ஆசிரியர் வெற்றிடங்கள். - !

  ஆசிரியர் வெற்றிடங்கள். - !





ஆசிரியர் வெற்றிடங்கள். - !





ஆசிரியர் வெற்றிடங்கள்



நாடு முழுவதும் உள்ள மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


தேசிய பாடசாலைகளில் 1,501 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன என்றும், பல மாகாணங்களில் கல்வி துறையில் சவால்கள் காணப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.


நாடு முழுவதும் விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், வெளிநாட்டு மொழிகள் மற்றும் க.பொ.த. உயர்தரத்திலான பாடங்களுக்கு 2024.07.28 முதல் ஆட்சேர்ப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


ஆசிரியர் சேவையின் III (ஆ) 1 தரத்திற்குரிய 353 பட்டதாரி ஆசிரியர்கள் அடுத்த 2 மாதங்களில் ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ளனர்.ஆட்சேர்ப்பு அறி


மாகாண ரீதியான ஆசிரியர் வெற்றிடங்கள்

கிழக்கு மாகாணம்

6,613

மத்திய மாகாணம்

6,318

மேல் மாகாணம்

4,630

சப்ரகமுவ மாகாணம்

3,994

வட மாகாணம்Government job application

3,271

வடமேல் மாகாணம்

2,990

ஊவா மாகாணம்

2,780

தென் மாகாணம்

2,513

வட மத்திய மாகாணம்

1,568

இந்த விவரங்கள் கல்வி அமைச்சகத்தின் பாராளுமன்ற அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டவை.



பஸ் விபத்து; இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு



சவுதி அரேபியாவில் பஸ் – டீசல் லொறி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணம் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த கோர விபத்தில் பஸ் தீப்பற்றியதில் பஸ்ஸில் பயணித்த இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.


இதில், ஐதராபாத்தை சேர்ந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. மற்ற உடல்களை அடையாளம் காணும் நடந்து வருகிறது. இது தொடர்பாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.


இந்த விபத்து இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் மதீனாவிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள முப்ரிஹாத் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில் பல பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால், பஸ் மோதிய பிறகு தீப்பிடித்து எரிந்தபோது அவர்கள் தப்பிக்க முடியவில்லை. இதுவே அதிக உயிரிழப்புக்கு காரணம். பஸ் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மிகவும் சவாலானது என மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் நடந்த துயரம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.



  மரண தண்டனை  ---   ஷேக் ஹசீனாவுக்கு



பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


பங்களாதேஷில் 1971ஆம் ஆண்டில் நடந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க ஷேக் ஹசீனா தலைமையிலான பங்களாதேஷ் அரசு கடந்தாண்டு முடிவு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதே சமயம் பங்களாதேஷில் ஏற்பட்ட வன்முறையில் 1400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 


இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் , பங்களாதேஷ் நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனாவுற்கு பங்களாதேஷ் குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி ஹசீனாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கிடையே அவரை பங்களாதேஷிற்கு திருப்பி அனுப்பக்கூடாது எனத் தொடர்ந்து இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். 


கடந்தாண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை மனித குலத்திற்கு எதிரானது என இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பங்களாதேஷின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் 'நான் மீண்டும் வருவேன்' என்ற ஓடியோவை ஷேக் ஹசீனா வெளியிட்டிருந்தார். 


இந்நிலையில் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என பங்களாதேஷின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு 'போராடியவர்கள் மீது கொடூர ஆயுத தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தியது மனித குலத்திற்கு எதிரான வன்முறை. திட்டமிட்டு வன்முறைக்கு மூளையாக ஷேக் ஹசீனா செயல்பட்டுள்ளார்' எனக் குறிப்பிட்ட நீதிபதி, அவருக்கு மரண தண்டனை அறிவித்துள்ளார்.


 மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என பங்களாதேஷின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


எவ்வாறாயினும், இந்த குற்றத்திற்கான தண்டணைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 


பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று (17) வெளியிடுவதாக அறிவித்திருந்தது.


அதன்படி, அவர் குற்றவாளி என இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


ஷேக் ஹசீனா தனது ஆட்சிக்காலத்தில் (குறிப்பாக 2024 ஆம் ஆண்டு ஜூலை-ஓகஸ்ட் மாதங்களில்) நடந்த மாணவர் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்குவதற்காக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 


போராட்டக்காரர்கள் மீதான படுகொலை, சித்திரவதை மற்றும் பொதுமக்கள் மீதான கொடூரமான தாக்குதல்களுக்கு அவரே நேரடியாக உத்தரவிட்டார் அல்லது தடுக்கத் தவறியதே அடிப்படைக் குற்றச்சாட்டுகளாகும். 


ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகளின்படி, இந்தப் போராட்டங்களை ஒடுக்கும்போது சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். 


இந்த வழக்கில் தலைமை சட்டத்தரணி, ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஆவேசமாக வாதிட்டுள்ளார். 


மாணவர் போராட்டங்களை அடுத்து, ஷேக் ஹசீனா கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5 ஆம் திகதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். 


நீதிமன்றம் விடுத்த உத்தரவுகளையும் மீறி அவர் நாடு திரும்பாததால், அவர் இல்லாத நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த ஜூலை 2025-ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. அவர் கைது செய்யப்படும் அல்லது சரணடையும் நாளில் இருந்து இந்தத் தண்டனை அமலுக்கு வரும் எனவும் நீதிமன்றம் கூறியது. 


ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இந்த வழக்கு, பங்களாதேஷ் அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. அவர் குற்றம் சாட்டப்பட்டால், ஒரு நாட்டின் உயரிய அரசியல் தலைவர் மீது இத்தகைய கடுமையான தண்டனை விதிக்கப்படுவது அரிதான நிகழ்வாக இருக்கும். தற்போதைய இடைக்கால அரசாங்கம், ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில்,  இந்தத் தீர்ப்பு சர்வதேச அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.



 தாயை தீவைத்து எரித்த 13 வயது சிறுமி கைது!



தங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனது தாயை பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக 13 வயது சிறுமி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுமி பதுளை, எகொடவெலவைச் சேர்ந்த 13 வயது மாணவியாவார். 


தீ வைப்புத் தாக்குதலில் படுகாயமடைந்த தாய், பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (16) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவத்தில் உயிரிழந்தவர், பதுளை, எகொடவெலவைச் சேர்ந்த 28 வயது துலாஞ்சலி குமாரி என்ற பெண் ஆவார். தாய்க்கு தீ வைத்த இந்த சம்பவம் கடந்த 4 ஆம் திகதி நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.



சுற்றுலா பயணிகள் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவது சட்டவிரோதமானது 



பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிக்கை (Police Media Spokesperson’s Statement)


இலங்கையில் எந்தவொரு வாகனத்தையும் ஓட்ட வெளிநாட்டவர்கள் சரியான சாரதி அனுமதிப்பத்திரங்கள் (driving permits) அல்லது துணை ஆவணங்களைக் (supporting documents) கொண்டிருக்க வேண்டும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (ASP) வூட்லர் தெரிவித்துள்ளார்.


அவர் ஊடகங்களிடம் கூறுகையில், வெளிநாட்டுப் பிரஜைகள் சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரத்தை (International Driving Permit) வைத்திருக்க வேண்டும் அல்லது தமது சொந்த நாட்டின் உள்நாட்டுச் சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்து, இலங்கையின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திடமிருந்து (Department of Motor Traffic) ஒரு சான்றிதழ் அல்லது அனுமதிப்பத்திரத்தைப் பெற வேண்டும்.


வளர்ந்து வரும் போக்கு ஒன்றைச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் முச்சக்கர வண்டிகளை (trishaws) ஓட்டுவது சட்டவிரோதமானது என்று வலியுறுத்தினார்.


“சுற்றுலாப் பயணிகள் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவதை நாங்கள் கண்டிருக்கிறோம், இது முற்றிலும் சட்டவிரோதமானது (totally illegal).


இந்த முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராகவும் நாங்கள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.



ஆரம்பமானது தொழிற்சங்க நடவடிக்கை....

     


2026 ஆம் நிதியாண்டு தொடர்பாக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (17) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. 


இதற்கமைய வைத்தியசாலை மருத்துவ பரிசோதனையின் போது வைத்தியசாலையில் கிடைக்காத மருந்துகளைப் பெற நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை வழங்காமை, ஆய்வக சோதனைகளை வெளிப்புறமாக நடத்த பரிந்துரைகளை வழங்காமை, தினசரி மருத்துவ பரிசோதனைகளை தவிர மேலதிகமான எந்தவொரு பரிசோதனையிலும் கலந்துகொள்ளாமை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் அடங்கும்.




ஆசிரியர் வெற்றிடங்கள். - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.