இணைய வழியிலான தகாத தொழில் ---- பொலிஸார் எச்சரிக்கை........ - !

 இணைய வழியிலான தகாத தொழில்    ----  பொலிஸார் எச்சரிக்கை........ - !





இணைய வழியிலான தகாத தொழில்    ----  பொலிஸார் எச்சரிக்கை........ - !




 

இணைய வழியிலான தகாத தொழில்    ----  பொலிஸார் எச்சரிக்கை



இலங்கையில் இணைய வழியில் தகாத தொழில் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இந்த சம்பவங்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நிதி மோசடிகள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் இந்த இணைய வழி பாலியல் தொழில்கள் ஊடாக இடம்பெறக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


சுற்றுலா வீசாக்களில் நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களும் இந்த பாலியல் தொழில்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


தற்பொழுது அதிக எண்ணிக்கையிலான இணையதளங்களிலும் மொபைல் செயலிகளின் ஊடாகவும் இணைய வழி பாலியல் தொழில் தொடர்பான விளம்பரங்களை பிரசுரம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.


வாட்ஸ்அப் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி ரகசியமான முறையில் பாலியல் தொழில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த சேவைகள் தற்பொழுது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இவ்வாறான பாலியல் தொழில் சேவை வழங்கும் தரப்புகள் மோசடிகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


இணைய வழியில் விளம்பரங்கள் செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் பாலியல் தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 



பெண் சாரதிகளும் நடத்துனர்களும் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்  ----   இலங்கை போக்குவரத்து சேவைக்கு 



எதிர்காலத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து சேவைக்கு பெண் சாரதிகளும் நடத்துனர்களும் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை போக்குவரத்து சபை தற்போது மரியானா அகழிக்கு கீழே மூழ்கிவிட்டதாகவும், இந்த நாட்டில் இலங்கை போக்குவரத்து சபையை அழித்தவர்கள் கடந்த கால அரசியல்வாதிகள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.


இலங்கையில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள், பஞ்சமில்லாத பூமியில் ஒரு நகரமாக உள்ளன.


தற்போது இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 750 புதிய சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கை போக்குவரத்து சபை மீண்டும் கட்டமைக்கப்பட்டு லாபகரமான நிறுவனமாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



 கடுமையாக்கப்படவுள்ள சட்டம் தொடர்பில் 



தொடருந்துகளில் வர்த்தகங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த தொடருந்து பாதுகாப்பு அத்தியட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வர்த்தகம் என்ற பெயரில் திருட்டுகள் இடம்பெறுவதாக தொடருந்து பயணிகளிடம் இருந்து வரும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதையடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதன்படி, 1902ஆம் ஆண்டு தொடருந்து கட்டளைச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களின் கீழ், தொடருந்து பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் வியாபாரிகள் மீது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


இந்நிலையில், இந்த நடவடிக்கை வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று இலங்கை நடமாடும் தொடருந்து வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



இப்படித்தான் இருப்பேன் : மைத்திரி



நான் தற்போது ஓய்வூதியத்தைக் கொண்டே வாழ்கின்றேன். எனக்கு வேறு எந்த வருமான மூலமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை  தெரிவித்துள்ளார்.


நான் உயிர் வாழும் வரை சுதந்திர கட்சி அங்கத்தவனாகவே இருப்பேன். அரசியலில் இருந்தாலும் இனி செயற்பாட்டு அரசியலில் ஈடுபட மாட்டேன். 


நான் செல்லவுள்ள வீட்டின் நிர்மானப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை நிறைவடைந்த பின்னர் வெகு விரைவில் இந்த வீட்டை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வேன்.


இந்த வீட்டிலிருந்து செல்வதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகளைத் தவிர மேலும் பல அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகள் இந்த அரசாங்கத்தால் மீளப் பெறப்பட்டாலும், அவை பயன்பாடின்றி கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. 


தற்போது அவற்றில் குரங்குகள் தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சுட்டிக்காட்டினார்.


முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் தொடர்பில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளை நான் சிறிதளவேனும் கவனத்தில் கொள்ளவில்லை. அவை முற்று முழுதாக போலியான தரவுகளாகும் என்றும், பாதுகாப்பு செலவுகளைக் கூட அவர்கள் எமது செலவாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டார். 


உலகின் ஏனைய நாடுகளில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வாறான பாதுகாப்புக்களும் கௌரவமும் வழங்கப்படுகிறது என்பதை அரசாங்கத்தினர் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 



 பழமையான பெண்ணின் மண்டை ஓடு மூலம்   ----  முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்



இங்கிலாந்தின் கெண்டல் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு நீர் மேலாண்மை பணிகள் தொடங்கியது. அப்போது அங்குள்ள தேவாலயம் அருகே சில எலும்பு கூடுகள் கிடைத்தன. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய ஆய்வில் அந்த எலும்பு கூடுகள் 900 ஆண்டுகள் பழமையானவை என்பது உறுதியானது.


இதற்கிடையே அங்கு கைப்பற்றிய ஒரு பெண்ணின் மண்டை ஓடு மறுகட்டமைப்புக்கு ஏற்ற நிலையில் இருந்தது. எனவே அந்த பெண்ணின் முகம் எப்படி இருந்திருக்கும் என்பதை கண்டறியும் பணியில் லிவர்பூல் ஜார் மூர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட அந்த பெண்ணின் முகம் கெண்டல் தேவாலயத்தில் பொதுமக்களின் பார்வைக்காக தற்போது வைக்கப்பட்டு உள்ளது.




இணைய வழியிலான தகாத தொழில்    ----  பொலிஸார் எச்சரிக்கை........ - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.