பாடசாலைகள் மூடப்படுமா?..... - !
பாடசாலைகள் மூடப்படுமா?..... - !
பாடசாலைகள் மூடப்படுமா?..... - !
50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் மூடுவதற்கு கல்வி அமைச்சு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லையென கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு பாடசாலையின் சூழ்நிலைகளின் அடிப்படையில் தேவையான முடிவுகள் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு கல்வி வலயத்திலும் உள்ள பாடசாலைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு திட்டம் ஏற்கனவே நடந்து வருவதாக நலக கலுவேவா கூறியுள்ளார்.
இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட பாடசாலைகளைப் பராமரிக்கும் போது மட்டுமே மூடுவதற்கான பரிசீலனை மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
குறைந்த மாணவர் சேர்க்கை உள்ள பாடசாலைகளை மூடிவிட்டு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகின.
இதனை தொடர்ந்து, இலங்கை அதிபர்கள் சங்கம் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மாணவர்களை அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாற்றுவது நகர்ப்புற வகுப்பறைகளில் நெரிசலை அதிகரிக்கும் என்று அந்த சங்கம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 10,194 பாடசாலைகளில் மொத்தம் 1,486 பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே பயில்வதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.
வட மாகாணத்தில் இதுபோன்ற பாடசாலைகள் அதிக எண்ணிக்கையில் (275) உள்ளன, அதைத் தொடர்ந்து மத்திய மாகாணம் (240), சப்ரகமுவ மாகாணம் (230), ஊவா மாகாணம் (158), கிழக்கு மாகாணம் (141), வடமேற்கு மாகாணம் (133), தெற்கு மாகாணம் (125), வடமத்திய மாகாணம் (111) மற்றும் மேற்கு மாகாணம் (73) உள்ளன என்று தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய மருத்துவ குறிப்பு
காலை எழுந்தவுடன் ஒரு கப் வெந்தய நீர். - என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயம் உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
அந்தவகையில், காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் வெந்தய நீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
வெந்தய நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இரவில் தூங்கும் முன் தண்ணீரில் 1 ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் காலையில் வெந்தயத்தை தண்ணீருடன் சாப்பிடலாம்.
✅ கிடைக்கும் நன்மைகள்
வெந்தயத்தில் ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால் சரும பிரச்சினைகள் நீங்கி சருமத்திற்கு பளபளப்பைக் கொண்டுவரும்.
வெந்தத்தில் நார்சத்து உள்ளதால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீரைக் குடித்தால் எடையைக் கட்டுப்படுத்துகிறது.
அதேபோல், தினமும் வெந்தய நீரைக் குடித்து வர அமிலத்தன்மை பிரச்சனை நீங்கும்.
மேலும், முக்கியமாக வெந்தய நீரில் அமினோ அமிலம் உள்ளதால் உடலின் இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் வெந்தய நீரைக் குடித்தால், சளி மற்றும் இருமலில் இருந்து பெரும் நிவாரணம் கிடைக்கும்.
இலங்கை வங்கிகள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
வங்கிக் கணக்குகள் தொடர்பில் சந்தேகத்திற்கு இடமான இணைப்புக்களை அழுத்த வேண்டாம் என்று வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
மோசடியாளர்கள், வங்கிப் பயனர்களை தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைத் திருட வடிவமைக்கப்பட்ட போலி வங்கி வலைத்தளங்களுக்கு வழிநடத்துகிறார்கள்.
மோசடியான மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் மோசடி இணைப்புகளைப் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி போலி வலைத்தளங்ககுக்கு அவர்களை உள்ளீர்க்கின்றார்கள்.
இந்த தளங்கள் பெரும்பாலும் அதிகாரப்பூர்வ வங்கிகளின் இணையதளங்களை பிரதிபலிக்கும் வகையில் மாற்றப்பட்ட எழுத்துக்கள் அல்லது அதனை ஒத்த பெயர்களை பயன்படுத்துகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும், அதிகாரப்பூர்வ வலைத்தள முகவரிகளை நேரடியாக உலாவிகளில் தட்டச்சு செய்யவும், உள்நுழைவு விபரங்களை உள்ளிடுவதற்கு முன்பு URLகளை கவனமாகச் சரிபார்க்குமாறு வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயல்பாடு தொடர்பிலும் உடனடியாகப் முறைப்பாடளிக்குமாறு வங்கிகள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளன.
சிறுவனால் கர்ப்பமான நர்சிங் மாணவி: கருவை கலைத்ததால் விபரீதம்
19 வயதான யுவதிக்கும் சிறுவனுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இதனால், அந்த யுவதி கர்ப்பமானார். இந்த சம்பவம், திருத்தணியில் இடம்பெற்றுள்ளது.
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே உள்ள கொடிவலசா கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சண்முகப்பிரியா (19 வயது) டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான சிறுவன் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகியதால் சண்முகப்பிரியா கர்ப்பமானார்.
இது குறித்து ஆரம்பத்தில் சண்முகப்பிரியா பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்தார். இந்த நிலையில் அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள கிளினிக்கில் மாணவி சண்முகப்பிரியாவின் 5 மாத கருவை கலைத்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த அவருக்கு தொடர்ந்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் சண்முகப்பிரியாவை திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகப்பிரியா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருத்தணி மகளிர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு கருவை கலைத்த நர்சு மற்றும் உதவியாளர் ஆகிய 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியுடன் பழகிய உறவினரான சிறுவனிடமும் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் குறித்து அதிர்ச்சித் தகவல்
நாடு முழுவதும் சுமார் 14,834 குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (28) நடைபெற்ற மாவட்ட பல்துறை போதைப்பொருள் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நிகழ்ச்சியில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"குழந்தை உரிமைகள் மேம்பாட்டு அதிகாரிகள் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்காகப் பணியாற்றி வருகின்றனர்.
பொலிஸ் நிலையங்களால் அடையாளம் காணப்பட்டு எங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட பல குழந்தைகள் உள்ளனர். ஆனால், மிகப்பெரிய பிரச்சனை எல்லா இடங்களிலும் ஒருங்கிணைப்பு இல்லாததுதான். குறிப்பாக, போதைப்பொருள் தொடர்பான விவகாரங்களில், அதிகாரிகளால் படோவிட்ட மற்றும் பிற பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை.
குழந்தைகளை மீட்பது மட்டுமல்லாமல், குடும்பத்தை மையமாகக் கொண்ட பராமரிப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கி, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பரிந்துரைக்கிறேன்.
"இந்நிகழ்வில் பேசிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,
"பொலிஸ் கூறும் தகவல்களை யாரும் சென்று ஆராய்ந்து பார்ப்பதில்லை. அந்தக் கதையை நான் ஏற்கமாட்டேன். இந்த மக்கள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இதற்கு ஒரு சுழற்சி முறையிலான வேலைத்திட்டம் தேவை. இங்குதான் பாதாள உலகம் உருவாகிறது. 15 வயது சிறுவர்கள் கூட பாதாள உலகில் உள்ளனர்.
குழந்தைகள் பாடசாலைக்கு செல்லாதபோது, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அவர்களைக் கடத்துகின்றனர்.
நாட்டில் குழந்தைகளுக்காகப் பணியாற்றும் பல நிறுவனங்கள் உள்ளன. ஆனால், பிரச்சனையை அடையாளம் காண்பது மட்டும் போதாது. உரிய நடவடிக்கைகள் இல்லை. இதற்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனமும், நிதியும் தேவை. ஜனாதிபதியிடம் கோரினால், அவர் போதுமான நிதியை வழங்குவார்." என்றார்.
புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
புழக்கத்திற்கான நினைவு நாணயத்தாளாக இது வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த நாணயத்தாள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 5 ஆவது நினைவு நாணயத்தாள் ஆகும்.
தேசிய அபிவிருத்திக்கான அடித்தளமாக பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான மத்திய வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், ” சுபீட்சத்திற்கான ஸ்திரத்தன்மை ” என்ற என்ற ஆண்டு நிறைவு தொனிப்பொருளுக்கு ஏற்ப இந்த நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே.எம்.ஏ.என். தௌலகல, உதவி ஆளுநர் கே.ஜி.பி. சிறிகுமார, நாணயத் திணைக்களத்தின் ஆளுநர் பீ.டீ.ஆர். தயானந்த ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பாடசாலைகள் மூடப்படுமா?..... - !
No comments