அபாய எச்சரிக்கை ...... - !

  அபாய எச்சரிக்கை ...... - !





அபாய எச்சரிக்கை ...... - !




அபாய எச்சரிக்கை 

     


மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


மஹா ஓயா படுகை மற்றும் தெதுரு ஓயா படுகைகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


மஹா ஓயா படுகையின் சில துணை ஆறுகள் இதுவரை குறிப்பிடத்தக்க மழையைப் பெற்றுள்ளதால், மழை நிலைமை மற்றும் மஹா ஓயா படுகையிலுள்ள நீர்ப்பாசனத் திணைக்களம் பராமரிக்கப்படும் அளவிடும் கருவிகளின் நீர் மட்டங்களின் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில், அடுத்த 36 மணி நேரத்திற்குள் அலவ்வ, திவுலப்பிட்டி, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மஹா ஓயா தாழ்நில பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக திணைக்களம் எச்சரித்துள்ளது. 


இதன் காரணமாக, நீர்த்தேக்கங்களைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள், மேற்கூறிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிப்பவர்கள் மற்றும் அப்பகுதி வீதிகளை பயன்படுத்தும் அனைத்து தரப்பினரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



காவல்துறைக்கு தடியடிகளை (Batons) கொள்வனவு செய்ய கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டன.


காவல்துறைக்கு 3000 தடியடிகளை கொள்வனவு செய்ய கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன!


இலங்கை காவல்துறையினருக்குப் பயன்படுத்த, 3,000 தடியடிகளை (Batons) கொள்வனவு செய்வதற்காக கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.இலங்கை ரியல் எஸ்டேட்


நீண்ட காலமாக காவல்துறையினர் பயன்படுத்தும் தடியடிகள் கொள்வனவு செய்யப்படவில்லை என்று காவல்துறைத் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கலவரங்களைக் கட்டுப்படுத்தும் பணிகளின்போது, பொதுமக்களைக் கலைந்து செல்லச் செய்வதற்காக இந்த தடியடிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



செவ்வந்திக்கா கவலையில் சிக்கிய தக்ஷி



கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவிலில் உள்ள இஷாரா செவ்வந்தி கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 


இஷாராவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அனுமதி வழங்கிய நிலையில், சஞ்சீவ கொலைக்குப் பிறகு அவர் பல நாட்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் இடங்களை ஆய்வு செய்ய அழைத்துச் செல்லப்பட்டார். 


இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில் இஷாராவைப் போன்ற தோற்றமுடைய ஒரு இளம் பெண்ணைத் தேடிய ஜப்னா சுரேஷ், 'தக்ஷி' என்ற பெண்ணைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. 


அவருக்கு சிங்களம் பேசத் தெரியாத நிலையில், வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகவும் கூறி சுரேஷ் அந்த பெண்ணை நேபாளத்திற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 


தக்ஷிக்கு தெரியாமலேயே அவர் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.



கடலில் விழுந்த சரக்கு விமானம்



ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது. 


விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


துருக்கிய சரக்கு விமான நிறுவனமான Air ACTக்கு சொந்தமான போயிங் 747-481, எமிரேட்ஸ் EK9788 விமானமே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. 


விமான நிலைய வாகனத்தில் இருந்த இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். 


இருப்பினும், விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்கள் உயிர் பிழைத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 


பாதிக்கப்பட்ட ஓடுபாதையை மூட விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.



 மண்சரிவு எச்சரிக்கை 



8 மாவட்டங்களுக்கு இன்று (20) இரவு 9.00 மணி வரை அமுலாகும் வகையில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இதன்படி கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களில் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டு கட்டங்களின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர மற்றும் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை, யட்டியந்தோட்டை, கேகாலை, அரநாயக்க மற்றும் திஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. 


இதேவேளை, பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல, பசறை, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க, காலி மாவட்டத்தில் நாகொட, நெலுவ மற்றும் எல்பிட்டிய, கண்டி மாவட்டத்தில் உடுநுவர, தெல்தோட்டை, உடபலாத, தொலுவ, பஹததும்பர பஹத்தஹேவாஹெட்ட மற்றும் கங்க இஹலகோரல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் முதல் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மேலும், கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய, கலிகமுவ, ருவன்வெல்ல, வரகாபொல மற்றும் ரம்புக்கன, குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல, அலவ்வ, ரிதிகம மற்றும் மல்லவப்பிட்டிய, மாத்தளை மாவட்டத்தில் யடவத்த, உக்குவெல, பல்லேபொல, லக்கல, நாவுல, அம்பன்கங்ககோரயலய மற்றும் ரத்தோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


அதேநேரம், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, அம்பகமுவ, நோர்வூட் மற்றும் ஹங்குரன்கெத்த மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் கலவானை, இம்புல்பே, இரத்தினபுரி மற்றும் எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இன்று இரவு 9.00 மணி வரை அமுலாகும் வகையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.




 அபாய எச்சரிக்கை ...... - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.