யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மீட்பு.....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்
மீட்பு.....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மீட்பு.....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளதால், மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நேற்று (30) இரண்டு மெகசின்களும வயர்களும் முதலில் அடையாளம் காணப்பட்டன.
இதையடுத்துப் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
குறித்த பொருட்களைப் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இன்று காலை அகற்றினர்.
பின்னர் மீண்டும் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடந்தபோது, அதன் அருகில் ரி-56 ரக துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், வயர்கள் உள்ளிட்ட சில மருத்துவப் பொருட்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து மீண்டும் பொலிஸாருக்கும், விசேட அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில், அப்பகுதியை முழுமையாகச் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை
நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லாஃப்ஸ் எரிவாயுவின் பணிப்பாளர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி, லாஃப்ஸ் எரிவாயுவின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நவம்பர் மாதம் முழுவதும் தற்போதைய விலையிலேயே நீடிக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது
லங்கா IOC எரிபொருள் விலைகளிலும் மாற்றம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் விலைகளுக்கு இணையாக லங்கா IOC நிறுவனமும் தமது எரிபொருள் விலைகளைத் திருத்தியுள்ளது.
அதன்படி:
299 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 294.00 ரூபாவாகும்.
313 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 318.00 ரூபாவாகும்.
335 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெற்றோலின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
277 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் வெள்ளை டீசலின் (Auto Diesel) விலையும் திருத்தப்படவில்லை.
180 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலையிலும் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முனைந்த திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது!
திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, இலஞ்ச ஆணை குழுவினால் நேற்று (31) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 500,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குச்சவெளி பிரதேச சபையின் தலைவர் முபாரக் (50) மற்றும் அவரது தனிப்பட்ட சாரதி எம்.எம். இர்ஷாத் (34) ஆகியோரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் குச்சவெளியின் இக்பால் நகர் பகுதியில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலஞ்ச ஆணைக்குழுவின் படி, பிரதேச சபைத் தலைவர் ஏற்கனவே 20 பேர்ச் காணி அனுமதிப்பத்திரத்திற்காக முறைப்பாட்டாளரிடமிருந்து 160,000 ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளார்.
பின்னர், மீதமுள்ள காணிப் பகுதிக்கு அனுமதிப்பத்திரம் வழங்க மேலதிகமாக 500,000 ரூபாவை கோரியுள்ளார்.
பிந்திய தொகையைப் பெற்றுக்கொண்டபோது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக நிலாவெளிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்்பகல் அவர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட தலைவர், அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து குச்சவெளி பிரதேச சபையை இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் (ITAK) இணைந்து கட்டுப்படுத்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
USGS தரவுகளின்படி, நிலநடுக்கம் ஏற்பட்ட பிராந்தியம் முற்றிலும் மக்கள் வசிக்காத கடல் பகுதியாகும்.
எனவே, உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை பதிவாகவில்லை.
பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாவது, இலங்கை மற்றும் இந்தியக் கடற்கரைகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதாகும்.
USGSயும் இதனை முழுமையாக உறுதி செய்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலின் டெக்டோனிக் தட்டு (Tectonic Plate) எல்லைகளுக்கு அருகில் நிகழும் வழக்கமான நில அதிர்வுகளில் ஒன்றாகும்.
இப்பகுதியில் அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் பதிவாகுவது இயல்பானது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மீட்பு.....

No comments