பாடசாலை மாணவணுக்கு நேர்ந்த கதி........ - !
பாடசாலை மாணவணுக்கு நேர்ந்த கதி........ - !
பாடசாலை மாணவணுக்கு நேர்ந்த கதி........ - !
நீச்சல் குளத்தில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்கச் சென்ற பாடசாலை மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
குறித்த மாணவர் பாடசாலை மைதானத்தில் ஏனைய மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, அதே பாடசாலையின் நீச்சல் குளத்தில் கிரிக்கெட் பந்து விழுந்த நிலையில், அதை எடுக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.
திக்வெல்ல விஜித மகா வித்தியாலயத்தில் 12 ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த 17 வயதான பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
சடலம் பதிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதி மாளிகைகளுக்கு 8 கோடி ரூபாய் செலவு!
ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, இலங்கையின் எட்டு ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்காகக் கடந்த 2024 ஆம் ஆண்டில் மாத்திரம் 8 கோடியே ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 422 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
வருடாந்த செயலாற்றுகை அறிக்கையில் உள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்தத் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மாளிகைகள் யாழ்ப்பாணம், அநுராதபுரம், கண்டி, மஹியங்கனை, நுவரெலியா, கதிர்காமம், பெந்தோட்டை, மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.
இந்த எட்டு மாளிகைகளிலும் 392 பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் 16 சிவில் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு கிழக்கு மாகாணம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் – வைத்தியர்கள் எச்சரிக்கை
அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு, அடுத்த வாரத்தில் இருந்து கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரிபடுத்தப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
பணிப்புறக்கணிப்புக்கு காரணமாக அமைந்த தெஹியத்தகண்டிய மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்களின் இடமாற்றம், உரிய நடைமுறைக்கு அப்பால் செயற்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க சுகாதார அமைச்சின் செயலாளர் கடந்த 2ஆம் திகதி நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்திருந்தார்.
எனினும், அந்தக் குழுவின் அறிக்கை இதுவரை சுகாதார அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை எனச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.
மிகச் சிறிய பிரச்சினையைக் கூட சுகாதார அமைச்சினால் தீர்க்க முடியாமல் இருப்பது, மருத்துவர்களின் இடமாற்றத் திட்டத்தின் பின்னால் அரசியல் தலையீடு உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கு முன்பும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து நிறைவேற்றுக் குழு கூடி அன்றைய தினமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கும் என்றும் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.
தற்போது அம்பாறை மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்
பல மாதங்கள் காத்திருந்து சத்திரசிகிச்சைக்கான திகதிகளைப் பெற்ற நோயாளர்கள் பெரும் சிரமத்துக்கும், உயிர் ஆபத்துக்கும் உள்ளாகியுள்ளதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் --- திருட்டு
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை அதிகாலை இந்த பறவைகள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பறவைகள் வைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்து புறாக்கள் திருடப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழக்குப் பொருட்களாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் புறாக்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கையாக மிருகக்காட்சிசாலையில் பறவைகள் வைக்கப்பட்டிருந்த பிரிவின் பொறுப்பதிகாரியை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், இந்தத் திருட்டில் ஈடுபட்ட நபர் அல்லது திருடப்பட்ட புறாக்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விடயம் குறித்து தெஹிவளை பொலிஸாரும் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
கருப்புப்பட்டி அணிந்து பணியில் ஈடுபடவுள்ள
தபால் மா அதிபர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தபால் பணியாளர்களும் எதிர்வரும் 9 ஆம் திகதி கருப்புப்பட்டி அணிந்து பணியில் ஈடுபடவுள்ளதாக, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷண தெரிவித்துள்ளார்.
அத்துடன், தபால் பணியாளர்கள், முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவை பெற்றுள்ளதாக தபால் மா அதிபர் வெளியிட்டுள்ள கருத்துக்கு, தபால் தொழிற்சங்க ஒன்றியம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
தபால் மா அதிபரால் எந்தவொரு விசாரணையும் இல்லாமல் பணியாளர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கடுமையாக எதிர்ப்பதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்
பாடசாலை மாணவணுக்கு நேர்ந்த கதி........ - !

No comments