விண்ணப்பங்கள் கோரல்...... - !
விண்ணப்பங்கள் கோரல்...... - !
விண்ணப்பங்கள் கோரல்
இலங்கை பொலிஸ் மருத்துவ சேவைகள் பிரிவுக்கு தகுதிவாய்ந்த 25 மருத்துவர்களை நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி, ஆலோசகர் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், கதிரியக்க நிபுணர்கள், மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் பல் மருத்துவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன.
விரிவான அறிவிப்பு 2025 செப்டம்பர் 26 திகதியிட்ட 2456 ஆம் எண் கொண்ட அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது,இதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி 2025, ஒக்டோபர் 27 ஆகும்.
கண்காணிப்பாளர்களாக( SSP) நியமிக்கப்படுவார்கள், அதே நேரத்தில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் பல் மருத்துவர்கள் துணை சேவை உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்களாக (ASP) நியமிக்கப்படுவார்கள்
பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
𝑰𝑻𝑴 --- மேலதிக விபரங்களை 071 8591923 அல்லது 011 2552953 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ அல்லது http://www.police.lk என்ற அதிகாரப்பூர்வ பொலிஸ் வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமாகவோ பெறலாம்.
பயணச் சீட்டு தொடர்பில் அறியப்படுத்த!
பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்று (16) மாத்திரம் 217 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவற்றில் பயணச் சீட்டுக்களை வழங்காத 18 நடத்துனர்களுக்கும், பயணச் சீட்டு இன்றி பயணித்த 5 பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளில் பயணச் சீட்டுக்களை வழங்காத நடத்துனர்கள் மற்றும் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டம் மேல் மாகாணத்தில் கடந்த முதலாம் திகதி அமுலுக்கு வந்தது.
இது தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களாக பயணிகள் மற்றும் பேருந்து நடத்துனர்களுக்கு தௌிவூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
எனினும் நேற்று முதல் அந்த சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்பதுடன் எதிர்வரும் நாட்களில் சுற்றிவளைப்புகள் இடம்பெறும் எனவும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் எனவும் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தவிடயம் தொடர்பில் கருத்து வௌியிட்ட அந்த அதிகார சபையின் தலைவர் காமினி ஜாசிங்க தெரிவிக்கையில்,
பயணிகள் தங்களுக்கு வழங்கப்படும் பேருந்து பயணச் சீட்டுக்களை பயணிக்கும் போது தம்வசம் வைத்திருக்காவிட்டால் 100 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்.
அத்துடன் பயணக் கட்டணத்தை இரு மடங்காக செலுத்தவும் வேண்டும்.
பயணக் கட்டணம் என்பது அந்த பேருந்து பயணத்தை ஆரம்பித்து பயணத்தை நிறைவு செய்யும் தூரத்திற்குரிய கட்டணமாகும்.
அதனை விடுத்து பயணிகள் ஏறிய இடத்தில் இருந்து செல்லும் தூரம் இல்லை என்பதை மறந்து விட வேண்டாம்.
அதேநேரம் நீங்கள் கேட்டும் நடத்துனர் உங்களுக்கான பயணச் சீட்டை வழங்கவில்லையாயின் 070 - 2860860 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு காமினி ஜாசிங்க தெரிவித்தார்.
இதேவேளை இது தொடர்பான சுற்றிவளைப்புகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
கால்நடைகளுக்கு தீவனமாகும் மரக்கறிகள்
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் விற்பனை குறைந்துள்ளது எனவும் தேங்கி அழுகும் மரக்கறிகள் குப்பையில் கொட்டப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் தக்காளி, லீக்ஸ், கத்தரிக்காய், வெள்ளரிக்காய், கோவா, முள்ளங்கி, பீட்ரூட், கறி மிளகாய், பச்சை மிளகாய் கரட், போஞ்சி, ஆகியவற்றின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறி விற்பனை நிலையங்களில் பாவனைக்குதவாத அழுகிய மரக்கறிகள் வர்த்தக நிலையங்களுக்கு முன் சேர்த்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை அப்புறப்படுத்த முடியாது, நகரசபையின் ஊழியர்கள் உள்ளடங்கலாகப் பலரும் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
அவற்றை காலை நேரங்களில் மட்டக்குதிரை உள்ளிட்ட சில கால்நடைகள் தீவனமாக உண்ணும் நிலை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
மரக்கறிச் செய்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், மரக்கறிகளின் சந்தைப் பெறுமதி குறைவடைந்துள்ளதால், தாம் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இலங்கைக்கு 120 ஆவது இடம்
ஊழல் அடிப்படையில் இலங்கை 120 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேல் நீதிமன்ற நீதிபதி ரங்கா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பலர் நேர்மையானவர்கள் இல்லை என்று கூறியுள்ள அவர், நாட்டில் ஊழல் அதிகரிப்பதற்கு இது ஒரு முக்கிய காரணி என்றும் கூறியுள்ளார்.
ஊழல் தடுப்புச் சட்டம் குறித்து வடமத்திய மாகாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது,
டிரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் 180 நாடுகளை அழைத்து ஊழல் குறித்த அளவுகோலை உருவாக்குகிறது. ஊழல் குறைவாக உள்ள நாடு முதலிடத்தில் உள்ளது.
ஊழல் அதிகமாகவுள்ள நாடு 180 ஆவது இடத்திலுள்ளது. இலங்கை 121ஆவது இடத்திலுள்ளது.
சில நிறுவனங்கள் இன்று பணம் செலுத்தாமல் தங்கள் வேலையைச் செய்ய முடியாது. இலஞ்சம் வாங்கியதாக முத்திரை குத்தப்பட்ட நிறுவனங்கள் கூட வந்து சொற்பொழிவுகளை வழங்குமாறு கேட்கப்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைப் பயன்படுத்தி ---- மோசடி
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் பேஸ்புக் கணக்குகளில் வெளியிடப்படும் பதிவுகளைப் பயன்படுத்தி இந்த மோசடியை மேற்கொண்டு, அதன் மூலம் பெறப்படும் பணத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் உட்கொள்வது தெரியவந்துள்ளது.
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தி, இந்தக் குழு போலி பேஸ்புக் கணக்குகளை நிர்வகித்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது.
இந்தக் கணக்குகளில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி தேவை எனக் கூறி பதிவுகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதனை பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்கள் நிதி உதவிகளை வழங்கியுள்ளனர்.
ஆனால், அந்தக் குழந்தைகளின் உறவினர்கள், பேஸ்புக்கில் பரவிய அந்தப் பதிவுகளைப் பார்த்து, விசாரணை செய்து, தங்கள் குழந்தைக்கு உதவி தேவையில்லை என அறிவித்துள்ளனர்.
நிதி உதவி வழங்கிய ஒருவர் இது தொடர்பாக முறைப்பாடு அளித்ததை அடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் ஊடாக பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப தரவுகளைப் பெற்று, சமீபத்தில் விசாரணைகளை ஆரம்பித்தது.
அதன் விளைவாக, மோசடியாக நிதி சேகரிக்கும் சிலருக்கு சொந்தமான ஆறு பேஸ்புக் கணக்குகள் கண்டறியப்பட்டன.
அதில், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு, நீண்ட காலமாக பணம் ஈட்டிய மோசடி ஒன்று செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதற்கு முன்னர், போலி கணக்குகளுக்கு பணம் செலுத்திய பல நன்கொடையாளர்களிடமிருந்து பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த மோசடியை மேற்கொண்ட மூவர் ஓபநாயக்க மற்றும் ரக்வானை பகுதிகளில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணைகளில், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக பிராரத்தனை செய்யுமாறு பல்வேறு நபர்கள் வெளியிடும் பதிவுகளின் தகவல்களைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்களின் வங்கிக் கணக்கு விபரங்களைச் சேர்த்து பதிவுகளை உருவாக்கி, பணம் சேகரித்தது தெரியவந்துள்ளது.
அந்தப் பதிவுகளைப் பார்க்கும் மக்கள், குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்திய நிலையில், மோசடிக்காரர்கள் அந்தப் பணத்தை தினசரி எடுத்து, போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விண்ணப்பங்கள் கோரல்...... - !

No comments