G.C.E.O/L இணையவழி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் காலம்........ - !
G.C.E.O/L இணையவழி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் காலம்........ - !
G.C.E.O/L இணையவழி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் காலம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதியுடன் நிறைவடையும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு இணையவழி விண்ணப்ப முறை மூடப்படும் எனவும், எந்தவொரு காரணத்திற்கும் இறுதி நாளை நீடிக்கமாட்டோம் எனவும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. ஆகையால், மாணவர்கள் அனைவரும் கடைசி நேரம் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்: 0112-784208/0112-784537/0112-785922.
அத்துடன், 0112-784422 என்ற தொலைநகல் எண் அல்லது gceolexansl@gmail.comஎன்ற மின்னஞ்சல் மூலமாகவும் வினவல்கள் செய்யலாம் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை ...
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்னல் தொடர்பான சேதங்களைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்க்கவும் தெரிவித்துள்ளது.
திறந்தவெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகளில் இருந்து விலகி இருக்கவும், கம்பி தொலைபேசிகள், மின் சாதனங்கள் மற்றும் மிதிவண்டிகள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகின்றது. விழுந்த மரங்கள் மற்றும் மின் இணைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நாடு முழுதும் 1000 வீடுகள் வழங்கி வைப்பு --- வசதி குறைந்த குடும்பங்களுக்கு
உலக வாழிட தின தேசிய கொண்டாட்ட விழா ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக வாழிட தினத்துடன் இணைந்து, “தம்முடைய இடம் – அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளின் கீழ் இந்த தேசிய கொண்டாட்டம் நடைபெற்றது. இதனுடன் இணைந்து, அக்டோபர் 1 முதல் 5 வரை வாழிட வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
நிதி வசதியில்லாத ஏறத்தாழ 4,000 வறிய குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தருவதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையால் செயல்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட ஆயிரம் வீடுகள் மக்களின் உரிமைக்கு வழங்கப்பட்டன. இந்த வீடுகளை ஜனாதிபதி மின்னணு தொழில்நுட்பம் மூலம் பொதுமக்களுக்கு உரிமையாக்கினார்.
ஐ.நா. வாழிட அமைப்பின் இலங்கை அலுவலகத்தின் மத்தியஸ்தத்துடன், இந்திய அரசாங்கத்தின் ஆதரவிலும், பேரிடர் மீட்பு உள்கட்டமைப்பு கூட்டமைப்பு (CDRI) ஆதரவிலும், அம்பதலே நீர் வழங்கல் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டவாறு, அதன் அடையாளமாக பிரதானப்படுத்தல் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.
பல்வேறு காரணங்களால் தாமதமான வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், ஆயிரம் பயனாளிகளுக்கு உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. இதில் 357 பயனாளிகளுக்கு அடையாளமாக வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. மேலும், வீடு கட்டுவதற்கு பொருளாதார வசதியில்லாத ஆயிரம் வறிய குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 157 பேருக்கு அடையாளமாக காசோலைகள் வழங்கப்பட்டன.
உலக வாழிட தினத்தை முன்னிட்டு தீவு முழுவதும் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், நகர அபிவிருத்தி அதிகார சபையால் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குவதற்கு ஜனாதிபதி இணைந்தார்.
இதனிடையே, உலக வாழிட தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் கலைத் திறன்களை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஓவியக் கண்காட்சியையும், வீட்டு வடிவமைப்பு தொடர்பான படைப்புகள் அடங்கிய கண்காட்சியையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
இந்த விழாவில் உரையாற்றிய நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க, நாட்டு மக்களின் வீட்டு கனவை நனவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் பரந்துபட்ட திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
பண்டிகையை முன்னிட்டு காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் நாளாந்தம் சேவையில்
காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து நாட்களிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதி முதல் இந்த மாதம் 28ஆம் திகதி வரையில் நாளாந்தம் குறித்த கப்பல் சேவை இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் செவ்வாய்க் கிழமை தவிர்ந்த வாரத்தின் ஏனைய ஆறு நாட்களும் குறித்த சேவை இடம்பெற்றுவந்தது.
இந்நிலையில் பண்டிகை காலத்தில் அனைத்து நாட்களிலும் சேவையை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் இக்கப்பல் சேவையில் தீர்வை அற்ற கடைத் தொகுதியும் ( Duty free) புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஃபேஷன் ஷோ
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கண்டியில் ‘கண்டி தென்றல் இரவு’ (Kandy Breeze Night) என்ற நிகழ்வு வாரம் தோரும் இடம் பெறுகிறது.
இதில் தேசிய கைவினைப் பொருட்கள் வடிவமைப்பு போட்டி, ஃபேஷன் ஷோ, இசை நிகழ்ச்சி போன்ற பல விடயங்கள் இவ்வாரம் இடம் பெற்றது.
மத்திய மாகாண தொழில்துறை அபிவிருத்தி மற்றும் வணிக ஊக்குவிப்புத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் கலந்து கொண்டார்.
மேலும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண, கண்டி மேயர் சந்திரசிறி விஜேநாயக்க, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சரித்த இலங்கக்கோன், மத்திய மாகாண கைத்தொழில் மேம்பாடு மற்றும் வணிக மேம்பாட்டுத் துறையின் பணிப்பாளர் உதார கொன்சிவத்த, பிரதிப் பணிப்பாளர் வித்தி அமரகோன் ஆகியோர் சிறப்பு ,திதிகளாகக் கலந்து கொண்டனர்.

No comments