முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை!
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்றைய தினம் பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தில் தீ வைத்த பயணி
இத்தாலியின் மிலன் நகரில் மால்பென்சா விமான நிலையத்தில் உடைமைகளை சோதனை செய்வதற்காக பயணிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது விமான நிலைய ஊழியருக்கும் பயணிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த பயணி, அவர் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து கண்ணாடியை உடைத்து, அங்கிருந்த கவுண்டருக்கும் தீ வைத்துள்ளார்.
தகவலறிருந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தீயை அணைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இச் சம்பவத்தில் யாருக்கும் எதுவித காயமும் ஏற்படவில்லை.
இருப்பினும் பயணியின் இச் செயலால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது
பயங்கரவாத தடைச் சட்டம் இரத்துச்செய்யப்படும் - விஜித ஹேரத்...
பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டம்பர் மாத இறுதிக்குள் இரத்துச் செய்யப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பதற்கான வர்த்தமானி அடுத்த மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவின் அறிக்கை அடுத்த மாத தொடக்கத்தில் கிடைக்குமென்றும் அவர் கூறினார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக இயற்றப்படும் என்றார்.
ரீலங்கன் முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணைக் குழுவின் விசேட அறிவிப்பு
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் கடந்த காலங்களில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்கு நிறுவப்பட்ட ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு, பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெற எதிர்பார்க்கிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2025 ஜூன் 30ஆம் திகதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, 2025 ஜூலை 01 ஆம் திகதி எடுக்கப்பட்ட இலக்கம் 25/1145/801/018 என்ற அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம், விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் கடந்த காலங்களில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு நிறுவப்பட்டது.
அதன்படி, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றின் ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற குழு எதிர்பார்க்கின்றது.
இது தொடர்பில் ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2025 செப்டெம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் psicairport@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி (Email) அல்லது 070-3307700 என்ற Whatsapp எண்ணுக்கு தமது கோரிக்கைகளை அனுப்பி, திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யுமாறு ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு கேட்டுக்கொள்கிறது.
கண்டியில் வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் நிர்மாணம்!
கண்டி மாவட்டத்தில் வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் 228 வீடுகளும், கடன் உதவித் திட்டத்தின் கீழ் 200 வீடுகளும் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றன.
இதற்காக 150 மில்லியன் ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளதாக வீடமைப்பு அதிகார சபையின் கண்டி மாவட்ட முகாமையாளர் அமல் பிரியந்த தெரிவித்தார்.
கண்டியில் உள்ள மத்திய மாகாண வீடமைப்பு நிர்மாணத்துறை திணைக்களத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
1986 ஆம் ஆண்டு முதல் சர்வதேச வீடமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதற்கமைய, இந்த வருடம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரம் வீடமைப்பு தினம் கொண்டாடப்படவுள்ளதாகவும் கண்டி மாவட்ட முகாமையாளர் தெரிவித்தார்.
அதற்கு இணையாகவே, கண்டி மாவட்டத்தில் வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த வீடமைப்பு உதவித்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள 228 வீடுகளில், 21 வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடன் உதவித்திட்டத்தின் கீழ் 200 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அதில் 147 வீடுகளின் நிர்மாணப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், வீடமைப்பு அதிகார சபையின் கண்டி மாவட்ட முகாமையாளர் அமல் பிரியந்த தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை!
No comments