தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை தேசிய பாடசாலைகளில் அனுமதித்தல் தொடர்பான சுற்று நிருபம் மற்றும் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளின் பட்டியல் வெளியானது.

தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை தேசிய பாடசாலைகளில் அனுமதித்தல் தொடர்பான சுற்று நிருபம் மற்றும் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளின் பட்டியல் வெளியானது....





தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை தேசிய பாடசாலைகளில் அனுமதித்தல் தொடர்பான சுற்று நிருபம் மற்றும் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளின் பட்டியல் வெளியானது




 


தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை தேசிய பாடசாலைகளில் அனுமதித்தல் தொடர்பான சுற்று நிருபம் மற்றும் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளின் பட்டியல் வெளியானது


தமிழ் மொழி மூல 115 பாடசாலைகளின் வெற்றிட பட்டியல் இணைக்கப்பட்டு உள்ளது. ..


FULL DETAILES :       CLICK HERE  

DOWNLOAD CIRCULAR   CLICK HERE





நாமலின் திருமண வைபவத்திற்கு பயன்படுத்திய மின்சாரத்துக்கு 02 மில்லியன் ரூபா கட்டணம்


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் 2019ஆம் ஆண்டு திருமண வைபவத்திற்காக இலங்கை மின்சார சபையின் 2 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட மின்சாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக


தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவைத் தொடர உயர் நீதிமன்றம் நேற்று (11) அனுமதி அளித்தது. நேற்றைய தினம்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதியரசர்கள் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோர் இதற்கான உத்தரவை பிறப்பித்தனர்.


பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானகவின் கோரிக்கைக்கு அமைவாக, அப்போதைய மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், இந்த வைபவம் நடைபெற்ற  ஒரு தனியார் இல்லத்திற்குச் செல்லும் 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள வீதியை ஒளிரச் செய்ய மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிக்கப்பட்டது.


இந்த பணம் பின்னர் நிகழ்வுடன் எந்த தொடர்பும் இல்லாத மூன்றாம் தரப்பினரான மூலம் தரப்பான நிறுவனம் மூலம் செலுத்தப்பட்டதால், இது அரச அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலை உள்ளடக்கியது என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இலங்கை மின்சார சபை சார்பாக, பெறப்பட்ட அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இந்த விடயம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு மின் கட்டணத்திற்கான பற்றச்சீட்டு வழங்கப்படவில்லை என்றும், அவர் சார்பாக மூன்றாம் தரப்பினர் கட்டணத்தை செலுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


விடயங்களை மதிப்பாய்வு செய்த பிறகு, அரசியலமைப்பின் பிரிவு 12(1) இன் கீழ் மனுவைத் தொடர நீதிமன்றம் அனுமதி அளித்து, விசாரணையை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.






91 பறவைகளுடன் 2 சந்தேக நபர்கள் கைது


சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 91 பறவைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் 2 சந்தேக நபர்களையும் கடற்படை கைது செய்துள்ளது. 


மன்னார், பேசாலை, சிரிதோப்பு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கைப்பற்றப்பட்ட படகில் இருந்து 72 புறாக்களையும் 19 சேவல்களையும் கடற்படையினர் மீட்டுள்ளனர். 


சந்தேக நபர்கள் 17 மற்றும் 52 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் பேசாலை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சந்தேக நபர்களுடன் டிங்கி படகு மற்றும் பறவைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.







வவுனியா மாநகர எல்லைக்குள் புகைத்தல் பகுதிகளுக்கு தடை!


வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவங்களுடன் இணைந்தவாறாக உள்ள புகைத்தல் பகுதிகளுக்கு நேற்று (11) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகரசபையின் நேற்றைய அமர்வின் போது குறித்த உத்தரவினை முதல்வர் காண்டீபன் வழங்கியுள்ளார்.


குறிப்பாக வவுனியா நகரத்தில் உள்ள சில உணவங்களுக்கு பின்புறமாக புகைப்பிடிப்பதற்கென சிறிய பகுதிகள் காணப்படுகின்றது.


இவ்வாறான பகுதிகளை உடன் தடை செய்யுமாறு மாநகர சுகாதார குழு பரிந்துரை செய்துள்ளதையடுத்து குறித்த உத்தரவை மாநகர முதல்வர் வழங்கியுள்ளார்.


அத்துடன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக பாடசாலை முடிவடையும் நேரத்தில் சிலர் போதைமாத்திரை வியாபாரத்தில் ஈடுபடுவதாக உறுப்பினர் க.கிருஸ்ணதாஸ் சுட்டிக்காட்டியிருந்தார். இதனை தடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.


இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்திருந்தார். 










அமெரிக்காவின் உயர்ந்த விருது சார்லிக்கு



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது. இதனை அடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார். 

சார்லி கிர்க் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த ஜனாதிபதி டிரம்ப், கொலையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என காட்டமாக தெரிவித்தார். 

இந்நிலையில், சார்லி கிக்குக்கு அமெரிக்க அரசின் உயர்ந்த மெடல் ஆப் பிரீடம் விருது விரைவில் வழங்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.






தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை தேசிய பாடசாலைகளில் அனுமதித்தல் தொடர்பான சுற்று நிருபம் மற்றும் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளின் பட்டியல் வெளியானது.













No comments

Theme images by fpm. Powered by Blogger.