பாடசாலை விடுமுறை..

பாடசாலை விடுமுறை..





பாடசாலை விடுமுறை..







பாடசாலை விடுமுறை..

   

தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு மறுதினமான எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


மேற்படி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனுஆராச்சிக்கு விடுக்கப்பட்ட ஆலோசனைக்கமைய தீபாவளி தினத்திற்கு மறுநாளான எதிர்வரும் 21 ஆம் திகதி சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


மேற்படி தீபாவளி தினத்திற்கு மறுநாளான எதிர்வரும் 21ஆம் திகதி தமிழ் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்படுவதால் அதற்கு பதிலாக எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலையை நாடாத்துமாறும் மற்றும் இது சம்பந்தமாக சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனு ஆராச்சி தெரிவித்துள்ளார்.



 அரச இணையவழிச் சேவை  ---   மீட்டெடுக்க விசேட கூட்டம்




சுமார் 8 திணைக்களங்களைப் பாதித்துள்ள அரச இணையவழிச் சேவைகளை மீட்டெடுப்பதை விரைவுபடுத்த, தொடர்புடைய அதிகாரிகளின் விசேட கூட்டம் ஒன்று இன்று ( 14 ) நடைபெறவுள்ளது.

 

இந்த விசேட கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

இலங்கை அரச மேகக்கணிமை (Lanka Government Cloud - LGC) சேவையில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக, பல அரச நிறுவனங்களால் வழங்கப்படும் இணையவழி சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. 


பாதிக்கப்பட்ட சேவைகளில், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (BMD) சான்றிதழ் வழங்கும் அமைப்பு, மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (மேல் மாகாணம் தவிர்ந்த) இணையவழி வருமான வரி அனுமதிப் பத்திர முறைமை (eRL 2.0), பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் வழங்கும் அமைப்பு, வர்த்தகத் திணைக்களத்தின் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டுக்கான சான்றிதழ் வழங்கும் இணையவழி அமைப்பு, ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதியக் கட்டமைப்பு, இ-உள்ளூராட்சி அமைப்பு மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம், நிறுவனப் பதிவாளர் திணைக்களம், இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்பு சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் இணையத்தளங்களும் அடங்குகின்றன.


 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) பொறியியலாளர்களும் சேவை வழங்குநர்களும், இந்த கிளவுட் சேவைகளை விரைவில் வழமைக்குக் கொண்டு வருவதற்காகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர். 


 

இலங்கை வரும் வௌிநாட்டினருக்கு  ETA கட்டாயம்



இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization - ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


நாளை (15) முதல் இந்த அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும், அதன்படி இந்த அனுமதியைப் பெற வேண்டும். 


இதற்கிடையில், அமெரிக்கா இலங்கைக்கான அதன் பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது.


அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் நிலை (Level 2) கீழ் புதுப்பித்துள்ளது மற்றும் பல ஆபத்து குறிகாட்டிகளைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.


இலங்கையில் அமைதியின்மை, பயங்கரவாதம் மற்றும் கண்ணிவெடிகள் போன்ற பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா தனது பயண ஆலோசனை மூலம் தெரிவித்துள்ளது.




சுற்றுலாப் பயணிகளுக்கான    ---  வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்...

     


எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் பல திட்டங்களைத் தீட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 


சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான அவசர முடிவுகளை எடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடிய போது இந்த விடயம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. 


அதன்படி, சுற்றுலாப் பயணிகளுக்கு விசாக்கள் மற்றும் மின்னணு பயண அனுமதிப் பத்திரங்களை (ETAs) வழங்குவதை எளிதாக்குவது தொடர்பான விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. 


மேலும், சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வரும்போது விமான நிலையத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கான கவுண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் பல்வேறு இடங்களைப் பார்வையிடச் செல்லும் போது சுற்றுலாப் பயணிகள் டிக்கெட்டுகளை வாங்க வேண்டிய இடங்களில் ஒன்லைனில் டிக்கெட்டுகளை வாங்குவதை எளிதாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 


சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடையவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. 


வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புள்ள நிறுவனத் தலைவர்கள் ,ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கிரிஷான் பாலேந்திர, EKHO ஹொட்டல்ஸ் மற்றும் ரிசோர்ட்ஸ் நிறுவன உப தலைவர் நிஹால் முஹந்திரம் உள்ளிட்ட சுற்றுலாத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




இரு அமைச்சுக்களுக்கு   ----   புதிய செயலாளர்கள் நியமனம்..

     


துறைமுக மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் செயலாளராக இலங்கை திட்டமிடல் சேவை விசேட தர அதிகாரியான டபிள்யு. டபிள்யு. எஸ். மங்கள நியமிக்கப்பட்டுள்ளார்.


அத்தோடு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரியான டபிள்யு. எம்.டீ.ரீ. விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.


இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவினால் இன்று(15) ஜனாதிபதி செயலகத்தில் வழங்கிவைக்கப்பட்டன.


டபிள்யு. டபிள்யு. எஸ். மங்கள இதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் திட்டமிடல் ( அனர்த்த முகாமைத்துவம்) பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியதோடு டபிள்யு. எம்.டீ.ரீ. விக்ரமசிங்க பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் மேலதிகச் செயலாளராக பணியாற்றியிருந்தார்.



பாடசாலை விடுமுறை..


No comments

Theme images by fpm. Powered by Blogger.