இவர்களுக்குகூடுதலான பல்கலைக்கழக வாய்ப்புகளை வழங்க உத்தேசம்.... ....... - !

 இவர்களுக்குகூடுதலான பல்கலைக்கழக வாய்ப்புகளை வழங்க உத்தேசம்.... ....... - !





இவர்களுக்குகூடுதலான பல்கலைக்கழக வாய்ப்புகளை வழங்க உத்தேசம்.... ....... - !





இவர்களுக்குகூடுதலான பல்கலைக்கழக வாய்ப்புகளை வழங்க உத்தேசம்.... ....... - !



   அங்கவீனமுற்ற மாணவர்களுக்கும் கூடுதலான பல்கலைக்கழக வாய்ப்புகளை வழங்குவதற்கான செயற்திட்டம் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.


அதன் பிரகாரம் உத்தேச செயற்பாடு தொடர்பான வழிகாட்டல் ஒன்றும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.


அதன்பின்னர் அங்கவீனமுற்ற மாணவர்களுக்கான பொருத்தமான பாடநெறிகள், அவர்களுக்கு கற்பதற்கான போதுமான வசதிகளை பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்திக் கொடுப்பது இதன்நோக்கமாகும்.


அத்துடன் தேசிய மட்ட வெற்றிகளைப்பெறும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்புகளை அளிப்பது தொடர்பிலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.


அதே போன்று பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் வெளிவாரி பட்டங்கள் தொடர்பான கற்கை நெறிகளை ஒழங்கமைக்கவும், குறித்த பட்டப்படிப்புகளின் தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பவுள்ளது.



பயணிகள் வருமானம் அதிகரிப்பு  ----  ஸ்ரீலங்கன் விமான சேவையின் 



2025 முதல் 2026 வரை யான நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பயணிகள் வருமானம் 10 வீதத்தால் அதிகரித்துள்ளது.


தமது விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் 22 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.


வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் விமான சேவையின் செயற்றிறன் 74 வீதமாக அதிகரித்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த வருடம் இது 69 வீதமாக பதிவாகியிருந்தது.


இயந்திரக் கோளாறு காரணமாக நீண்ட காலமாக சேவையில் இருந்து நீக்கப்பட்ட 02 விமானங்கள் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருட ஆரம்பத்தில் மற்றுமொரு விமானம் பழுதுபார்க்கப்பட்டு சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.



 பிரித்தானியா சென்று பணியாற்ற காத்திருப்போருக்கு 



சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக, 2029 முதல் ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட டிஜிட்டல் ஐடியை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


டிஜிட்டல் அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்திய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இது சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்து வேலை செய்வதை கடினமாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், இந்த திட்டம் மக்களுக்கு பல சிறப்பு சலுகைகளை வழங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இருப்பினும், டிஜிட்டல் அடையாள அட்டைகளால் சட்டவிரோத குடியேறிகளின் வருகையைத் தடுக்க முடியாது என்று எதிர்க்கட்சி கூறியுள்ளது.


இந்த நிலையில், பிரதமரின் டிஜிட்டல் அடையாள அட்டை முறை அறிவிப்புக்கு எதிராக 1.6 மில்லியனுக்கும் அதிகமான கையெழுத்துகளுடன் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டைக்கு பதிவு செய்ய யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


அந்நாட்டின் பாரம்பரியத்தின்படி, ஒரு மனுவில் 100,000 க்கும் மேற்பட்ட கையொப்பங்கள் பெறப்பட்டால், அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட என்பது குறிப்பிடத்தக்கது.




நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு   ---    இந்திய அணிக்கு 



17-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தற்போது மோதி வருகின்றன. 


டுபாயில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 


இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றுள்ளது. 


துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Sahibzada Farhan அதிகபட்சமாக 57 ஓட்டங்களையும், Fakhar Zaman 46 ஓட்டங்களையும் பெற்றனர். 


பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Kuldeep Yadav 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 


இதற்கமைய இந்திய அணிக்கு 147 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




கைவிடப்பட்ட மற்றொரு குழந்தை




ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. 


மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகவலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது குழந்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


இன்று(28) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. 


குறித்த குழந்தையை பொலிஸாரின் ஊடாக நீதிமன்றில் பாரப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.


-அம்பாறை நிருபர் ஷிஹான்-



 இவர்களுக்குகூடுதலான பல்கலைக்கழக வாய்ப்புகளை வழங்க உத்தேசம்.... ....... - !



No comments

Theme images by fpm. Powered by Blogger.