தமிழ் மொழி பாடசாலையில் பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர் விண்ணப்பம் கோரல் 2025........ !
தமிழ் மொழி பாடசாலையில் பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர் விண்ணப்பம் கோரல் 2025........ !
தமிழ் மொழி பாடசாலையில் பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர் விண்ணப்பம் கோரல் 2025........ !
Tamil Medium Teacher VACANCIES-S. THOMAS' PREPARATORY SCHOOL 2025
- Maths
- Science
- Hinduism
- practical technology
- Health and physical education
Full Details
APPLICATION : CLICK HERE
Closing Date: 19.09.2025
டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம் ----அதிகாரிகளுக்கு
அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி புதிய பாதைக்கு கொண்டு செல்வதுதான் எனத் தெரிவித்தார்.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டு அலுவல்கள் பிரிவின் பொது அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்பங்களை அங்கீகரிக்கும் நிகழ்வில் நேற்று (15) பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.
மக்கள் எதிர்பார்க்கும் திறமையான பொது சேவையை உருவாக்குவதே தனது நோக்கம் என்றும், இந்த புதிய தொழில்நுட்பத்தை கிராம சேவையாளரிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
அலுவலகப் பணிகளை எளிதாகவும் வினைத்திறனாகவும் மாற்றுவதற்காக, 2006 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின்படி, உள்நாட்டலுவல்கள் பிரிவின் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அதிகாரிகளின் கையொப்பங்களை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறை இங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் விதிகளின்படி டிஜிட்டல் கையொப்பங்களை வழங்கும் அதிகாரம் கொண்ட நிறுவனமாக லங்காபே LankaPay உள்ளது.
அதன்படி, கடிதங்களைச் செயலாக்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கலாம் மற்றும் மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள சேவையை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசிடம் பறந்த கோரிக்கை --- தேர்தல் தொடர்பில்
நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெப்ரல் அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபே ரத்னவுக்கு அனுப்பிய கடிதத்தில், பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ரோஹன ஹெட்டியாராச்சி, மாகாணசபை அமைப்பு ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயக கட்டமைப்பாக மீண்டும் நிறுவப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தற்போது அது அதிகாரிகள் கையில் மட்டுமே இருப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாக்களிக்கும் உரிமை அரசியலமைப்பின் 3வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மக்களின் இறையாண்மை அதிகாரத்தின் ஒரு பகுதியாகும்.
நீண்டகால தாமதம் ஜனநாயக செயல்முறைகள் மீதான மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தியுள்ளதாகவும் ரோஹ யாராச்சி எச்சரித்துள்ளார்.
இதேவேளை, மாகாணசபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் மாதத்தில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியும் என மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவன் நீரில் மூழ்கி மரணம்
திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி நேற்று (15) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த பேமரத்னகே உமேஷ் ஆலோக (15வயது) எனவும் தெரியவந்துள்ளது.
வழமையாக நண்பர்களுடன் குளிப்பதற்கு செல்வதாக நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணியளவில் வீட்டிலிருந்து சென்றதாகவும் பின்னர் உயிரிழந்த நிலையில் இரவு 8.15 மணியளவில் மீட்கப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த மாணவன் கோமரங்கடவல -மதவாச்சி சிங்கள வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி பயின்று வருபவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை மின்சார பொறியியலாளர்கள் --- தொழிற்சங்க போராட்டத்தை தீவிரம்
இலங்கை மின்சார சபையை (CEB)நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து அதன் பொறியலாளர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சட்டப் படி வேலை செய்யும் போராட்டம் இன்று (16) முதல் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட சட்டப்படி வேலை நிறுத்தும் போராட்டத்தின் முதற்கட்டமானது நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கு தமது சங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையால் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த தமது சங்கம் எதிர்பார்க்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இது திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, எதிர்காலத்தில், வேலைக்கு மேலதிகமாக டெண்டர் குழுக்களில் இணைதல், ஏனைய குழுக்களில் இருந்து விலகல் போன்றவற்றை முன்னெடுத்து அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து ஊழியர்களும் நாளை (17) மற்றும் நாளை மறுநாள் இரண்டு குழுக்களாக சுகவீன விடுமுறையில் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அந்த இரண்டு நாட்களில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தொழிற்சங்க போராட்டம் காரணமாக அலுவலகங்கள் மூடப்படவோ அல்லது வேறு எந்த செயல்முறைகளும் பாதிக்கப்படவோ மாட்டாது என்றும் இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
தமிழ் மொழி பாடசாலையில் பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர் விண்ணப்பம் கோரல் 2025........ !
No comments