பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் ---- கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல் .....!

 

பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில்   ----   கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல் .....!






பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில்   ----   கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல் .....!





பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில்   ----   கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்


உயர்தர பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய டிசம்பர் 8ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை (G.C.E A/L Exam) முன்னிட்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது

இந்நிலையில் டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து 2026 ஜனவரி முதலாம் திகதி புதிய கல்வியாண்டுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும்.

தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

பெப்ரவரி 14 முதல் மார்ச் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. 

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இரண்டாம் தவணை ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. மூன்றாம் தவணையின் முதற்கட்டம் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

ஆகஸ்ட் 8 முதல் செப்டெம்பர் 6ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






நேரத்தை அதிகரிக்கும் தீர்மானம் ரத்து செய்யப்பட வேண்டும்



பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது. 

குறித்த தீர்மானத்தை மாற்றாவிட்டால், டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அந்த தொழிற்சங்க கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.






அரச வேலைக்காக காத்திருப்போருக்கு   -----    மகிழ்ச்சியான தகவல்



அரச வேலைக்காக 60,000 ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். 

இந்த ஆட்சேர்ப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதல் கட்டமாக, நாடு தழுவிய சேவைகளுக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன

பொது சேவைக்கான ஆட்சேர்ப்பு முறையான நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








SLS முத்திரை இல்லை என்றால் விற்பனைக்குத் தடை! 



உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும், 'உடனடியாகப் பருகக்கூடிய' அனைத்துப் பழச்சாறு பானங்களும் கட்டாயமாக இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS – Sri Lanka Standards) முத்திரையுடன் இருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நினைவூட்டியுள்ளது. 

அத்துடன், இதே வகையைச் சேர்ந்த இறக்குமதி செய்யப்பட்ட பழச்சாறு பானங்கள், விற்பனைக்கு வருவதற்கு முன்னர், இறக்குமதி பரிசோதனைத் திட்டத்தின் கீழ் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

குறித்த விதிமுறை, தேசிய உணவு மற்றும் பானத் தரச் சான்றிதழ் தேவைகளுக்கு இணங்க, நுகர்வோருக்கான தயாரிப்பு பாதுகாப்பும் தரத்தையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும். 

அத்துடன் இது குறித்து நுகர்வோர் தங்களின் முறைப்பாடுகளை, 1977 என்ற நுகர்வோர் விவகார ஆணையத்தின் இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்.







ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியை சுருட்டிய 56 அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் 



ஜனாதிபதி நிதி பொதுமக்களின் நலனுக்காக நிறுவப்பட்டாலும், கடந்த 19 ஆண்டுகளில் சட்ட நடைமுறைகளை மீறி 56 நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவியாக ரூ.130 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

2005 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், இந்த உறுப்பினர்களுக்கு ரூ.131,371,110 வழங்கும் போது, ​​முறையான விண்ணப்பம் கோருதல், விண்ணப்பதாரரின் வருமான வரம்புகளை சரிபார்த்தல், பிரதேச செயலக அறிக்கைகளைப் பெறுதல் அல்லது நிதி சொத்துக்களை மதிப்பிடுதல் போன்ற எந்த அடிப்படை நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்பதை தணிக்கை அறிக்கை காட்டுகிறது. இந்த முறைகேடு குறித்து குற்றப் புலனாய்வுத் துறை ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி நிதியிலிருந்து கடன்களுக்கான ஏற்பாடு இல்லாத சூழலில், இரண்டு எம்.பி.க்களுக்கு "திருப்பிச் செலுத்தக்கூடிய அடிப்படையில்" பணம் வழங்கப்பட்டதாகவும், பல ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தப் பணம் திரும்பப் பெறப்படவில்லை என்றும் தணிக்கையில் தெரியவந்துள்ளது.

ஒரு வழக்கில், ஜனாதிபதியின் செயலாளர் ஒருவரின் கடிதத்தின் அடிப்படையில் ஒரு எம்.பி.க்கு வழங்கப்பட்ட ரூ. 71,090,879 தொகை ஜூன் 2025 வரை திரும்பப் பெறப்படவில்லை. அதேபோல், முன்னாள் பிரதமர் ஒருவருக்கு திரும்பப் பெறக்கூடிய அடிப்படையில் வழங்கப்பட்ட ரூ. 29.8 மில்லியனில், ரூ. 13.7 மில்லியன் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை.

இந்த தணிக்கை அறிக்கையுடன் இணைந்து, அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகளின் பட்டியலை வெளியிட்டார், இதன் மூலம் தணிக்கையின் போது வெளிப்படுத்தப்பட்ட நபர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தினார். இந்த நிதிகள் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வெளியிட்ட பட்டியலின்படி, அதிக பண நன்கொடைகளைப் பெற்ற அரசியல்வாதிகளில் மறைந்த முன்னாள் பிரதமர் டி.எம். ஜெயரத்ன (ரூ. 30 மில்லியன்), ரஞ்சித் சொய்சா (ரூ. 18.8 மில்லியன்), எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன (ரூ. 12 மில்லியன்), கெஹலிய ரம்புக்வெல்ல (ரூ. 11 மில்லியன்), ராஜித சேனாரத்ன (ரூ. 10 மில்லியன்), மற்றும் ஜயந்த வீரசிங்க (ரூ. 9 மில்லியன்).

மேலும், ஜோன் அமரதுங்க, விமலவீர திசாநாயக்க, விதுர விக்கிரமநாயக்க, பி. ஹரிசன், வாசுதேவ நாணயக்கார, சுசில் பிரேமஜயந்த, பியல் நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட பல அரசியல்வாதிகளின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.



பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில்   ----   கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல் .....!

 

No comments

Theme images by fpm. Powered by Blogger.