உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் உடன் விண்ணப்பிக்கலாம் .. - !

உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் உடன் விண்ணப்பிக்கலாம் .. - !





உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் உடன் விண்ணப்பிக்கலாம் .. - !





உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் உடன் விண்ணப்பிக்கலாம் 



அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டப்படிப்பு நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப்படிப்புகளுக்கு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


இது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் செயல்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் உள்ளடங்கியுள்ளது.


2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.


அதன்படி, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டப்படிப்பு நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இதற்கான விண்ணப்பங்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நவம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.



பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது



தனது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். 


அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணைப் பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயது மதிக்கத்தக்க மாணவியே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவராவார். இவர் குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாவார். 


முறைப்பாட்டில், பாதிக்கப்பட்ட இந்த மாணவியை அவரது தந்தை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பெரிய நீலாவணைப் பொலிஸாருக்கு நேற்று (15) மாலை பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட மாணவியை கல்முனையில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 


பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கடற்தொழில் மேற்கொண்டு வருபவர்; மாணவியின் தாயார் நெசவுத் தொழிலை மேற்கொண்டு வருபவராவார். 


கைதான சந்தேக நபர் குறித்து மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமையவும், பெரிய நீலாவணைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பி. கஜேந்திரனின் வழிகாட்டுதலிலும் குறித்த மேலதிக விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


 -அம்பாறை நிருபர் ஷிஹான்-



பரவியுள்ள புதிய வைரஸ்



அமெரிக்காவின் வொஷிங்டன் கிரேஸ் ஹார்பர் குடியிருப்பாளர் ஒருவருக்கு இன்ஃப்ளூயன்ஸா யு ர்5 என்ற ஒரு வகை பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நவம்பர் மாதம் தொடக்கத்தில் இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனை நடவடிக்கையின் போது இது H5N5 என்ற வைரஸ் எனக் கண்டறியப்பட்டள்ளது.


இதற்கு முன்னர் இது விலங்குகளில் பதிவாகியுள்ள ஒரு பறவைக் காய்ச்சல் வைரஸ் எனவும், இதற்கு முன்பு மனிதர்களிடம் இது காணப்படவில்லை என்றும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.


இந்த நோயினால் பாதிக்கப்பட்டவரின் வீட்டின் பின்புறத்தில் கோழிகள் வளர்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது, அந்த வீட்டுக் கோழிகள் காட்டுக் கோழிகளுடன் இணைந்து திரிவதாகவும், இந்த காட்டு பறவைகளால் குறித்த வைரஸ் பரவியிருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வைரஸ் மற்ற பறவை இனங்களையும், எப்போதாவது பாலூட்டிகளையும் பாதிக்கலாம், மேலும் கோழிகள் மற்றும் வான்கோழிகள் போன்ற வீட்டுப் பறவைகளுக்கும் ஆபத்தானவை என மருத்துவர் தெரிவிக்கின்றனர்.



பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது!



திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 


திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் இன்று (16) கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார். 


இவரும் இவரது மனைவியும் திருகோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாடகை அடிப்படையில் பல வீடுகளில் வசித்து வந்துள்ளனர். 


குறித்த வீடியோ மற்றும் அது தொடர்பான தகவல் ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பரவிய நிலையில், இந்தச் சந்தேகநபர் திருக்கோவில் பிரதேசத்தில் கடலை விற்பனையாளர் என்று சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று பரவியுள்ளது. 


அதன்படி, திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். 


பின்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் வசித்த இடங்கள் பலவற்றிற்குச் சென்று தேடுதல் நடத்தப்பட்டது. 


அப்போது ஒரு இடத்தில் சந்தேகநபர் மற்றும் அவரது மனைவியின் தேசிய அடையாள அட்டைகளின் நிழற்பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 


அதன் அடிப்படையில், அவரது மனைவியின் வீட்டிற்குச் சென்ற பொலிஸ் குழுவினர், குறித்த சந்தேகநபர் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் தங்கியிருந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதைக் கண்டறிந்தனர். 


இதனையடுத்து, அவர் நடமாடக்கூடிய இடங்கள் குறித்து மேற்கொண்ட தேடுதலின் போது, சந்தேகநபர் இன்று மாலை கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டார். 


கைது செய்யப்படும் போது அவர் தலையை மொட்டையடித்து தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். 


மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபர் பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 


இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக உலகளவில் அதிக கவனத்தைப் பெறுவதற்கு, நமது அழகான சுற்றுச்சூழலும், இங்குள்ள மக்களின் விருந்தோம்பலும் காரணமாக இருப்பது இரகசியமல்ல. 


இருப்பினும், சில கட்டுப்பாடு இல்லாத நபர்கள் காரணமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு அசௌகரியங்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களும் அதிகமாக உள்ளன. 


அத்தகைய ஒரு சம்பவத்தைக் காட்டும் வீடியோ ஒன்று அண்மைக்காலமாகச் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 


அதில், முச்சக்கர வண்டியை ஓட்டிச் செல்லும் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கு ஒருவர் தனது பாலியல் உறுப்பைக் காட்டும் விதம் காட்டப்பட்டுள்ளது. 


இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அந்தச் சம்பவத்தைச் சந்தித்த 24 வயதுடைய நியூசிலாந்துப் பிரஜை ஒருவரால் நேற்று (15) பிற்பகல் சுற்றுலாப் பொலிஸ் பிரிவுக்கு மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இதனையடுத்து, திருக்கோவில் பொலிஸாரும் பொத்துவில் பொலிஸாரும் இணைந்து சந்தேகநபரைத் தேடும் விசாரணையை ஆரம்பித்திருந்தனர். 


விசாரணைகளின்போது, கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வந்த குறித்த நியூசிலாந்து யுவதி, ஒக்டோபர் 25 ஆம் திகதி அறுகம்பையில் இருந்து பாசிக்குடாவிற்கு முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, திருக்கோவில் பிரதேசத்தில் இந்த நபரைச் சந்தித்து அவருடன் பேசியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 


குறித்த நபர் இந்த அநாகரிகச் செயலை அந்தச் சமயத்தில்தான் செய்துள்ளார்.



போதைப் பொருளுடன் கைதான  --- அதிபர் தொடர்பில் 



போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் 2025/11/14 அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 


அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் ஒரு கிலோ கிராமுக்கு அதிகமான ஹெரோயினுடன் கடந்த மாதம் (5) கைது செய்யப்பட்டிருந்தார். 


அந்த அதிபர் தொடர்பில் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 


போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிகாரி 'அதிபர்' எனக் குறிப்பிடப்பட்டாலும், அவர் இலங்கை அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரி அல்ல. 


அவர் இலங்கை ஆசிரியர் சேவையின்அதிகாரி என்பது உறுதியாகியுள்ளதுடன், அவர் அதிபர் பதவியை தற்காலிகமாகப் பொறுப்பேற்று (Covering duties) பணியாற்றியுள்ளார். 


'அதிபர்' என்று அழைக்கப்படக்கூடியவர்கள் இலங்கை அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரிகள் மாத்திரமே என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் மேலும் கூறுகையில், அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரிகள் அல்லாதவர்கள் இவ்வாறு 'அதிபர்' என்ற பெயரைப் பயன்படுத்துவது அதிபர் சேவைக்கு செய்யப்படும் அநீதியாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. 


மேலும், குறித்த அதிகாரியைப் பற்றிய தகவல்களை வெளியிடும்போது, ​​அவரை "இலங்கை ஆசிரியர் சேவையின் அதிகாரி" என்று அடையாளப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




 பராமரிக்கும் சில பிள்ளைகளுக்கு ஓய்வூதியம்...! 



திருமணம் செய்யாமல் பெற்றோரை பராமரிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விடயத்தை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சேனா நாணயக்கார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் சந்தன அபயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.


இவ்வாறான பிள்ளைகளுக்கு 26 வயதை எட்டிய பின்னர் ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.


வயதான பெற்றோரைப் பராமரிப்பதற்காக பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பது ஒரு சிறப்பு விடயம் எனவும், இதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை செய்ய முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.


இதேவேளை, ஓய்வூதியம் பெறுபவரின் மரணத்திற்கு பின்னர் வாழ்க்கைத் துணைவருக்கும், வாழ்க்கைத் துணையின் மரணத்திற்குப் பிறகு 26 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தற்போது ஓய்வூதிய சலுகைகள் வழங்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



அநுர தரப்பு மீது வலுக்கும் கண்டனம்



டீசல் மற்றும் பெட்ரோலுக்கு தலா ரூ. 100 மற்றும் 120 என வரி விதிக்கப்படுவதாகவும், தனது கட்சியைப் பராமரிக்க டபல் கெப்(Double cabs) வாகனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.


நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி Double cabs வாகனங்களை வாங்குவதற்கு தனது கட்சியினருக்கு வரிச் சலுகைகளை வழங்குவதன் மூலம் சர்க்கரை வரி மோசடியை விட ஏழு முதல் எட்டு மடங்கு பெரிய வரி மோசடியைச் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Double cabs வண்டிகளைப் போன்ற வசதிகளைக் கொண்ட வாகனங்களுக்கு 200% வரி விதித்து, விலக்கு அளிப்பதன் மூலம், நாடு பெருமளவு வரி வருவாயை இழக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


சர்க்கரை வரி மோசடிக்கு எதிராக நீதிமன்றம் சென்ற அதே நபர்கள் அதையே செய்வது வருத்தமளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், மக்களுக்கு அரிசிக்கு ஒரு கிலோ ரூ. 65வும், உப்புக்கு ஒரு கிலோ ரூ. 40தும், டீசல் மற்றும் பெட்ரோலுக்கு தலா ரூ. 100 மற்றும் 120 என வரி விதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 



 இலங்கை மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு...

    


வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வசூலிக்கும் நியாயமற்ற வட்டி விகிதங்கள் குறித்து நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடம் புகாரளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பான அறிவிப்பை இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு விடுத்துள்ளது.


இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பில் மேலும்,


வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி வங்கிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது.


இருப்பினும், நியாயமற்ற வட்டி விகிதங்கள் வசூலிக்கப்பட்டால் முரண்பாடுகளை விசாரிக்க தலையிடும் அதிகாரம் எமக்கு உள்ளது.


அத்தகைய புகார்களை நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இலக்கமான "1935" இற்கு தெரிவிக்க முடியும்.


இலங்கை மத்திய வங்கி அவ்வப்போது வட்டி விகிதங்களை வெளியிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



18 வயது நிரம்பியவர்களுக்கு   ----   கட்டாய இராணுவ சேவை

     


ஜெர்மனி இராணுவத்தில் சுமார் 1 இலட்சத்து 82 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.


இதற்கிடையே, நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த நேரிடும் என ஜெர்மனி இராணுவ தலைவர் கார்ஸ்டன் ப்ரூயர் எச்சரிக்கை விடுத்தார். இதனால் வலிமையான இராணுவத்தை உருவாக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்தது.


இதற்காக கட்டாய இராணுவ சேவை திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, 18 வயது நிரம்பிய அனைவரும் இராணுவத்தில் சேர்வதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கு மருத்துவ பரிசோதனையை எடுக்கவேண்டும்.


இந்த இராணுவ சேவையானது ஆண்களுக்கு கட்டாயமாகவும், பெண்களுக்கு விருப்ப அடிப்படையிலும் இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது


இதுதொடர்பான மசோதா இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன்மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 2 லட்சத்து 60 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் இடதுசாரி கட்சியினர் இந்த கட்டாய இராணுவ சேவைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் உடன் விண்ணப்பிக்கலாம் .. - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.