பாடசாலை விடுமுறை பற்றி .....!
பாடசாலை விடுமுறை பற்றி .....!
பாடசாலை விடுமுறை பற்றி
அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் 07 / 11 / 202 தினத்துடன் நிறைவடையவுள்ளது.
அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 08ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 24ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் விற்பனை தொடர்பில் பாரிய மோசடி அம்பலம்
இணையத்தில் ஆடைகள் விற்பனை செய்வதாக கூறி 10 மில்லியன் ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரிவு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் ஹபரணையை சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை, பின்வத்த, மீகஹகோவில வீதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும் சந்தேக நபரின் வங்கி கணக்கில் ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக வங்கி பதிவுகள் தெரிவிக்கின்றன.
டெலிகிராம் செயலி மூலம் மதிப்புமிக்க ஆடைகள் இணையத்தில் விற்கப்படுவதாகவும், இணைப்பை கிளிக் செய்ததால் பல லட்சம் ரூபாய் பரிசை வென்றுள்ளதாகவும் குறுந்தகவல் அனுப்பப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அதனை பெற ஒரு தொகை பணத்தை வைப்பு செய்துள்ளார். மேலும் பல சந்தர்ப்பங்களில், அவ்வப்போது அவரை தவறாக வழிநடத்தி, தொடர்புடைய இலக்கு தொகையை பெற 10 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மேலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வித்தியா கொலை -- மனு மீதான விசாரணை நிறைவு
2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை 06/11/202 நிறைவடைந்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்காகக் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உட்பட ஏனைய பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணையே இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
பிரதம நீதியரசர் பிரித்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அரச சேவையில் --- 72,000 புதிய வேலைவாய்ப்புகள்
அரச சேவைக்கு 72,000 புதிய பணியாளர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
அதற்கமைய, ஒவ்வொரு துறைகளுக்கும் தேவையான ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரத் துறைக்கு 9,000 நியமனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 7,200 வெற்றிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எஞ்சிய தொகை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் சேவையின் தேவைக் கருதாது, அரசியல் ரீதியான நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
ஆட்சேர்ப்பு செயல்பாட்டில் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வருடத்தில் --- நீரில் மூழ்கி 230 பேர் உயிரிழப்பு
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி 230 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
05/11/202 சிலாபம் - தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற 05 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
_
களனி கங்கையில் ---- தவறி வீழ்ந்து இளம் பெண்
களனி கங்கையில் தவறி வீழ்ந்து 21 வயதுடைய இளம் பெண் உயிரிழந்துள்ளார்
குறித்த பெண் பெண் முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக வாளியில் நீரை எடுக்க முற்பட்ட போதே கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த தெரிவிக்கப்படுகிறது
நுவரெலியா, பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஐந்து பேர் கொண்ட குழுவினர், கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வழியில், முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக கோகிலவத்தை பகுதியில் களனி கங்கை அருகே உள்ள வாகனங்களை கழுவும் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
அப்போது, முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக ஆற்றில் இருந்து வாளியில் தண்ணீர் எடுக்க முற்பட்ட குறித்த இளம் பெண், எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதைப் பார்த்த அவருடைய 25 வயதுடைய காதலன், அவரைக் காப்பாற்றும் நோக்குடன் உடனடியாக ஆற்றுக்குள் குதித்துள்ளார்.
காதலன் அவருடன் வந்த குழுவினரால் பத்திரமாக மீட்க மீட்கப்பட்ட போதிலும் ஆற்றில் மூழ்கிய இளம் பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து கோகிலவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments