முறைப்பாடுகளை மட்டும் பதிவு செய்யவும்-மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்........ !
முறைப்பாடுகளை மட்டும் பதிவு செய்யவும்-மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்........ !
முறைப்பாடுகளை மட்டும் பதிவு செய்யவும்-மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்....
பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 7000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்க பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய 071-8598888 எனும் வட்ஸ் அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இருப்பினும் குறித்த எண்ணிலிருந்து பெறப்பட்ட சில முறைப்பாடுகள் பொலிஸாருடன் தொடர்பானவை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை மட்டும் குறித்த வட்ஸ் அப் எண்ணில் பதிவிடுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
அரசியல்வாதியும், வர்த்தகரும் கைது
வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவரும் அவரது நெருங்கிய கூட்டாளியும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரவீந்திர குமார என்ற 58 வயதான நகரசபை முன்னாள் தலைவரும் லக்ஷித மனோஜ் என்ற 38 வயதான வர்த்தகர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் பதிவு....
ரஷ்யாவின் கம்சட்கா கரையோரப் பகுதியில் இன்று (13) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
7.4 ரிக்டர் அளவில், 39.5 கிலோமீட்டர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கட்சட்காவின் சில பகுதிகளில் சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் செவெரோ, குரில்ஸ்க் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக அவ்விடங்களிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...
நாட்டில் இன்றையதினம் (13) 12 மாவட்டங்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.
எனவே அதிக வெப்பம் காரணமாக வேலை செய்யும் இடங்களில் அதிக நீர் பருகுதல், வெளியே செல்லும் போது நிழலில் இருத்தல், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களைச் வெப்பத்திலிருந்து பாதுகாத்தல்,
வாகனங்களில் குழந்தைகளை கூட்டி செல்வதை தவிர்த்தல் ,வெளிப்புற செயற்பாடுகளை தவிர்த்தல், வெளிர் நிற ஆடைகளை அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
சுற்றறிக்கை இரத்து...
பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் தொடர்புடைய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2023 ஜூன் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை கடந்த 9ஆம் திகதி முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக, பேருந்துகளின் அலங்காரம் மற்றும் உதிரிப்பாகங்களை நிறுவுதல் தொடர்பான சட்ட விதிகளுக்கு அனுமதி வழங்கி தொடர்புடைய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இந்த புதிய சுற்றறிக்கையில் இவை தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முறைப்பாடுகளை மட்டும் பதிவு செய்யவும்-மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்........ !
No comments