வட்ஸ் அப் (WhatsApp) மோசடிகள் --- நாட்டில் அதிகரிப்பு ........ - !
வட்ஸ் அப் (WhatsApp) மோசடிகள் --- நாட்டில் அதிகரிப்பு ........ - !
வட்ஸ் அப் (WhatsApp) மோசடிகள் --- நாட்டில் அதிகரிப்பு
வட்ஸ் அப் மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
மலிவு விலையில் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்வதாகக் கூறி செய்திகளைப் பெறும் குழுக்கள் மூலம் மோசடி செய்யப்படுவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒன்லைனில் கலந்துரையாடலுக்காக சூம் இணைப்பு வழியாக குறியீட்டைப் பெறுவது எனும் போர்வையில் வட்ஸ் அப் கணக்குகளுக்கு ஊடுருவல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் குழுவிலுள்ள ஏனையவர்களுக்கும் செய்திகள் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுவதும் தெரிய வந்துள்ளது.
ஒருவரின் வட்ஸ் அப் கணக்கு ஊடுருவப்பட்டால், அவர்கள் வணிகம் செய்யும் வங்கியைத் தொடர்புகொண்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி தொடர்பிலான தொலைபேசி எண்கள் அல்லது பரிவர்த்தனைகளின் நகல்கள் இருப்பின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்க வேண்டுமெனவும் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க - கொழும்பு இடையே விமானப் பயணம் ஆரம்பம்...
பேர வாவியை நீர் விமான நிலையமாகப் (water Aerodrome) பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையில் பயணிக்கும் விமான சேவை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இன்று (03) நடைபெற்றது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், உள்நாட்டு விமானங்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் மற்றொரு படியாகவும் இந்த கொழும்பு - கட்டுநாயக்க விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் நீர் விமானப் பயணங்களை மேற்கொள்ளும் சினமன் எயார் லைன்ஸ், இந்த கொழும்பு - கட்டுநாயக்க விமானப் பயணங்களை மேற்கொள்ளும். இந்த புதிய விமான சேவையின் ஊடாக, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்கள் குறுகிய காலத்தில் கொழும்பு நகரத்திற்கு விரைவாகவும் வசதியாகவும் பயணிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இந்தியா - சீனா இடையே ---- நேரடி விமான சேவை...
இந்தியா - சீனா இடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி விமான சேவை ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் தொடங்கப்படுகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் இந்தியா - சீனா இடையே விமான சேவை இரத்து செய்யப்பட்டது. அதே ஆண்டு ஜூன் 15ஆம் திகதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா இராணுவ வீரர்கள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள், சீன தரப்பில் 45 பேர் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இரு நாடுகள் இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகம் முழுவதும் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால், இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படவில்லை. சர்வதேச அரங்கில் இரு நாடுகளும் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்தன. கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் போர் நடைபெற்றது. அப்போதுகூட பாகிஸ்தானுக்கு இராணுவ ரீதியாக சீனா பல்வேறு உதவிகளை செய்தது.
இந்த நிலையில், அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை சர்வதேச அளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதாக குற்றம்சாட்டி இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்தார். அமெரிக்காவின் புதிய வரி விகிதம் கடந்த ஒகஸ்ட் மாதம் அமலுக்கு வந்தது.
இந்த சூழலில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சமீபத்தில் இரகசிய கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், ‘சர்வதேச விவகாரங்களில் இந்தியாவும், சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். அமெரிக்காவின் வரிவிதிப்பு போரை தடுத்து நிறுத்த வேண்டும்’என்று அழைப்பு விடுத்திருந்தார்.
மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு சீன ஜனாதிபதி சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, கடந்த ஒகஸ்ட் இறுதியில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அப்போது பேசிய மோடி, “இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகள்தான், எதிரிகள் அல்ல” என்று கூறியுள்ளார். இதே கருத்தை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் வழிமொழிந்தார்.
உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும், ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தா - சீனாவின் குவாங்சூ நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை ஒக்டோபர் 26ஆம் திகதி தொடங்கவுள்ளது.
‘இரு நாடுகளின் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் சமீபத்தில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எட்டப்பட்ட முடிவின்படி, அக்டோபர் இறுதியில் இரு நாடுகள் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது’ என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு முன்பாக இந்தியா - சீனா இடையே மாதம்தோறும் 539 நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. எயார் இந்தியா, சீனா சதர்ன் எயார்லைன்ஸ், சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் நிறுவனங்கள் பயணிகள், சரக்கு விமானங்களை இயக்கியுள்ளன. இதன் மூலம் மாதம்தோறும் இரு நாடுகளை சேர்ந்த 1.25 இலட்சம் பேர் விமான பயணம் மேற்கொண்டனர்.
கொரோனா காலத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன்பிறகு, சீனா செல்ல வேண்டிய இந்திய விமான பயணிகள் பங்களாதேசம், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் வழியாக சீன நகரங்களுக்கு சென்றனர். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் கடிதம் காரணமாக இந்தியா, சீன உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. படிப்படியாக டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் சீன நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படும்.
இதேபோல சீன தலைநகர் பெய்ஜிங், அந்த நாட்டின் வர்த்தக தலைநகர் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவைகள் தொடங்கப்படும். தற்போது டெல்லியில் இருந்து வேறு நாடுகள் வழியாக பெய்ஜிங் செல்ல ரூ.20,000 விமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேரடி விமான சேவை தொடங்கப்படுவதால் இந்த கட்டணம் 20 சதவீதம் வரை குறையும். பயண நேரமும் குறையுமென தெரிவித்துள்ளது.
வடிகாணில் இருந்து புதிதாகப் பிறந்த சிசு ஒன்று மீட்பு
மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில்,
புதிதாகப் பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டது.
சிசு, மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிசுவின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
கந்தேனுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இப்பலோகம பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார ஊழியரின் வீட்டில், முன் நாற்காலியில் வைக்கப்பட்ட நிலையில் ஒரு மாதம் வயதுடைய சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த சிசு, நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறந்த உடல் ஆரோக்கியத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த விடயத்தை ஆய்வு செய்து பொருத்தமான திட்டத்தை முன்வைக்க தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதி பத்திரங்களைப் பெறும்போது விண்ணப்பதாரர்களின் வயது மற்றும் உடல் தகுதியைக் கருத்தில் கொண்டு, சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளுக்கு மேல் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சு
நடுத்தர வயது மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களுக்கான புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்க வரும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்ற காலத்திற்கு செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், இது ஒரு முடிவு அல்ல, ஒரு திட்டம் மட்டுமே என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அது கனரக வாகன ஓட்டுநர்களுக்குப் பொருந்தாது. கனரக வாகன ஓட்டுநர்கள் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் தங்கள் சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
மருத்துவ உடற்தகுதி சான்றிதழ்
மேலும், ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதற்கு அவசியமான தேசிய போக்குவரத்து மருத்துவ உடற்தகுதி சான்றிதழ் அச்சிடுவதை நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உடற்தகுதி சான்றிதழை ஒன்லைன் டிஜிட்டல் அமைப்பு மூலம் மோட்டார் வாகன திணைக்களத்திற்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உடற்தகுதி சான்றிதழை அச்சிடுவதற்கு அரசாங்கம் ஆண்டுக்கு 50 மில்லியன் ரூபாய் செலவிடுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வட்ஸ் அப் (WhatsApp) மோசடிகள் --- நாட்டில் அதிகரிப்பு ........ - !

No comments