சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு --- வெளியான அறிவிப்பு ........ - !

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு  ---  வெளியான  அறிவிப்பு ........ - !





சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு  ---  வெளியான  அறிவிப்பு ........ - !





சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு  ---  வெளியான  அறிவிப்பு



கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்பக் காலம் ஒக்டோபர் 9 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

 

அன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு இணையவழி விண்ணப்ப முறை மூடப்படும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.


அதேநேரம் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி எந்த காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என்றும், இறுதி திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எதிருவரும் சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் இணையவழி ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.


இது தொடர்பாக ஏதேனும் வினவ வேண்டுமானால், பின்வரும் தொலைபேசி இக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்: 0112-784208/ 0112-784537/ 0112-785922.


அத்துடன் 0112-784422 என்ற தொலைநகல் எண் அல்லது gceolexansl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் வினவ முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



  எச்சரிக்கை தகவல்  ---  குரங்குகளுக்கிடையே Syphilis பக்டீரியா 




பொலன்னறுவை மற்றும் கிரித்தலே பகுதிகளில் உள்ள குரங்குகளுக்கிடையே சிபிலிஸ் (Syphilis) போன்ற பக்டீரியா தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் விலங்கு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் விலங்கு சுகாதார அதிகாரிகள் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


குரங்குகளிடையே மேற்கொள்ளப்பட்ட இரத்தம் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் மூலம் இந்த தொற்றுநோய் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக வனவிலங்கு கால்நடை வைத்தியர் நிஹால் புஷ்பகுமார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


குரங்குகளின் பிறப்புறுப்பு, தோல் மற்றும் ஆசனவாய் போன்ற உறுப்புக்களிலிருந்து இந்த தொற்று பரவக்கூடும். குரங்குகள் அசுத்தமான பகுதிகளில் இருப்பதன் காரணமாக இந்த தொற்று (Syphilis) நோய் அதிகமாக பரவக்கூடும்.


முக்கியமாக, குரங்குகள் அதிகமாக நடமாடக்கூடிய மத வழிபாட்டுத் தலங்களில் இந்த பக்டீரியாக்கள் (Syphilis) குரங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஆபத்தான நிலையும் காணப்படுகிறது.


மனிதர்களுக்கு இந்தத் தொற்று (Syphilis) பரவாமலிருக்க, குரங்குகளை நெருங்குவதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.




 புற்றுநோய்க்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பு




மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கொடிய நோய்களில் ஒன்றான புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்திவருகின்றது.


இதுபோன்ற சூழலில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம், புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது.


மனித உடலின் ஒரு பகுதியில் அசாதாரண செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி புற்றுநோய் என்று அழைக்கப்படுவதுடன், அது ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.


உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறப்பதுடன், இலங்கையில், ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை 15,000 முதல் 20,000 வரை காணப்படுகிறது.


இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, உலகளவில் மற்றும் உள்ளூர் அளவில் ஒவ்வொரு நாளும் புற்றுநோய் பரவுவதில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ள அதே நேரத்தில், புற்றுநோயை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தில் உலகின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


அதன்படி, புற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், என்டோரோமைக்ஸ் எனப்படும் வெற்றிகரமான புற்றுநோய் தடுப்பூசியை தயாரிப்பதில் ரஷ்யா சமீபத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்தது.


இந்த சூழலில், 2008 முதல் சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது.


புற்றுநோய் செல்களைக் கொல்லும் இந்த ஊட்டச்சத்து மருந்து, மூலக்கூறு உயிரியல் மற்றும் நெட்வொர்க் மருந்தியல் போன்ற நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி 05 மருத்துவ தாவரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.


வெர்னோனியா ஜெய்லானிகா, ( Vernonia zeylanica) நிஜெல்லா சாடிவா, (Nigella sativa) ஹெமிடெஸ்மஸ் இண்டிகஸ், (Hemidesmus indicus) லூகாஸ் ஜெய்லானிகா (Leucas zeylanica)மற்றும் ஸ்மைலாக்ஸ் கிளாப்ரா (Smilax glabra) ஆகிய தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மருந்துகளின் கலவையானது புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடும் என்று பேராசிரியர் சமீரா ஆர். சமரக்கோன் உள்ளிட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ள குழுவினர் கூறுகின்றனர்.




 ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் -- ஒரு கோடி பெறுமதியான




கட்டுநாயக்க விமான நிலையத்தின் வழியாக சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக கொண்டு சென்றதாகக் கூறப்படும் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கைடயக்க தொலைபேசிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் நான்கு பேரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இரு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


சந்தேகநபர்களிடம் இருந்து 26 ஸ்மார்ட் போன்கள், 10 ஐபேட்கள், 10 டெப்கள், 3 மடிக்கணினிகள், பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் கிரீம்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. 


மாளிகாவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசேதகர் டி.பி.எஸ். கல்யாணதுங்கவுக்கு கிடைத்த தகவலின்படி, மாளிகாவத்தை ரம்யா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஒரு வீட்டிலிருந்து இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 


கடந்த 30 ஆம் திகதி டுபாய்க்குச் சென்ற சந்தேகநபர்கள், நேற்று (2) நாடு திரும்பியபோது, ​​இந்தப் பொருட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மாளிகாவத்தை மற்றும் கொச்சிக்கடை பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 


சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




 கோர விபத்து - ஐவர் வைத்தியசாலையில்




தனமல்வில-வெல்லவாய வீதியில் கிதுல்கோட்டை பகுதியில் இன்று (03) காலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். 


தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற வேனின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் வாகனம் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியுள்ளது. 


விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி உட்பட ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். 


அவிசாவளை பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிக்காக சென்று மீண்டும் புத்தளவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த குழுவே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளது. 


வேனின் சாரதிக்கு 18 வயது என்பதுடன், இறந்தவர் தம்புள்ளையைச் சேர்ந்த 56 வயதானவர் என தெரியவந்துள்ளது. 


காயமடைந்தவர்கள் தனமல்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கவலைக்கிடமாக இருந்த மூன்று பேர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். 


காயமடைந்தவர்கள் 23, 35 மற்றும் 49 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். 


விபத்து குறித்து தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு  ---  வெளியான  அறிவிப்பு ........ - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.