உரிய பட்டங்கள் இல்லாதோருக்கு ஆசிரியர் நியமனங்கள் இல்லை... - !
உரிய பட்டங்கள் இல்லாதோருக்கு ஆசிரியர் நியமனங்கள் இல்லை... - !
உரிய பட்டங்கள் இல்லாதோருக்கு ஆசிரியர் நியமனங்கள் இல்லை... - !
தேவையான தரங்களை பூர்த்தி செய்யாத கல்விப் பட்டங்கள் உள்ளோரை இனி, ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதில்லை என, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார். இப்புதிய திட்டத்துக்கிணங்க, தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்விப் பட்டங்களின் தரத்தை மதிப்பிடுவதற்கென, சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களுக்கு தேசிய தரங்களை பூர்த்தி செய்யும் பட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகவுள்ளது. இதேவேளை, அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்றும், ஆசிரியர் தொழிலில் நுழைபவர்கள் ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் என்றும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தென் மாகாண கல்வித் துறை பிரதிநிதிகளுடன் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது, பிரதியமைச்சர் இந்தக் கருத்துக்களை கூறியுள்ளார்.
குழந்தையை கவ்விச் சென்று குதறிய நாய்
அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை கவ்விச் சென்று கடித்துக் குதறிய தெரு நாய், காப்பாற்றச் சென்ற பாட்டி யையும் கடித்தது.
இந்த சம்பவம், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகேயுள்ள மேல்கொண்டாழி கிராமத்தைச் சேர்ந்தவர் அபுதாகிர். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுல்தான்பீவி(26). இவர்களுக்கு அஜ்மல் பாஷா என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது.
சுல்தான் பீவி, தனது தாய் மல்லிகா பீவி(44) மற்றும் குழந்தை அஜ்மல் பாஷாவுடன் மேலகொண்டாழி கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை (20) காலை சுல்தான் பீவி, வீட்டில் தனது குழந்தை அஜ்மல் பாஷாவை பக்கத்தில் படுக்கவைத்துக்கொண்டு, தூங்கிக் கொண்டிருந்தார்.
மல்லிகா பீவி வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தார். திடீரென வீட்டுக்குள் புகுந்த ஒரு தெரு நாய், தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை கவ்விக்கொண்டு ஓடியது. குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த மல்லிகா பீவி, நாயை துரத்திச் சென்றார். அப்போது, குழந்தையை கீழே போட்ட நாய், குழந்தையின் தலை, கை, கால், காது உள்ளிட்ட பகுதிகளில் கடித்தது.
மேலும், தடுக்கச் சென்ற மல்லிகாபீவியையும் கடித்து காயப்படுத்தியது. பின்னர், அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று நாயை விரட்டிவிட்டு, மல்லிகா பீவி மற்றும் குழந்தையை மீட்டு, கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீதிமன்றுக்கு சென்று திரும்பிய பெண் கடத்தல்
மட்டக்களப்பில் நீதிமன்றத்துக்கு சென்று வெளியே வந்த பெண் ஒருவரை பெண் ஒருவர் உட்பட்ட ஒரு குழுவினர் இணைந்து அவரின் வாயை பொத்தி இழுத்துச் சென்று ஓட்டோவில் ஏற்றிய போது அவரை காப்பாற்ற சென்ற உறவினரை அடித்து கீழே தள்ளிவிட்டு பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை (19) காலையில் நீதிமன்றத்துக்கு முன்னால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத பற்றி தெரியவருவதாவது,
மாவட்டத்தில் பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் 29 வயதுடைய ஆண் ஒருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2023 பதிவு திருமணம் செய்துவிட்டு தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார் அவ்வாறே காதலன் அவரது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் சில காலங்களுக்கு பின்னர் இந்த பதிவு திருமணம் செய்து கொண்டது தொடர்பாக பெற்றோருக்கு தெரிய வந்துள்ள நிலையில் குறித்த காதலன் வெளிநாடு சென்றுள்ளார்.
அதன் பின்னர் வெளிநாடு சென்ற காதலன் பல தீய பழக்கத்தில் ஈடுபட்டிருப்பதாக காதலிக்கு தெரியவந்ததையடுத்து அவருடன் வாழ முடியாது என விவாகரத்து கோரி மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வெளிநாடு சென்றுள்ள காதலனுக்கு பதிலாக அவரது சகோதரி, நீதிமன்றில் ஆஜராகி வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து காதலன் திரும்ப நாட்டுக்கு வந்து வழக்கிற்கு நீதிமன்றில் ஆஜராகி 3 தவணைக்கு சென்று வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு காதலி அவரது சகோதரி மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளார்.
அதேவேளை காதலன் அவரது சகோதரி மற்றும் ஒரு குழுவினருடன் சென்று நீதிமன்ற பகுதிக்கு இருவர்களின் உறவினர்களும் வெளியில் காத்து நின்றபோது நீதிமன்றத்துக்குள் காதலியும் காதலனும் சென்று வழக்கு விசாரணையின் பின்னர் அங்கிருந்து திருப்பி வெளியே வந்து வீதிக்கு வரும் போது அங்கு வைத்து காதலியை காதலனின் சகோதரி திடீரென அவரின் வாயை பிடித்து பொத்திக் கொண்டார்.
இதன்போது காதலன் அவளை இழுத்து சென்று ஆட்டோவில் ஏற்றிய போது அங்கிருந்த காதலியின் உறவினர் ஒருவர் உடனடியாக ஆட்டோ மீது பாய்ந்து அவரை காப்பாற்ற முற்பட்ட போது ஆட்டோ அவரை சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து சென்று அங்கு தள்ளி விட்டுவிட்டு இந்திய தமிழ் சினிமா பாணியில் குறித்த காதலியை காதலன் அவரது சகோதரியும் கடத்தி சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கடத்தப்பட்ட பெண்ணின் சகோதரி மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவனெல்ல யுவதி மாயம்
ஒரு இளம் பெண் காணாமல் போனது தொடர்பாக. மாவனெல்ல பொலிஸ் பிரிவில் உள்ள கெடப்பா, கலத்தரா என்ற முகவரியில் வசிக்கும் ஒருவர் தனது மகள் 2025.07.28 முதல், காணாமல் போனது தொடர்பாக மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த இளம் பெண்ணின் விவரங்கள் பின்வருமாறு.
பெயர்: எதிரிசிங்கே தருஷி சேவ்வந்தி திசாநாயக்க
வயது: 21 வயது
முகவரி:கெடப்பா, கலத்தரா
இந்த இளம் பெண்ணைக் கண்டுபிடிப்பதில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகிறது மற்றும் அவரது புகைப்படத்தை உங்களுக்கு அனுப்புகிறது. இந்த இளம் பெண்ணைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், 071-8591418 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
ஐவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய்!
மேல் மாகாணத்தில் ஐந்து பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் மணில்க சுமனதிலக தெரிவித்துள்ளார்.
இலங்கை வைத்திய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அவர், அதிகப்படியான சீனி நுகர்வு இந்த நிலைக்கு வழிவகுத்ததுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது. தொற்றா நோய்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன.
80% இறப்புகள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. உணவு செரிக்கப்பட்டு குளுக்கோஸாக உறிஞ்சப்படுகிறது.
இதனால் நீரிழிவு உட்பட பல நோய்கள். பருமனான குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பரவலாக உள்ளது.
இலங்கை அதிக சீனி உட்கொள்ளும் நாடுகளில் ஒன்றாகும். ஒரு நபர் ஒரு வருடத்தில் 25 முதல் 30 கிலோ வரை சீனியை உட்கொள்கிறார்.
வயது வந்தவர் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தேக்கரண்டி சீனியை உட்கொள்கிறார்." என்றார்.
இதேவேளை, நாட்டில் உள்ள குழந்தைகளிடையேயும் சீனி நுகர்வு அதிகரித்துள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை வைத்திய சங்கத்தின் வைத்திய நிபுணர் சுரந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
"சிறு குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகளவான சீனியை உட்கொள்கிறார்கள்.
கொழுப்பு உட்பட பல நோய்கள் இதனால் ஏற்படுகின்றன. உணவில் இருந்து மேலதிக சீனி மற்றும் உப்பை நீக்க வேண்டும்" என்றார்.
சாரதிக்கு மரண தண்டனை
வாய்த் தகராறைத் தொடர்ந்து கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்காக 43 வயது முச்சக்கர வண்டி சாரதிக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று (21) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மார்ச் 2, 2010 அன்று ராய் பீரிஸ் எனும் நபரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர் தரப்பினரால் சுமத்தப்பட்ட குற்றங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையால் இத் தீர்ப்பு விதிக்கப்படுவதாக நீதிபதி அவரது தரப்பில் தெரிவித்துள்ளார்.
உரிய பட்டங்கள் இல்லாதோருக்கு ஆசிரியர் நியமனங்கள் இல்லை... - !
No comments