உயர்தர பெறுபேறுகள் வெளியானது....!

 உயர்தர பெறுபேறுகள் வெளியானது....!





உயர்தர பெறுபேறுகள் வெளியானது....!




 



உயர்தர பெறுபேறுகள் வெளியானது....!




GIT Exam Results Released 2023 ,2024(2025)


கீழே உள்ள CHECK RESULTS என்பதை அழுத்தி முடிவுகளை பார்வையிடலாம்


CHECK RESULTS (CLICK HERE )

Exam Results Released – GIT Exam Results Released 2023 ,2024(2025)




காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான  தினம் இன்று அனுஷ்டிப்பு




காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 30ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 


உலகளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் 


அவர்களது உறவினர்களின் துயரம் தொடர்பில் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 


ஐக்கிய நாடுகள் சபையினால், 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. 


இலங்கையில் 1983 - 2009 வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது சுமார் 140,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.


இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ இதுவரை உறுதி செய்யப்படவில்லை. 


இவ்வாறான நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்களை மீட்பதற்காக அவர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.




 மக்களின் காணியை கோரிய விமானப்படை




முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் உள்ள 0.5 ஹெக்டயர் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை தமது தேவைக்காக விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரியிருந்தனர். 


இதற்கு, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஏற்கனவே படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகளைச் சுட்டிக்காட்டி, இக்கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 


அவரது எதிர்ப்பை அடுத்து, நேற்று (29) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விமானப்படையினருக்கு காணி வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டது.


ரவிகரன் தனது கருத்தில், “ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். 


இந்நிலையில், விமானப்படை மீண்டும் இக்காணிகளைக் கோருவது பொருத்தமற்றது. கேப்பாப்புலவில் இன்னும் 190 ஏக்கர் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. 


மக்கள் தொடர்ந்து போராட்டங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். 


யுத்தம் முடிந்து ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாகியும், விமானப்படையினர் மக்களின் காணிகளை அபகரித்து யாருடன் போர் செய்யப்போகின்றனர்? எனவே, இக்காணிகளை விமானப்படைக்கு வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது,” எனக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.


இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விமானப்படையினருக்கு காணி வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டது.





விதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்




பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 


அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் உட்பட புறநகர் பகுதிகளில் நேற்று (29) மாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 


இதன்போது மோட்டார் சைக்கிள் ஆவணம் காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியமை சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணித்தமை, அதிவேகமாக செலுத்தியமை, மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள், தலைக்கவசம் இன்றியும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இன்றி பயணித்தமை உள்ளிட்ட பொது போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உட்பட அதனை செலுத்தியவர்கள் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். 


இச்சோதனை நடவடிக்கையானது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர ஆலோசனையில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி நெறிப்படுத்தலில் அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் தலைமையில் இடம்பெற்றது. 


கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி நஸீர் உள்ளிட்ட பொலிஸார் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 


கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. 


மேலும் நேற்றைய தினம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் சுமார் 05 வீதி விபத்துக்கள் இடம்பெற்றிருந்ததுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


இதேவேளை கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விபத்துக்களை குறைப்பதற்கு நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் உடனடியாக அதனை அகற்றுமாறும், அதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்முனை தலைமையக மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி.நஸீர் தெரிவித்துள்ளார்.



முதலீட்டு நடவடிக்கைகளுக்காக அரச காணிகளை அடையாளம் காண் ஆய்வுகள் ஆரம்பம்




முதலீட்டுக்கான அரச காணிகளை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீரஆரச்சி தெரிவித்தார். 


மேலும், பிரதேச செயலக மட்டத்தில் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


காவலி வலயங்களின் 5,300 ஹெக்டேயர் காணியை முதலீட்டுக்காக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


குறித்த காணிகளை முதலீட்டாளர்களின் தேவைக்கேற்ப விடுவிப்பதற்கு நடவடிக்கையும் எடுக்கப்படுமென அவர் மேலும் கூறினார். 



உயர்தர பெறுபேறுகள் வெளியானது....!



No comments

Theme images by fpm. Powered by Blogger.