இலங்கையில் பெண்கள் மத்தியில் அதிகரிக்கும் .. - !
இலங்கையில் பெண்கள் மத்தியில் அதிகரிக்கும் .. - !
இலங்கையில் பெண்கள் மத்தியில் அதிகரிக்கும்
இலங்கையில் உள்ள 3 பெண்களில் ஒருவர் (29.6%) அதிக எடையுடனும் 18 முதல் 60 வயதுக்குட்டபட்ட 8 பெண்களில் ஒருவர் (12.6%) சதவீதம் உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பதாகவும் தேசிய ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து கணக்கெடுப்பின்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக 50-60 வயதுக்குட்பட்ட பெண்கள் அதிக எடை மற்றும் உடல் பருமன் கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.
பொதுவாக உடல் பருமன் என்பது 30 கிலோவுக்கும் அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது.
2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, நகர்ப்புறப் பெண்கள் அதிக உடல் பருமன் விகிதத்தை 57.5 சதவீதம் கொண்டுள்ளதாகவும், மத்திய பகுதிகளில் உள்ள பெண்கள் 22.8 சதவீதம் எடை குறைவாக இருப்பதாகவும் மேலும் 45.2 சதவீத பெண்கள் சாதாரண எடை கொண்டவர்களாக காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை 42.4 சதவீத நகர்புற ஆண்கள் அதிக எடை மற்றும் உடல் பருமனை கொண்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
இந்தநிலையில் உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின்படி (Global Nutrition Report), உணவுமுறை தொடர்பான தொற்றா நோய்கள் (NCD) இலக்குகளை அடைவதில் இலங்கை குறைந்த முன்னேற்றத்தையே இதுவரை காட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேசைப்பந்தாட்ட வரலாற்றில் சாதனை படைத்த --- டாவி சமரவீர
இலங்கையின் வளர்ந்து வரும் மேசைப்பந்தாட்ட வீரர் டாவி சமரவீர, உலக மேசைப்பந்தாட்ட வரலாற்றில் தனது பெயரைப் பொறித்துள்ளார்.
அண்மையில் வெளியிடப்பட்ட 11 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் (Under-11 Boys) உலக மேசைப்பந்தாட்ட தரவரிசையில் அவர் 3ஆம் இடத்தைப் பிடித்து, எந்தவொரு வயதுப் பிரிவிலும் இலங்கை மேசைபந்தாட்ட வீரர் ஒருவரால் அடையப்பட்ட உயர்ந்தபட்ச தரவரிசை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவர் 52 இடங்கள் முன்னேறி, 200 தரவரிசைப் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனம் இந்த வாரம் வெளியிட்ட புதிய தரவரிசைப் பட்டியலில், டாவி சமரவீர அபாரமான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்
செஸ் தொடரிலிருந்து குகேஷ் வெளியேற்றம்
பனாஜி: ஃபிடே உலகக்கிண்ண செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்தத் தொடரில் நேற்று முன்தினம் (08) 3ஆவது சுற்றின் 2ஆவது ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் உலக சம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான ஃபிரடெரிக் ஸ்வேனுடன் மோதினார். இதில் 55ஆவது நகர்த்தலின் போது குகேஷ் தோல்வி அடைந்தார்.
இவர்கள் இருவரும் மோதிய முதல் ஆட்டம் ட்ராவில் முடிவடைந்திருந்தது. இரு ஆட்டங்களின் சராசரியாக ஃபிரடெரிக் ஸ்வேன் 1.5-0.5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். நாக் அவுட் போட்டி என்பதால் தோல்வி அடைந்த குகேஷ் தொடரில் இருந்து வெளியேறினார்.
இந்திய கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, ஹரி கிருஷ்ணா, பிரணவ் ஆகியோர் 4ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
பிரக்ஞானந்தா, அர்மேனியாவின் ராபர்ட் ஹோவன்னிஸ்யனுடன் மோதினார். இதில் பிரக்ஞானந்தா 42ஆவது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். அர்ஜூன் எரிகைசி, ஹரி கிருஷ்ணா, பிரணவ் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 2ஆவது ஆட்டங்களை டிராவில் முடித்து 4ஆவது சுற்றில் கால்பதித்தனர்.
முதலாவது போட்டியில் போராடி தோற்றது இலங்கை!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட பாகிஸ்தான் அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அந்த அணி சார்பில் சல்மான் ஆகா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 105 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.
ஹுசைன் தலாத் 62 ஓட்டங்களையும் மொஹமட் நவாஸ் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்படி, 300 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 59 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் ஹாரிஸ் ரவூஃப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்படி, 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கையில் பெண்கள் மத்தியில் அதிகரிக்கும் .. - !

No comments