கல்வி அனுமதி பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

கல்வி அனுமதி பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல் .. - !





கல்வி அனுமதி பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்





கல்வி அனுமதி பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்



கனடா அரசு, 2026ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச மாணவர்களுக்கு கல்வி அனுமதி (Study Permit) வழங்கும் முறையை எளிதாக்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. 


இதன் மூலம் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் (Master’s & PhD) பயிலும் மாணவர்களுக்கு இனி மாகாண அல்லது பிராந்திய சான்றளிப்பு கடிதம் (Provincial Attestation Letter) தேவையில்லை.


இந்த மாற்றம் கல்வி அனுமதி செயன்முறையை விரைவுபடுத்துவதோடு, தேவையற்ற ஆவணப் பணிகளை குறைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.


புதிய நடைமுறையின்படி, பல்கலைக்கழக ஏற்பு கடிதம் (Letter of Acceptance) மற்றும் உயிரியளவியல் (Biometrics) சோதனை முடிந்ததும், மாணவர்கள் இரண்டு வாரங்களில் அனுமதி பெறலாம்.


மேலும், இந்த திட்டத்தில் எத்தனை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதில் எந்த வரம்பும் இல்லை. உலகின் எங்கிருந்தும் தகுதியுள்ள மாணவர்கள் இதில் பங்கேற்க முடியும். இதன்மூலம் மாணவர்களின் குடும்பத்தினரும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, மாணவர்களின் வாழ்க்கைத்துணை திறந்த வேலை அனுமதி (Open Work Permit) பெறலாம். குழந்தைகள் கல்வி அனுமதி அல்லது பார்வையாளர் விசா பெறலாம். இதனால் நீண்ட தாமதமின்றி குடும்பங்கள் ஒன்றாக கனடாவுக்கு செல்ல முடியும்.


விண்ணப்பிக்க கடவுச்சீட்டு, பல்கலைக்கழக ஏற்பு கடிதம், நிதி ஆதாரச் சான்று மற்றும் பிற ஆவணங்கள் தேவையாகும். அனைத்து விண்ணப்பங்களும் நிகழ்நிலையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


உயிரியளவியல் (Biometrics) சோதனை முடிவுகள் 14 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். ஆவணங்கள் முழுமையாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதிசெய்வது தாமதங்களைத் தவிர்க்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பட்டப்படிப்புக்குப் பிறகு, மாணவர்கள் கனடாவில் வேலை செய்ய Post-Graduation Work Permit (PGWP) க்கு விண்ணப்பிக்கலாம். இது கனடாவில் வேலை அனுபவத்தை வழங்குவதுடன், நிரந்தர குடியுரிமைக்கு (Permanent Residency) விண்ணப்பிக்கவும் வழிவகுக்கும்.


கல்வி அனுமதி நடைமுறையில் கொண்டு வரப்படும் இந்த மாற்றம், கனடாவை உலகளாவிய அளவில் கல்வி இலக்காகத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு மிகவும் வசதியானதும் குடும்பநேசமானதுமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 Apple நிறுவனதின்  ---    iPhone Pocket!



ஆப்பிள் நிறுவனம், ஒதின்ரு 'துணித் துண்டினால்' ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட, $230 (ரூ. 75,000) பெறுமதியான ஐபோன் Pocket ஒன்றை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. 


உயர்மட்ட ஜப்பானிய பிராண்டான 'இஸ்ஸே மியாக்கி' (Issey Miyake) உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தச் சிறப்புப் வடிவமைப்பை இந்த வாரம் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 


இந்த இஸ்ஸே மியாக்கி வடிவமைப்பு, இணையம் மூலமாகவும், உலகெங்கிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகள் மூலமாகவும் வெளியிடப்படும் வரையறுக்கப்பட்ட பதிப்புக் சாதனமாகும். 


இது 2025 நவம்பர் 14 ஆம் திகதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர் இடங்களிலும், அத்துடன் பிரான்ஸ், சீனா, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் apple.com மூலமாகவும் கிடைக்கும். 


"ஐபோனை உங்கள் சொந்த பாணியில் அணிவதற்கான மகிழ்ச்சி" என்ற கருப்பொருளின் அடிப்படையில் ஐபோன் Pocket வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இது காலுறை போன்ற வடிவமைப்புடையது என்றும், வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் இரண்டு அளவுகளில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் Pocket-ஐ உருவாக்கும் முக்கிய நோக்கம், ஆப்பிள் ஐபோன் தயாரிப்புகளின் அழகியல் அம்சத்தையும் பயன்பாட்டுப் பன்முகத்தன்மையையும் சமூகமயமாக்குவதாகும்.



புகைப்படங்களை வெளியிட வேண்டாம் - பொலிஸார் எச்சரிக்கை



மக்கள் சுற்றுப் பயணங்களுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது, தாம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் செல்பி புகைப்படங்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வூட்லர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது உங்களை பின் தொடரும் குற்றவாளிகளுக்கோ அல்லது தங்களது வீடு மற்றும் சொத்துக்கள் குறித்து நோட்டமிடும் நபர்களுக்கோ சாதகமான தகவலாக அமையலாம் என்று அவர் விளக்கியுள்ளார்.


பத்தரமுல்லை சுஹுருபாயவில் அமைந்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவின் கேட்போர் கூடத்தில் நேற்று (11) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர்: இந்தக் கருத்தை வெளியிட்டார்.  இதன்போது அவர் மேலும் கூறுகையில்,


"நாம் அனைவரும் பண்டிகைக் காலத்தை நோக்கி நகர்கிறோம். குறிப்பாக உல்லாசப் பயணங்கள், யாத்திரைகள் மற்றும் பல்வேறு சுற்றுப்பயணங்களுக்காக நாம் கிராமத்தை விட்டு புறப்படுகிறோம்.


இந்த நாட்களில் உங்களது பயண இலக்குகள் குறித்து உங்களது உத்தியோகபூர்வ Facebook பக்கத்தின் மூலமாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ நீங்களே அறிவிப்பதை நாம் அவதானித்துள்ளோம்


நீங்கள் நுவரெலியாவில் இருக்கிறீர்கள், நீங்கள் காலியில் இருக்கிறீர்கள் அல்லது நீங்கள் கதிர்காமத்தில் இருக்கிறீர்கள் என்பது போன்ற தகவல்களை செல்பி புகைப்படங்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கும் முறையை நீங்களே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.


இது பொருத்தமானதல்ல. உங்களைத் பின்தொடரும் ஒரு குற்றவாளிக்கோ அல்லது உங்களைப் பற்றியோ, உங்கள் வீட்டைப் பற்றியோ நோட்டமிட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்கோ இது மிகவும் சாதகமான விடயமாக அமையலாம்.


எனவே, நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றி வேறு எவரும் தெரிந்து கொள்ளாத வகையில் நடப்பதால் அது நன்மையை ஏற்படுத்துவதாக அமையும்


அதேபோல், நீங்கள் இந்தப் பயணத்திற்காகப் பயன்படுத்தும் வாகனம், அதன் சாரதி என்பனவற்றில் நீங்கள் திருப்தி அடைவதை முதலில் உறுதி செய்ய வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்: தெரிவித்துள்ளார்.



இன்டர்போலால் தேடும் குற்றவாளிகளின்   ----  புகலிடமாக மாறிய டுபாய்



டியாணை பிறப்பிக்கப்பட்ட 82 இலங்கை குற்றவாளிகளில் 15 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


நாட்டின் பாதுகாப்புப் படையினர் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் ஏற்கனவே இன்டர்போலுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவ்ல்கள் கூறுகின்றன.


சிவப்பு அறிவிப்புகளைப் பெறுபவர்களை நாட்டின் பாதுகாப்புப் படையினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


கடந்த ஒக்டோபரில் மாதம் பாதாள உலகில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கராவை விரைவாக நாடு கடத்த டுபாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.


எனினும் லலித் கன்னங்கரா டுபாய் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், வழக்கு முடியும் வரை இலங்கைக்கு அழைத்து வர முடியாது என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


அதேசமயம் வழக்கு முடிவடைய குறைந்தது 04 மாதங்கள் வரை செல்லலாம். சந்தேக நபர் சார்பாக இலங்கையில் இருந்து வழக்கறிஞர் ஒருவர் டுபாய் சென்றுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.



கணவனின் தகாத உறவால் கோபமடைந்த மனைவி, கோடாரியால் தா*க்கியதில் கணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!


மொனராகலை, மஹகளுகொல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 19 ஆம் கட்டை, கபரகொடயாய பகுதியில் கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி அன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது மனைவி கோடாரியால் தாக்கியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவன் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (11) அன்று உயிரிழந்துள்ளார்.  


மேற்குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான  43 வயதுடைய ஆர்.எம்.காமினி புஷ்பகுமார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


கணவனின் தகாத உறவால் இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், சம்பவ தினத்தன்று கணவன் விவசாய வேலைகளை முடித்து விட்டு, வீட்டிற்கு வந்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரின் தலை மீது மனைவி கோடாரியால் தாக்கியுள்ளார்.   


இதில் படுகாயமடைந்த கணவன் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.


இது தொடர்பாக சந்தேக நபரான பெண், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மஹகளுகொல்ல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.




நிரந்தரமற்ற  ஊழியர்களுக்கு, நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை…!



அரச துறை மற்றும் கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலுள்ள சுமார் 10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) தமிழரசுக் கட்சி எம்.பி பத்மநாதன் சத்தியலிங்கம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


சத்தியலிங்கம் எம்பி தமது கேள்வியின் போது, சுமார் பத்தாயிரம் தற்காலிக, அமைய அடிப்படையிலான ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் ரயில் கடவை காப்பாளர்களும் உள்ளடக்கப்படுகின்றனரா என வினவினார்.


அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதவளிக்கையில்,


ரயில் கடவை காப்பாளர்களுக்கு அவர்கள் இதுவரை பெற்று வந்த 7500 ரூபா கொடுப்பனவை பதினையாயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது .


எனினும் அதன் மூலம் ரயில்வே கடவைகளில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமை முழுமையாக நிவர்த்தியடையும் என நாம் கூற முடியாது. அதற்கு நீண்ட கால வேலைத் திட்டம் ஒன்றை நாம் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.


அரசாங்கமானது நிரந்தரமற்ற சேவை நிலையில் உள்ளவர்களை ஒவ்வொரு மட்டத்தில் சேவைகளுக்காக நியமித்துள்ளது. அந்த வகையில் சுமார் 9,800 பேரை நிரந்தரமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.


அவற்றில் சில தொழில்துறைக்காக இணைத்துக் கொள்ளும் போது அவர்கள் தேவையான கல்வித் தகைமையைக் கொண்டிருக்க வேண்டும்.


அந்த வகையில் ரயில் கடவைக் காப்பாளர்கள் மட்டுமன்றி வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களைக் குறிப்பிடும்போது அவர்களில் 700 பேருக்கு நாம் நியமனங்களை வழங்கினோம் மேலும் 300 பேர் உள்ளனர்.


அவர்கள் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றியிருக்க வேண்டும். சித்தியடைந்தமை தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படவில்லை.


அதன் பிரகாரம் ரயில் கடவை காப்பாளர்களுக்கும் அவ்வாறான தகைமை கோரப்படுகிறது. அந்த வகையில் அனைவரையும் அரசாங்கம் நிரந்தரமாக்கும் என்பதை என்னால் கூற முடியாது. எனினும் பொதுவாக சுமார் 10,000 நிரந்தரமற்ற ஊழியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக அரச துறை மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலுள்ள தற்காலிக மற்றும் அமைய என நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.




சிறுவர்களுக்கு சமூக ஊடக தடை – டிசம்பர் முதல் சட்டம் அமுலுக்கு வருகிறது...

     


அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பாவிக்கத்தடைவிதிக்கப்பட்டுள்ளநிலையில்  இதற்கான சட்டம் டிசம்பர்  10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அவுஸ்திரேலியாவில் 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யு டியூப், ஸ்னாப்சாட்' போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாட்டால்  சிறுவர்களின் மனம், உடல் நலம் பாதிக்கப்படுவதாக பிரதமர் அந் தோணி அல்பனீஸ் குறிப்பிட்டிருந்தார்.


அதன்படி ஒன்லைனில் சிறுவர்களின்  பாதுகாப்பை உறுதி செவதற்காக ,      அவர்களின் சமூகஊடக பாவனையை  தடை செய்ய வேண்டும் என்று  பிரதமர் அந் தோணி அல்பனீஸ் வலியுறுத்தினார்.


இதற்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், ஒன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024 என்ற பெயரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


இந்த சட்டம், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்கவோ , பயன்படுத்தவோ தடை செய்கிறது.


இதன்படி இந்தசட்டமானது வரும் டிசம்பர் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வி அனுமதி பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல் .. - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.