பாடசாலை நேரங்களில் தடை........ - !
பாடசாலை நேரங்களில் தடை........ - !
பாடசாலை நேரங்களில் தடை...
பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
இதன்படி பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் வேனுடன் மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த காலப்பகுதியில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாகனங்கள் வீதியோரத்தில் முறையாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள சகல பிரதேச செயலகங்களின் ஊடாக கடந்த 4 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எல்ல பேருந்து விபத்து - உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள்......
எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் 07/09/2025 இடம்பெறது.
எல்ல பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்து தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அத்துடன், பேருந்தின் சாரதி பேருந்தை செலுத்தும்போது மதுபானம் பயன்படுத்தியிருந்தாரா என்பதை அறிய அவருடைய இரத்த மாதிரிகள் இன்று மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்படவுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பேருந்தின் பாகங்கள் நாளை அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகளவில் இணையசேவைகளில் இடையூறு...
செங்கடலில் உள்ள பல சர்வதேச ஃபைபர் ஒப்டிக் கேபிள்கள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் பயனர்களுக்கு இணைய சேவைகள் தாமதமாக கிடைப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய இணைய போக்குவரத்திற்கு செங்கடல் ஒரு முக்கியமான இடமாகும், மேலும் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான 90 சதவீத தகவல் தொடர்புகளைக் கொண்டு செல்லும் 15 க்கும் மேற்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்கள் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நுவரெலியாவிற்க்கு வரும் சுற்றுலா பயணிகள் தொடர்பில் ---- பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவுறுத்தல்...
தொடர் விடுமுறையையொட்டி நுவரெலியாவின் சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர் .
இவ்வாறு வருவோர் காலை முதல் மாலை வரை பொழுதுகளை கழித்து இரவில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணங்களை தொடர்கின்றனர். இதனால் இரவில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக நுவரெலியா - பதுளை, நுவரெலியா - கண்டி நுவரெலியா - ஹட்டன் போன்ற பிரதான வீதிகளில் செங்குத்தான வளைவுகள் மற்றும் அதிக பள்ளங்களையும் கொண்டுள்ளது இதனால் அதிகமாக வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன.
எனவே வீதி சட்ட ஒழுங்குகளை மீறுதல், மதுபானம் மற்றும் போதைவஸ்துக்களுடன் வாகனம் ஓட்டுவோர், உரிய அனுமதி இல்லாமல் வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுதல், தான்தோன்றித் தனமான வேகம் என்பவற்றால் விபத்துக்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது .
வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமைக்கு சாரதிகளின் கவனயீனமே முக்கிய காரணமாக அமைகிறது. இதில் சாரதிகள் வீதிபோக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை செலுத்துவதே வாகன விபத்துக்களுக்கு காரணம் என தொடர்ச்சியாக பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன .
எனவே நுவரெலியாவிற்கு சுற்றுலா வரும் புதிய சாரதிகள் வீதிகளின் நிலையறிந்து அவதானமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என நுவரெலியா பொலிஸார் கேட்டுக்கொள்கிறனர்.
மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை...
ஆபத்தான வகையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் வைத்தியர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஒலிகளுடன், பல வண்ணங்களில் நின்று நின்று ஔிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தமது பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை எல்ல-வெல்லவாய வீதியின் 24வது மைல்கல் அருகே எதிரே வந்த சொகுசு ஜீப்பின் பின்புறத்தில் பேருந்து மோதி, வீதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இரும்பு வேலியை உடைத்து சுமார் 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
தங்காலை நகர சபையின் ஊழியர்களும் அவர்களது உறவினர்களும் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
32 பேர் பயணித்த இந்த பேருந்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களில் 13 பேர் இன்னும் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பரிசில்கள் தருவதாக வரும் குறுஞ்செய்திகள் குறித்து ---- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...
வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் ஒரு மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான போலிச் செய்தியாகும் என பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
தனிநபரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காகவும், கைப்பேசிகளின் மென்பொருளை மாற்றியமைப்பதற்காகவும் இந்த மோசடி செய்திகள் பகிரப்படுகின்றது.
இது தொடர்பில் கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளதாக அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார்.
கைப்பேசிகள் மூலம் வங்கிச் சேவை செய்பவர்கள் இதுபோன்ற போலிச் செய்திகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பாடசாலை நேரங்களில் தடை........ - !
No comments