பாடசாலை தவணை விடுமுறை --- 2026ஆம் கல்வியாண்டுக்கான ........ - !

 பாடசாலை தவணை விடுமுறை --- 2026ஆம் கல்வியாண்டுக்கான ........ - !





பாடசாலை தவணை விடுமுறை --- 2026ஆம் கல்வியாண்டுக்கான ........ - !




 

பாடசாலை தவணை விடுமுறை --- 2026ஆம் கல்வியாண்டுக்கான 

     


2026ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை அட்டவணையை உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணைக்கான முதல் கட்டம், 01.01.2026 வியாழக்கிழமை முதல் 13.02.2026 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.


முதலாம் தவணைக்கான முதல் கட்ட விடுமுறை, 14.02.2026 முதல் 02.03.2026 வரை வழங்கப்படும்.


முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் 03.03.2026 செவ்வாய்க்கிழமை முதல் 10.04.2026 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.


முதல் தவணையின் இரண்டாம் கட்டத்திற்கான விடுமுறை, 11.04.2026 முதல் 19.04.2026 வரை வழங்கப்படும்.


இதனையடுத்து, இரண்டாம் தவணை பருவம் 2026.04.20 திங்கட்கிழமை முதல் 24.07.2026 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.


அத்துடன், மூன்றாம் தவணைக்கான முதல் கட்டம் 27.07.2026 திங்கட்கிழமை முதல் 07.08.2026 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.


மூன்றாம் தவணை பருவத்தின் முதல் கட்டத்திற்கான விடுமுறை 08.08.2026 முதல் 06.09.2026 வரை வழங்கப்படும்.


மூன்றாம் தவணை பருவத்தின் இரண்டாம் கட்டம் 07.09.2026 திங்கட்கிழமை முதல் 04.12.2026 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.


 - முஸ்லிம் பாடசாலைகள்


மேலும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதல் கட்டம், 01.01.2026 வியாழக்கிழமை முதல் 13.02.2026 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.


முதலாம் தவணைக்கான முதல் கட்ட விடுமுறை, 14.02.2026 முதல் 22.03.2026 வரை வழங்கப்படும்.


முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், 23.03.2023 திங்கட்கிழமை முதல் 10.04.2026 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.


முதல் தவணையின் இரண்டாம் கட்டத்திற்கான விடுமுறை, 11.04.2026 முதல் 19.04.2026 வரை வழங்கப்படும்.


முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்டம், 20.04.2026 முதல் 30.04.2026 வரை இடம்பெறும்.


இரண்டாம் தவணைக்கான முதல் கட்டம், 04.05.2025 திங்கட்கிழமை முதல் 26.05.2026 செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும்.


இரண்டாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், 01.06.2026 திங்கட்கிழமை முதல் 31.07.2026 வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும்.


மூன்றாம் தவணைக்கான முதல் கட்டம், 03.08.2026 திங்கட்கிழமை முதல் 02.09.2026 வரை நடைபெறும்.


மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், 07.09.2026 திங்கட்கிழமை முதல் 04.12.2026 வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும்.


                 

பொலிஸார் பற்றிய  ---   மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்....

    


பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 7000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 


குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்க பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய 071-8598888 எனும் வட்ஸ் அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார். 


இருப்பினும் குறித்த எண்ணிலிருந்து பெறப்பட்ட சில முறைப்பாடுகள் பொலிஸாருடன் தொடர்பானவை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனவே பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை மட்டும் குறித்த வட்ஸ் அப் எண்ணில் பதிவிடுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். 



பொருளாதார வளர்ச்சி -   அரசாங்கத்தின் நோக்கம்!




வர்த்தகத் துறைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், சட்ட விதிகளை உருவாக்குதல் மற்றும் ஒழுங்குபடுத்ததலை அரசாங்கம் மேற்கொள்கிறது என்றும், உள்நாட்டு வர்த்தகர்களுக்கு மற்றும் தொழில்முனைவோருக்கு சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தி, அவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முழுமையாக பங்களிக்க உதவுவது, அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 


நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இலங்கை இளம் தொழில்முனைவோர் மன்றத்தின் (COYLE) பிரதிநிதிகளுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். 


இந்தத் துறையின் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்ததுடன், அதற்கான முன்மொழிவுகளையும் சமர்ப்பித்தனர். 


நாட்டை நவீனமயப்படுத்த இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதன்போது அரச சேவைக்குத் தேவையான நவீன தொழிநுட்பம் மற்றும் வசதிகளை வழங்குவதுடன் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 


2026 வரவுசெலவுத் திட்டத்திற்கான தமது ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்க வாய்ப்பளித்ததற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தத பிரதிநிதிகள் குழு, ஊழல் மற்றும் மோசடி அற்ற, சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும் ஒரு நாட்டை உருவாக்குவதற்கான ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் பாராட்டியது. 


மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நினைவுப் பரிசையும் வழங்கினர். 


நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க ஆகியோருடன் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை இளம் தொழில்முனைவோர் மன்றத்தின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்



அனைத்து அரச ஊழியர்களுக்கும் சரியான முறையின் கீழ் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என பொது சேவைக்கான நாடாளுமன்ற துணைக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி (Chandana Sooriyaarachchi) தெரிவித்துள்ளார்.


அந்தவகையில், அரச சேவையில் சம்பள உயர்வு தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்கும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.


அந்தக் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளில் குறிப்பிட்ட புள்ளிகள் இரண்டு வாரங்களுக்குள் உரிய அமைச்சிற்கு அனுப்பப்படும் என்று சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.


அமைச்சினால் உரிய கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் அவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.


நாடாளுமன்றத்தில் ஆராய்ந்த பின்னர் உரிய முறைக்கமைய, அரை அரசாங்கம் உட்பட அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அனைத்து ஊழியர்களுக்கும் முறையாக மற்றும் சரியான முறையின் கீழ் சம்பள அதிகரிப்பு வழங்க எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.



 படகு விபத்தில் 86 பேர் 



வட மேற்கு கொங்கோவின் ஈக்வேட்டர் மாகாணத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் குறைந்தது 86 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தகவலின்படி பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அதிக அளவிலான பயணிகள் படகில் ஏற்றப்பட்டதனாலும், இரவு நேர பயணத்தினாலுமே, இந்த விபத்து ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



பொலிஸ் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு



இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டண விபரங்கள் தொடர்பில் விசேட அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


கட்டண மாற்றங்கள் தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


வெளிநாடு பயணம் செய்யும் ஒருவருக்கு நிகழ்நிலையில் பொலிஸ் தடையகற்றல் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்கு 5000 ரூபாய் அறவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒலிபரப்பு மேற்கொள்வதற்காக ஆறு மணித்தியாலங்களுக்கு 500 ரூபாவும், ஆறு முதல் 12 மணித்தியாலங்களுக்கு 1000 ரூபாவும், 12 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட நேரத்திற்கு 2000 ரூபாவும் அறவீடு செய்யப்பட உள்ளது.


மத்திய கிழக்கு நாடுகளுக்கான பொலிஸ் தடையகற்றல் அறிக்கைகளுக்காக 500 ரூபா அறவீடு செய்யப்படவுள்ளது.


உள்நாட்டு தேவைகளுக்காக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் வழங்கப்படும் பொலிஸ்  தடையகற்றல் அறிக்கைக்காக 300 ரூபா அளவீடு செய்யப்பட உள்ளது.


முறைப்பாடு ஒன்றின் நகல் பிரதியை பெற்றுக் கொள்வதற்கு ஒரு பிரதிக்கு தலா ஐம்பது ரூபாய் அறவீடு செய்யப்பட்டுள்ளது.


இந்த கொடுப்பனவுகள் செலுத்தப்படும் போது உரிய பற்றுச்சீட்டுகளை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என பொலிஸ் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. 


பாடசாலை தவணை விடுமுறை --- 2026ஆம் கல்வியாண்டுக்கான ........ - !


No comments

Theme images by fpm. Powered by Blogger.