2025 (2026) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்........ - !
2025 (2026) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்........ - !
2025 (2026) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்........ - !
2025 (2026) O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்
2025 (2026) O/L பரீட்சைக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் ஒக்டோபர் 0 9 ஆம் திகதி வரை இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .
அதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைப் பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலமாகவும் சமர்ப்பிக்க முடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனியார் விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்போது தமது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்த வேண்டும்.
தேசிய அடையாள அட்டையை தம் வசம் கொண்டிராத தனியார் விண்ணப்பதாரர்கள் தமது தாய் அல்லது தந்தையின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைப் பதிவு செய்து சமர்ப்பிக்க முடியும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்களைச் சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஜனவரியில் சம்பள உயர்வு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு
அனைத்து அரச ஊழியர்களுக்கும் அடுத்த ஜனவரி மாதம் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
25 பேருந்து நிலையங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பேருந்து நிலையங்களில் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு அதிக ஊதியம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இந்த நிறுவனங்கள் மக்களுக்கு முழுமையாக சேவை செய்யும் திறமையான நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
பாடசாலை பேருந்துகளில் ---- பெண் ஊழியர்களை
இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) பெண் ஊழியர்கள் உட்பட 450 சாரதிகள் மற்றும் 300 நடத்துனர்களை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கான நேர்காணல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெண்களை பணியமர்த்துவதற்கு முன்பு அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.
இந்தநிலையில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை பேருந்துகளில் பெண் ஊழியர்களை பணியமர்த்துவதே ஆரம்ப திட்டம் என்றும், இது கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
450 ஓட்டுநர்கள் நியமனம்...
இலங்கை போக்குவரத்து சபைக்கு 450 ஓட்டுநர்கள் மற்றும் 300 நடத்துனர்களை நியமிக்கப் போவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
பெண்கள் நடத்துனர்களாகவும் நியமிக்கப்படுவார்கள். குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் இந்தப் பெண்களைப் பணியமர்த்த அமைச்சு எதிர்பார்க்கின்றது.
விமானப் பணிப்பெண்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற சீருடைகளை இந்தப் பெண் நடத்துனர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
வாகன விபத்துக்களில் ---- 1900 பேர் பலி....
இந்த ஆண்டின் இதுவரையான
காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் 1,960 பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஜனவரி 1 முதல் செப்டம்பர் 17 வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் காலகட்டத்தில், 1,843 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன.
இதுதவிர, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,708 பாரதூரமான விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
2025 (2026) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்........ - !

No comments