மாணவர்களுக்கு இலவச முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை .....!
மாணவர்களுக்கு இலவச முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை .....!
மாணவர்களுக்கு இலவச முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை
வடக்கிலுள்ள மாணவர்களுக்கு கண்பரிசோதனைகளை நடத்தி தேவையான மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தெளிந்த பார்வை, பிரகாசமான எதிர்காலம் என்ற தொனிப்பொருளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவான கண் பரிசோதனை திட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் பிரிவு ஆலோசகர் மருத்துவ நிபுணர் எம்.மலரவன் தலைமையில் வட மாகாணம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று (31) இடம்பெற்றுள்ளது.
ஊடக சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் மருத்துவ நிபுணர் எம்.மலரவன் ஆகியோர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாத் துறைக்கு புதிய உத்வேகம் ---- மீண்டும் சேவைகளை ஆரம்பித்த போலந்து Enter Air
போலந்து நாட்டின் பட்டய விமான சேவை நிறுவனமான ‘எண்டர் ஏர்’ (Enter Air), இன்றுடன் இலங்கைக்குத் தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
போலந்தின் கடோவிஸ் மற்றும் வார்சா நகரங்களில் இருந்து இரண்டு விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
விமானத்தில் வந்திறங்கிய பயணிகளுக்கு, இலங்கைக்கே உரித்தான பாரம்பரிய இலங்கை விருந்தோம்பலுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) தகவல்படி, போலந்தின் கடோவிஸ் (Katowice) மற்றும் வார்சா (Warsaw) ஆகிய நகரங்களிலிருந்து வந்த இரண்டு ‘எண்டர் ஏர்’ விமானங்களும் குளிர்காலத்துக்கான (Winter Season) சேவைப் பயணத்தின் முதல் விமானங்களாக நேற்று காலை வரவேற்கப்பட்டன.
இந்த வரவேற்பை சிறப்பிக்கும் வகையில், விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம் (AASL) ஏற்பாடு செய்திருந்த நீர்த் தாரை பீரங்கி மரியாதை (Water Cannon Salute) அளிக்கப்பட்டது.
அத்துடன், இலங்கைத் தேயிலைச் சபையின் (Sri Lanka Tea Board) அனுசரணையுடன், பயணிகளுக்கு உயர்தரமான சிலோன் தேயிலைப் பொதிகள் (Premium Ceylon Tea packs) பரிசுகளாக வழங்கப்பட்டன.
போலந்தில் இருந்து விமானங்கள் மீளவும் வந்திருப்பது, ஐரோப்பிய சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்குச் சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
போலந்து Enter Air சேவை மீள ஆரம்பித்ததுடன், இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது.
முச்சக்கர --- கட்டணங்கள் திருத்தப்படாது
எரிபொருள் விலைச் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர கருத்துத் தெரிவிக்கையில், லங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவால் குறைத்திருந்தாலும், அதன் பயன் நுகர்வோருக்குச் சென்றடையாது என்று குறிப்பிட்டார்.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவால்
குறைக்கப்பட்டது. இதன்படி, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோலின் புதிய விலை 294 ரூபாவாகும்.
எவ்வாறாயினும், ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என லங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த எரிபொருள் விலை திருத்தம் குறித்து கருத்து தெரிவித்த அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர அவர்கள்,
"நாங்கள் இந்த வழியில் நாற்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் வந்துவிட்டோம். மேல் மாகாண சபையின் இறுதிக் கட்டணத் தீர்மானம் என்ன?
அதிகபட்சம் முதல் கிலோமீற்றருக்கு 100 ரூபாய். இரண்டாவது கிலோமீற்றருக்கு 85 ரூபாய். இந்தக் கட்டணத்தில் ஓட்டும் ஒரு நியாயமான தரப்பினர் உள்ளனர்.
சிலரிடம் கேட்டால், 100 ரூபாய்க்கு ஓடுகிறோம் என்று சொல்கிறார்கள். பொதுமக்கள் குறை கூறுகிறார்கள்; சுரண்டல் நடக்கிறது.
நாங்கள் தொடர்ந்து நகைப்புக்குரியவர்களாக இருக்கத் தயாராக இல்லை.
ஒரு வலுவான ஒழுங்குமுறையின் கீழ் விலை கட்டுப்பாடு செய்யப்பட்டால், அது ஒரு சட்டமாக மாறும்.
சுற்றுவட்டாரத்திற்குச் செல்வது முக்கியமில்லை, ஒரு நிலையான விலை சூத்திரத்தின் படி சரியான கட்டணத்தைச் சொல்லி, மக்களுக்கு அதைத் தெரியப்படுத்தினால், தற்போதுள்ள அனைத்து மோசடிகளையும் சமன் செய்து இதைத் தொடர முடியும்.
இந்த முறையும் கட்டணத்தில் மாற்றம் இல்லை. அடுத்த முறை விலை குறைந்தாலும், அதிகரித்தாலும் திருத்தம் செய்ய மாட்டோம்," என்று அவர் தெரிவித்தார்.
ஆழ்கடலில் மீன்பிடிப் படகு ஒன்று சுற்றிவளைப்பு
போதைப்பொருள் தொகை ஒன்றை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் மேற்குப் பக்கமாக ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இந்தப் பல நாள் மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய குறித்த மீன்பிடிப் படகு தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியதார்களுக்கு வெளியான --- முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு!
ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களின் வசதிக்காகவும் மற்றும் அதிக பலன்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் தொழிலாளர் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில், முக்கிய சில விடயங்களைத் திருத்த முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில்,
1. அபராதம் மற்றும் அபராதம் அறவிடும் பொறிமுறையை மேலும் வினைத்திறன்மிக்க நிலைக்குக் கொண்டு வருதல்.
2. வர்த்தக வங்கிகளுக்குப் பதிலாக, ஊழியர் சேமலாப நிதியம் ஊடாக அதன் உறுப்பினர்களுக்குக் கடனுதவி வசதிகளை வழங்குதல்.
3. ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பில் தற்போதுள்ள சமத்துவமின்மையை நீக்குதல்.
போன்ற விடங்களில் மாற்றம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க மற்றும் இலங்கை முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இது தொடர்பில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், முதலாளிகளிடமிருந்து அபராதம் அறவிடும் பொறிமுறையானது சிக்கலற்றதாக இருக்க வேண்டும் என்றும் மற்றும் இதன் மூலம் உரிய அபராதங்களை துரிதமாக அறவிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அப்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான நம்பிக்கையை வைத்திருக்க முடியும் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments