பாடசாலை மாணவர்கள் தொடர்பில் ---- வெளியான அதிர்ச்சி தகவல்.... .... - !

 பாடசாலை மாணவர்கள் தொடர்பில்   ---- வெளியான அதிர்ச்சி தகவல்.... .... - !





பாடசாலை மாணவர்கள் தொடர்பில்   ---- வெளியான அதிர்ச்சி தகவல்.... .... - !






பாடசாலை மாணவர்கள் தொடர்பில்   ---- வெளியான அதிர்ச்சி தகவல்....

    


இலங்கையில் பாடசாலை மாணவர்களில், மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே அதிகளவில் போதைப்பொருட்களுக்கு, அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.


இதில் கொழும்பு மாவட்டம் முதன்மை நிலையில் உள்ளதாக அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி கிரேண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனித் தெரு, அங்குலானை, வாழைத்தோட்டம், பாணந்துறை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, ஹிக்கடுவ உள்ளிட்ட பல இடங்களில் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகக்கூடியவர்கள் என தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை குறிப்பிட்டுள்ளது.


அத்துடன் கண்டி மாவட்டத்தின் சில பகுதிகள், பாடசாலை மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகக்கூடிய அதிக வாய்ப்புள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கம்பஹா, குருநாகல், அனுராதபுரம், காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களும் ஆபத்தான மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.


சக நண்பர்களின் தூண்டுதல் பாடசாலை மாணவர்களின் போதைப்பொருள் பாவனையில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய காரணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.




செயற்கை நுண்ணறிவு  இலவசமாக வழங்க திட்டம்...

     


கூகுள் தனது மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தளமான ‘ஜெமினி’ மற்றும் பிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சேவைகளை இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.


டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கும் கூகுள் நிறுவனத்திற்கும் இடையிலான பல மாத கால உரையாடலின் பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.


இந்த புதிய திட்டம் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள், கிளவுட் கம்ப்யூட்டிங் தளங்கள் மற்றும் டிஜிட்டல் கற்றல் வளங்களை இலவசமாக அணுக உதவுமென்றும் இந்த நடவடிக்கை இலங்கையின் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு, டிஜிட்டல் கல்வியறிவுக்கான தேசிய திறனை கணிசமாக மேம்படுத்துமென்றும், இதன் மூலம் எதிர்கால சந்ததியினர் புதுமைகளை உருவாக்கவும், சிக்கலான சவால்களைத் தீர்க்கவும், உலகளவில் போட்டியிடவும் அதிகாரம் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த திட்டத்தின் செயல்படுத்தல் விரைவில் தொடங்குமென்றும், இது பற்றிய மேலதிக தகவல்கள் பிறகு அறிவிக்கப்படுமென்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.




குரங்குகள், பபூன்களிடையே   ---   'சிபிலிஸ்' நோய் 



பொலன்னறுவை புனித தலத்தைச் சுற்றி வாழும் குரங்குகள் மற்றும் பபூன்களிடையே பாலியல் ரீதியாக பரவும் நோயான 'சிபிலிஸ்' பரவும் வீதம் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கிழக்கு சுகாதார மேலாண்மை பிரிவின் கால்நடை மருத்துவர் நிஹால் புஷ்ப குமார தெரிவித்துள்ளார். 


குரங்குகள் மற்றும் பபூன்களிடையே இந்த நோய் பரவியதா என்பது கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனைகள் ஊடாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், இந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


புனித தலத்தைச் சுற்றித் திரியும் குரங்குகள் மற்றும் பபூன்கள் கூட்டங்களிடையே இந்த நோய் பரவுவது அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


மேலும் சிபிலிஸால் பாதிக்கப்பட்ட பல குரங்குகள் மற்றும் எலிகள் 2023-2024 ஆம் ஆண்டுகள் நடத்தப்பட்ட சோதனைகளின் ஊடாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




யானை, சீன வெடிகள் உற்பத்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் 

    


தடை செய்யப்பட்டுள்ள யானை வெடி மற்றும் சீன செடி போன்றவற்றின் உற்பத்தி, விநியோகம், களஞ்சியப்படுத்தல், விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


இந்த வெடிபொருட்கள் விலங்குகள் குறிப்பாக யானைகளுக்கு காயங்களை ஏற்படுத்தி அவற்றின் இறப்புக்கும் வழிவகுக்கின்றன.மேலும் இது மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கின்றன.


இந்நிலையில் இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு குறித்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.



 தேசிய குடியேற்ற வாரம் அமுல்!




உலக குடிசன தின பிரதான நிகழ்வை எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி அலரி மாளிகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 


ஐக்கிய நாடுகள் சபையின், உலக குடிசன தினம் அக்டோபர் மாதம் 05 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 


"நகர்ப்புற நெருக்கடியின் மீது கவனம் செலுத்துங்கள்" எனும் கருப்பொருள் இந்த ஆண்டுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, இலங்கையின் குடிசன மற்றும் குடியிருப்புகளை ஒரு புதிய திசைக்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த ஆண்டு குடிசன தினத்தை "நமக்கென்று ஒரு இடம் - ஒரு அழகான வாழ்க்கை" என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என அமைச்சர் மேலும் கூறினார். 


குடியிருப்பு தினத்துடன் இணைந்து, ஒக்டோபர் 01 முதல் 05 வரை தேசிய குடியேற்ற வாரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, 


ஒக்டோபர் 01-தேசிய தொடக்க விழா 


ஒக்டோபர் 02-குடியேற்ற கலாச்சார தினம் 


ஒக்டோபர் 03-குடியேற்ற மற்றும் இளைஞர் தினம் 


ஒக்டோபர் 04-சகவாழ்வு மற்றும் ஒத்துழைப்பு தினம் (அயலவர் நற்புறவு) 


ஒக்டோபர் 05-குடியேற்ற உரையாடல், கண்காட்சி மற்றும் நிறைவு விழா.




பாடசாலை மாணவர்கள் தொடர்பில்   ---- வெளியான அதிர்ச்சி தகவல்.... .... - !


No comments

Theme images by fpm. Powered by Blogger.