பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் ----- தொடர்பில் கல்வி அமைச்சின் முடிவு
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் ----- தொடர்பில் கல்வி அமைச்சின் முடிவு..... - !
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் ----- தொடர்பில் கல்வி அமைச்சின் முடிவு
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து, இதற்கான சிறப்பு கூட்டுத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட பல விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன, இதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் பொது போக்குவரத்து விதிமுறைகளின் கீழ் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வது ஒரு முக்கிய கவலையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தொடர்பாக பொருத்தமான பரிந்துரைகள் வெளியிடப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பலாங்கொடையில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
11/09/2025 காலை கொழும்பு-பதுளை பிரதான சாலையில் உள்ள பலாங்கொடை பஹலவின் எல்லேபொல பகுதியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
பெல்மதுளையிலிருந்து பலாங்கொடை நோக்கி பாடசாலை குழந்தைகள் உட்பட பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, பலாங்கொடையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மற்றும் அதே திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்ததால், அப்பகுதி மக்கள் பாடசாலை குழந்தைகள் மற்றும் சிறு காயங்களுக்கு உள்ளான பல பயணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விபத்து காரணமாக பதுளை-கொழும்பு பிரதான சாலை முற்றிலுமாக தடைபட்டது.
மகாகவி பாரதியாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104வது நினைவு தினம் 11/09/2025 வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையடியில் இடம்பெற்றது.
இதன்போது அவரது திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், திருமதி கிருஷ்ணராஜ் லிசாந்தினியால் கவி அஞ்சலியும், ஆசிரியர் கதிர்வண்ணனால் நினைவுகளையும் மேற்கொள்ப்பட்டிருந்தது.
வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,
மாநகரசபை பிரதி மேயர், மாநகரசபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
106 நீதித்துறை அதிகாரிகளுக்கு இடம்மாற்றம்
நீதவான்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 106 நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீதவான்கள், மேலதிக நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள், மேலதிக மாவட்ட நீதிபதிகள் மற்றும் பதிவாளர்களுக்கு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த இடமாற்றங்களின் கீழ், மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க, மஹர நீதவான் நீதிமன்றத்திற்கும், மஹர நீதவான் எச்.ஜி.ஜே.ஆர். பெரேரா, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
காலி நீதவான் ஐ.என்.என். குமார கமகே, கோட்டை நீதவானாகவும், குருநாகல் நீதவான் என்.டி. குணரத்ன, கம்பஹா மேலதிக மாவட்ட நீதிபதியாகவும் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் பி.எஸ். பத்திரண, பலபிட்டிய நீதவானாகவும், ஆர்.டி. ஜனக, கொழும்பு மேலதிக நீதவானாகவும் மாற்றப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நீதித்துறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 17 நீதவான்கள், மேலதிக நீதவான்கள் மேலதிக மாவட்ட நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
குருக்கள்மடம் விடயத்தில் ---- அரசாங்கம் ஒத்துழைப்புக்களையும் வழங்கும்
பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட அறிக்கை சமர்ப்பித்து குருக்கள்மடம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் உரையாற்றினார்.
இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில்,
1990 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி குருக்கள்மடம் பிரதேசத்தில், முஸ்லிம்கள் தமது புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு வீடு திரும்பும் போதே அங்கிருந்த சிறுவர்கள், முதியோர், இளைஞர்கள் என பலர் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் என குறிப்பிட்டதுடன், பல கோரிக்கைகளை முன்வைத்தார்.
1. இப் படுகொலைக்கு உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதோடு, ஜனாஷாக்களை தோண்டி எடுக்க தேவையான முழு உதவியும் வழங்கப்பட வேண்டும்.
2. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
3. ஜனாஷாக்கள் அடையாளம் காணப்பட்ட பின், அவர்களின் உடல்கள் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இக்கோரிக்கைகளுக்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார,
பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொள்வதோடு, தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள ஆயத்தமாக உள்ளதாக தெரிவித்தார்.
“நான் குருக்கள்மடம் சென்றமைக்கு ஹிஸ்புல்லாஹ் நன்றி தெரிவித்தார், அவருக்கு நானும் நன்றிகளை தெரிவிக்கிறேன். நான் அங்கு விஜயம் செய்து உரிய இடத்தைப் பார்வையிட்டேன். இதற்குத் தேவையான நிதிகளை என்னுடைய அமைச்சின் மூலமாக ஒதுக்கிட நடவடிக்கை எடுப்போம்.
அதேபோன்று, நவீன தொழில்நுட்ப வசதிகள் அல்லது சிறப்பு கமரா போன்றவை இலங்கையில் இல்லாவிட்டாலும், வெளிநாடுகளிலிருந்து அழைப்பித்துத் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நிதி உதவிகள், வசதி ஏற்பாடுகள், சட்ட உதவிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து வளங்களும் வழங்கப்பட்டு, இதனை முழுமையாக செய்து முடிப்போம்” என்று அமைச்சர் உறுதியளித்தார்.
இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்கும், வழங்கிய உறுதிமொழிக்குமாக எனது மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் ----- தொடர்பில் கல்வி அமைச்சின் முடிவு..... - !
No comments