2025 தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிக்க வர்த்தமானி வெளியானது.....!
2025 தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிக்க வர்த்தமானி வெளியானது.....!
2025 தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிக்க வர்த்தமானி வெளியானது
GCE AL 2023/2024
19 Colleges
Online Application
Application for National College of Education Teacher Training Programme 2025
College of Education Teacher Training Programme – Application for the National College of Education (GCE.A/L 2023 & 2024)
ONLINE APPLICATION ---- CLICK HERE
DOWNLOAD GAZETTE(ENGLISH) --- CLICK HERE
DOWNLOAD GAZETTE(TAMIL) ---- CLICK HERE
தொழிற்கல்வி குறித்து --- தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கம்....!!
இடைநிலைக் கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்கு மாறுவது குறித்து மாணவர்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக ‘1966’ என்ற இலக்கம் இன்று (7) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டியிலுள்ள நிபுணத பியச வளாகத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரான பிரதமர் ஹரினி அமரசூரியவின் தலைமையில் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த ‘1966’ துரித இலக்கத்தின் மூலம், மாணவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தொழிற்கல்வி தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் மேம்பட்ட சேவைக்காக, அமைச்சின் தொழில்நுட்ப அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட, தொழிற்கல்வி தொடர்பான எந்தவொரு கேள்விகளுக்கும் தீர்வுகளை வழங்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) ஆற்றல் கொண்ட ஒரு செட்போட்டுடனும் (Chatbot) உரையாட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய பாவனையாளர்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை...
இணைய நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக டெலிகிராம் / வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி இந்த நிதி மோசடிகள் பதிவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் தனிநபர்களை ஏமாற்றி அவர்களின் கணக்கு எண்கள், கடவுச்சொற்கள் (பயனர் பெயர் / கடவுச்சொல்), QR குறியீடுகள் போன்ற இரகசிய தகவல்களை பெறுவது கவனிக்கப்பட்டுள்ளது.
இணைய வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி அல்லது பிற கணக்குகளுக்கு பணத்தை வரவு வைப்பதன் மூலம் அவர்கள் பெரும்பாலும் மோசடிகளைச் செய்வதைக் கவனித்துள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில், ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்புகள் மற்றும் உயர்கல்விக்கான வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி இணையத்தில் மில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இணையத்தைப் பயன்படுத்தும் போது இதுபோன்ற மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் போன்ற அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே வேலைவாய்ப்பு அல்லது கல்வி வாய்ப்புகளைப் பெறவும் பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றது.
இணையத்தைப் பயன்படுத்தும் போது, பிற வருமான ஆதாரங்களை வழங்குவதாகக் கூறி, சமூக ஊடகக் கணக்குகளில் (டெலிகிராம் / வாட்ஸ்அப் அல்லது பிற) தெரியாத நபர்கள் அல்லது தெரியாத சமூக ஊடகக் குழுக்கள் செய்யும் மோசடி அறிக்கைகள் அல்லது செயல்களால் ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெரியாத நபர்கள் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள் இடுகையிடும் இணைய நீட்டிப்புகள் மற்றும் QR குறியீடுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகின்றது.
தெரியாத நபர்களின் கணக்குகளுக்கு பணத்தை வரவு வைப்பது, அவர்களுடன் வங்கித் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது மற்றும் ஒருவரின் வங்கிக் கணக்கை மற்றவர்களுக்குப் பயன்படுத்த அனுமதி வழங்குவதைத் தவிர்க்குமாறு சுட்டிக்காட்டப்படுகின்றது.
எந்த சூழ்நிலையிலும் கணக்கு எண்கள், கடவுச்சொற்கள் மற்றும் OTP குறியீடுகளை வெளியாட்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதும் முக்கியம்.
மொபைல் பயன்பாடுகளை நிறுவும் போதும், தெரியாத நபர்களால் வழங்கப்படும் இணைய நீட்டிப்புகளைப் பயன்படுத்தும் போதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதணி வவுச்சர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு...
250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப் பதிலாக, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, உயர்தர பாதணிகளை வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள 1,266 பாடசாலைகளைச் சேர்ந்த 145,723 மாணவர்களுக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பாதணிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஜோடி உள்ளூர் பாதணியை 2,100 ரூபாய் செலவில், ஒரு வருட உத்தரவாதத்துடன் வழங்க உள்ளூர் உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதன் ஊடாக அரசாங்கத்திற்கு சுமார் 140 மில்லியன் ரூபாய் இலாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனூடாக குறித்த இரண்டு மாகாணங்களிலுமுள்ள மேலும் 62,481 மாணவர்களுக்கு பாதணிகளை பெற்றுக் கொடுக்க முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினை
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எடைக் குறைவு 17 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குடும்ப சுகாதாரப் பணியகத்தின் ஊட்டச்சத்து தரவுகள் தெரிவிக்கின்றன.
2023 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 17.1 சதவீதமாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் 17 சதவீதமாக பதிவாகியுள்ளது. அதற்கு முன்னர் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் முறையே 12.2 சதவீதம் மற்றும் 15.3 சதவீதமாக இருந்தது.
இருப்பினும், 2016 மற்றும் 2021 க்கு இடையில் படிப்படியான வீழ்ச்சி காணப்பட்டது.
2016 இல் 15.6 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை 2020 இல் 13.1 சதவீதமாகவும், 2021 இல் 12.2 சதவீதமாகவும் குறைந்தது என்று பணியகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே காணப்படும் உடல் மெலிவு (wasting) பரவலில் ஏற்ற இறக்கங்கள் இருந்ததை இந்தத் தரவு சுட்டிக்காட்டுகிறது.
2016இல் 11.3 சதவீதமாக இருந்த உடல் மெலிவு வீதம், 8.2 சதவீதமாகக் குறைந்து, பின்னர் 2022 இல் மீண்டும் 10.1 சதவீதமாக உயர்ந்தது.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டளவில், இந்த சதவீதம் 9.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதற்கிடையில், கடுமையான உடல் மெலிவு அல்லது கடுமையான தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சதவீதமானது, பல ஆண்டுகளாகப் படிப்படியாகக் குறைந்துள்ளது.

No comments