தாய்மார்களுக்கு வந்த எச்சரிக்கை ........ - !
தாய்மார்களுக்கு வந்த எச்சரிக்கை ........ - !
தாய்மார்களுக்கு வந்த எச்சரிக்கை
சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களை கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்படுத்துவதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் அழகியவண்ண இதனைத் தெரிவித்துள்ளார்.
பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த கிரீம்களைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, நினைவாற்றல் இழப்பு மற்றும் குழந்தையின் நடைப்பயிற்சியில் சிரமங்கள் ஏற்படுதல் போன்ற பல செயல்பாடுகளை பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கிரீம்களில் அதிக அளவு பாதரசம் இருப்பதால் தோல் வெண்மையாக மாறுகின்றது.
இந்த பாதரசம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருள் என்று நிபுணர் தெரிவித்துள்ளார்.
பெண்களின் கர்ப்ப காலத்தில் இரத்த ஓட்டம் மிக வேகமாக இருப்பதால், கிரீம்களில் உள்ள பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்கள் தோலில் உறிஞ்சப்படுவது விரைவாக நிகழ்கிறது.
இதனால், சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களில் அதிக அளவு பாதரசம் இருப்பதால், அந்த கிரீம்கள் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்ய சமர்ப்பிக்கப்படுவதில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
அதே ஆண்டில், 375 பெண்கள் இத்தகைய துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் கூறினார்.
இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 114 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கையில் 100 மில்லியன் முதலீட்டு திட்டம்
இலங்கையில் சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்தோனேசியா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இலங்கை அரசுடன் இணைந்து வலுவான செயல் திட்டங்களை முன்னெடுத்து, எதிர்காலத்தில் சிறந்த முதலீட்டு பங்குதாரராக விளங்கும் விருப்பத்தையும் இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று மேல் மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் மற்றும் மேல் மாகாண ஆளுநர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாணவியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு ---- சிறைத்தண்டனை
பாடசாலையில் இருந்து வீடு திரும்புவதற்காக காத்திருந்த 9 வயது சிறுமியை பாடசாலை வேனுக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2 குற்றச்சாட்டுகளுக்காக, வயதான வேன் ஓட்டுநருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சப்புவிட்ட நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும், 30,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்டவருக்கு 500,000 ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிடப்பட்டது.
அபராதம் மற்றும் இழப்பீடு செலுத்தப்படாவிட்டால், தண்டனைக்கு கூடுதலாக ஒன்றரை ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பாடசாலையில் 4ஆம் வகுப்பில் படித்து வந்த சிறுமியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தது உட்பட இரண்டு குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சட்டதரணிகளால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வயதைக் கருத்தில் கொண்டு சிறிய தண்டனை விதிக்க வேண்டும் என்ற பிரதிவாதியின் வழக்கறிஞரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி இந்த தண்டனையை விதித்தார்.
சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கொடூரமான குற்றம் நடந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் 55 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரியவந்துள்ளது.
மஹரகம பொலிஸாரினால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்குத் தாக்கல் செய்தார்.
3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய்
கண்டி, உடுதும்பர தலகுனே பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
32 வயதான தாய் உயிரிழந்த நிலையில் பிள்ளைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
34 வயதான கணவர் 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அவர் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் 12, 10 மற்றும் 5 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகளும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் பிள்ளைகள் தற்போது உடுதும்பர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணும் மனநல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாணயத் தாள்கள் குறித்து அவதானம்
பொருட்களை வாங்கும் போதும், பணத்தை கையாளும் போது அப்பணத்தாள் போலியானதா? என்பதை சரிபார்க்குமாறும் பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு பணத்தைப் பயன்படுத்தும் போதும் கவனமாகவும் இருக்குமாறும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்துகிறது.
பணம் போலித்தனமானது அல்ல என்பதைச் சரிபார்த்த பின்னரே, பணத்தைப் பயன்படுத்தவும், அத்தகைய போலி நாணயத்தாள்களை வைத்திருப்பவர்கள் அல்லது கையாளுபவர்கள் பற்றிய தகவல் கிடைத்தவுடன் உடனடியாக இலங்கை பொலிஸாருக்கு தெரிவிக்கவும் என்றும் பொலிஸ் அறிவுறுத்துகிறது.
இதற்கிடையில், ஹபரானா நகரில், தலா இரண்டு போலி ரூ. 5000 தாள்களை வைத்திருந்த மேலும் இரண்டு பேர் வியாழக்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டனர்.
மேலும் விசாரணைகளின் போது, போலி ரூ. 5000 நாணயத்தாள்களை அச்சிட்ட ஒரு சந்தேக நபரும், அத்தகைய 138 நாணயத்தாள்கள் மற்றும் அச்சிடப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய்மார்களுக்கு வந்த எச்சரிக்கை ........ - !
No comments