதிக்குள் இரத்துச் செய்யப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.


இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.


பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பதற்கான வர்த்தமானி அடுத்த மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.


பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவின் அறிக்கை அடுத்த மாத தொடக்கத்தில் கிடைக்குமென்றும் அவர் கூறினார்.


நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக இயற்றப்படும் என்றார்.




ரணிலுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு... - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.