உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு நேர்ந்த துயரம் ...... - !
உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு நேர்ந்த துயரம் ...... - !
உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு நேர்ந்த துயரம் ...... - !
உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் சுகயீனத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிப்புக்குள்ளாகியிருந்ததாகவும் சிறுநீரக மாற்று சிகிச்சை பயனளிக்காமல் நேற்றையதினம் இரவு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற இம்மாணவன், குடும்பத்திற்கு ஒரேயொரு பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பட்டாசுகளை பயன்படுத்த தடை --- ஹக்கா மற்றும் சீன
சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஹக்கா மற்றும் சீன பட்டாசுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பட்டாசு மற்றும் பட்டாசுத் தொழிலுடன் தொடர்புடைய பொருட்களுக்கு வெளியிடப்படும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி ஹக்கா மற்றும் சீன பட்டாசுகள் எனப்படும் சட்டவிரோத வெடிபொருட்கள் தயாரிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.
விவசாய நிலங்களிலிருந்து காட்டு விலங்குகளை விரட்ட பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்த சட்டவிரோத வெடிபொருட்கள் சமீபத்திய காலங்களில் பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
மேலும், இந்த வெடிபொருட்கள் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு சவால்களையும் ஏற்படுத்தியுள்ளன என்றும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.
ஏற்கனவே தடைசெய்யப்பட்ட ஹக்கா பட்டாசுகள் மற்றும் சீன பட்டாசுகள் எனப்படும் இந்த வெடிபொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதால், இந்த நடவடிக்கைகளைத் தடுக்க நாடு முழுவதும் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் பொலிஸாருடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் நபர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது அதற்கு உதவி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாசு உற்பத்தி உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இணையத்தளம் அறிமுகம் --- முச்சக்கரவண்டிகளை பதிவு செய்ய
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பயணிகள் முச்சக்கர வண்டிகளின் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை புதிய இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் https://wptaxi.net/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம்.
முச்சக்கர வண்டிகளுக்கான பயணிகள் அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் செயல்பாட்டு மேலாளர் ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்தார்.
இந்தப் பதிவு செயல்முறை முழுமையாக இணையவழி மூலம் நடைபெறுவதால், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் இணையத்தளத்தில் தங்கள் விபரங்களைச் சமர்ப்பித்து, பதிவுக்கான நேரத்தைப் பெறலாம்.
இந்த நேரத்திற்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட பிரதேச செயலக அலுவலகங்களில் பதிவு செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
டெங்கு நோயாளர்கள் --- அதிகரிப்பு
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 38,764 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளன.
டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை வாரத்திற்கு ஒருமுறை அடையாளங்கண்டு, டெங்கு நோயை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைககளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை அவர் கோரியுள்ளார்.
ஒருவருக்கு 02 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நிலைமை நீடிக்குமாயின், உடனடியாக வைத்தியரை நாடுமாறும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
126,379 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை
செப்டம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 126,379 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களில் அதிகமானவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16,92,902 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு நேர்ந்த துயரம் ...... - !

No comments