பரீட்சையின் பெறுபேறுகள் வௌியீடு ........ - !

 பரீட்சையின் பெறுபேறுகள் வௌியீடு ........ - !





பரீட்சையின் பெறுபேறுகள் வௌியீடு ........ - !





 பரீட்சையின் பெறுபேறுகள் வௌியீடு



2025 ஒகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 


இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்கு சென்று தேர்வு எண்ணை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பெறலாம். 


மேலும், பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பள்ளித் தேர்வுகள் அமைப்பு மற்றும் முடிவு கிளையை 1911, 0112784208, 0112784537, 0112785922 0112784422 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



18 இலட்சத்தை கடந்த  சுற்றுலாப் பயணிகள்



2025 ஆம் ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 


கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி வரையான சுற்றுலாப் பயணிகள் தொடர்பான புதிய புள்ளிவிபரங்களை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. 


அந்த புள்ளிவிபரங்களின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 75,657 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 


அதனுடன் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,801,151 ஆக உயர்ந்துள்ளது. 


நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிக எண்ணிக்கையானோர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் ஆவர். 


அந்த எண்ணிக்கை 4 இலட்சம் எல்லையை நெருங்கியுள்ளது. 


இதுவரை இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 396,274 ஆகும்.


அத்துடன், ஐக்கிய இராச்சியம் (167,886), ரஷ்யா (125,950), ஜேர்மனி (111,677) மற்றும் சீனா (108,040) ஆகிய நாடுகளிலிருந்தும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.


அதுமட்டுமின்றி, பிரான்ஸ் (90,250), அவுஸ்திரேலியா (81,040), நெதர்லாந்து (53,922) மற்றும் அமெரிக்கா (50,027) ஆகிய நாடுகளிலிருந்தும் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 


இத்தாலி (39,932), கனடா (37,606), ஸ்பெயின் (36,430), போலந்து (36,389) ஆகிய நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 


கடந்த ஆண்டு 20 இலட்சத்திற்கும் (2,053,465) அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர். 


இலங்கைக்கு இறுதியாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டு 2018 ஆகும்.


அப்போது 23 இலட்சத்திற்கும் (2,333,796) அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.


இலங்கையின் வருடாந்த சுற்றுலாப் பயணிகள் வருகை 20 இலட்சம் எல்லையை கடந்து 4 சந்தர்ப்பங்களில் உள்ளது. அதாவது 2016, 2017, 2018 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஆகும்.




நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு....

   


நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக இராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் ஆறு அடிக்கு திறந்துவிப்பட்ட நிலையில் வினாடிக்கு மொத்தம் 8,352 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 


இதேவேளை அங்கமுவ குளத்தின் இரண்டு வான் கதவுகள் தலா ஐந்து அடிக்கு திறந்துவிடப்பட்டு வினாடிக்கு 2,994 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 


மழைக்காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



 ரூபாவின் மதிப்பு 3.4 % வீதத்தினால் வீழ்ச்சி...

    


மத்திய வங்கி வெளியிட்ட வாராந்திர பொருளாதார தரவு அறிக்கையின்படி, இந்த ஆண்டு இதுவரை அமெரிக்க டாலருக்கு ரூபாயின் மதிப்பு 3.4 சதவீதம் குறைந்துள்ளது.


வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் பில்கள் மற்றும் பத்திரங்களின் ரூபாய் மதிப்பு முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் அதிகரித்துள்ளது.




தகவல்களுக்கு விசேட தொலைபேசி எண் அறிமுகம்  ---  35 மலேரியா நோயாளிகள் அடையாளம் 

  


நடப்பாண்டில் இதுவரை 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மலேரியா நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. 


2016 ஆம் ஆண்டில் இலங்கை மலேரியா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடத்திலேயே மலேரியா நோய் அடையாளம் காணப்படுவதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. 


இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் இந்தீவரி குணரத்ன, 071 284 1767 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைப்பதன் மூலம் மலேரியா தொடர்பான தகவல்களைப் பெற முடியும் என்று கூறினார்.




போர் நிறுத்தம் அமுல்



உடன் அமுலாகும் வகையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தோஹாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்ன குறித்த இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கட்டார் வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

2021 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரு அண்டை நாடுகளுக்கும் இடையேயான மோதல் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த வாரத்தில் அது மேலும் மோசமடைந்தது. 

இந்த புதிய மோதலில் பல உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இந்நிலையில் கட்டார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஒரு சுற்று பேச்சுவார்த்தைகளின் போது இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக கட்டார் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

"போர்நிறுத்தத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் அதன் செயல்படுத்தலை நம்பகமான மற்றும் நிலையான முறையில் சரிபார்க்கவும்" இரு தரப்பினரும் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்த உறுதிபூண்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




 பரீட்சையின் பெறுபேறுகள் வௌியீடு ........ - !


No comments

Theme images by fpm. Powered by Blogger.