ஆசிரியர் கைது ---- மாணவியின் மார்பகங்களை பிடித்து தள்ளிய ...... - !

  ஆசிரியர் கைது   ----   மாணவியின் மார்பகங்களை பிடித்து தள்ளிய ...... - !





ஆசிரியர் கைது   ----   மாணவியின் மார்பகங்களை பிடித்து தள்ளிய ...... - !




 ஆசிரியர் கைது   ----   மாணவியின் மார்பகங்களை பிடித்து தள்ளிய 




விளையாட்டு பயிற்சிகளுக்கிடையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் மார்பகங்களை பிடித்து தள்ளிவிட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.   


மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றின் விளையாட்டு துறை ஆசிரியரான 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபையின் தகவலுக்கமைய மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், பாதிக்கப்பட்ட மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 




சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு



சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிக்க பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.


பொலிஸ் தலைமையகத்தில் பொறுப்பான உயர் பதவி வகிக்கும் குறித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரை இடமாற்றம் செய்து, அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


குறித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், தாம் உட்பட உயர் அதிகாரிகள் தொடர்பில் தவறான தகவல்களை சமூக ஊடகங்களுக்கு வழங்கியமை மற்றும் பொலிஸாரின் மிகவும் இரகசியமான உள்ளக கோவைகளை வெளித் தரப்பினருக்கு வழங்கியுள்ளமை தொடர்பான தகவல்கள் வௌியானதை அடுத்தே, பொலிஸ் மா அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் எனக் கூறப்படும் ஒருவருடன் இணைந்து, பொலிஸ் மா அதிபர் மற்றும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் ஆகியோர் தொடர்பில் போலிச் செய்திகளை உருவாக்கும் ஒலிப்பதிவொன்றையும் பொலிஸ் மா அதிபர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார்.


இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் முறைப்பாடு செய்துள்ளதாக அறியமுடிகின்றது.


அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடமிருந்தும், குறித்த ஒலிப்பதிவில் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாகக் கூறப்படும் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஊடக செயற்பாட்டாளரிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.


அத்துடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடமிருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணையை  ---    ஜனவரி 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவுசெய்து, அது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார  29/10/2025 குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.


கடந்த வழக்கு தினத்தில் நீதிமன்றம் சார்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி, அதற்குப் பொறுப்பான நபர்கள் யார், அவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் அடுத்த வழக்குத் திகதியன்று நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் நீதவான் இதன்போது பணிப்புரை விடுத்தார்.


இதனையடுத்து, இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.



 வைத்தியர்கள் நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தம்....



தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்று (31) நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.  


இந்த இடமாற்ற முறைமை 30/10/2025 நடைமுறைப்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் ஏற்படக்கூடிய சேவை முடக்கத்திற்கான முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


குறித்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.



உலகின் மிக உயரமான கால்பந்து திடலை அமைக்கவுள்ள 



சவுதி அரேபியாவில் 350 மீட்டர் உயரத்தில் புதிய கால்பந்துத் திடல் அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.


46,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைப் பார்க்கும் வகையில் பிரமாண்டமாக அமையவுள்ள இந்தத் திடல், சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தியின் மூலம் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எண்ணெய் வளங்கள் மட்டுமே நிறைந்துள்ள சவுதி அரேபியா, பயணிகளைக் கவரும் வகையில் பல புதிய கட்டுமானங்களை நிறுவி வருகின்றன. அந்தவகையில், உலகம் முழுவதுமுள்ள கால்பந்து ரசிகர்களைக் கவரும் வகையில் நியோம் பகுதியில் 350 மீட்டர் உயரத்தில் கால்பந்துத் திடல் கட்ட செளதி திட்டமிட்டுள்ளது.


இதன்மூலம் உலகின் மிக உயரமான திடல் என்ற பெருமையை இது பெரும். இதற்கு நியோம் ஸ்டேடியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கவுள்ளன. 2032ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்க செளதி திட்டமிட்டுள்ளது.


2034 ஆம் ஆண்டு நடைபெறும் பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியை நியோம் ஸ்டேடியத்தில் நடத்தும் வகையில் பணிகளை முடிக்க செளதி முடிவு செய்துள்ளது.


சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சவுதி அரேபியாவின் 'விஷன் 2030' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக நியோம் ஸ்டேடியம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது



ஆசிரியர் கைது   ----   மாணவியின் மார்பகங்களை பிடித்து தள்ளிய ...... - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.