க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான .....!
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான .....!
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதிப்பத்திரங்களும் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு...
அடுத்த ஆண்டுக்கான உலக சுற்றுலா சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்தும் திட்டங்களுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுடனான சந்திப்பின்போது வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.
ஆளுநர் செயலகத்தில் நேற்று (04) மாலை நடைபெற்ற சந்திப்பில், வர்த்தக சங்கத்தால் பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு, அவை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
நகர அழகாக்கல், சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்பாடு, வர்த்தக வசதிகள் உள்ளிட்ட விடயங்களில் இணைந்து செயற்படுவது குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது.
தொழிற்சங்க நடவடிக்கை
அரசாங்கத்தின் முடிவை மாற்றத் தவறினால் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீடித்து பிற்பகல் 2 மணி வரை மாற்றியமைக்கும் இந்த முடிவை அரசாங்கம் மாற்றத் தவறினால், அடுத்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அடுத்த ஆண்டு ஜனவரி (2026) முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவுக்கு எதிராக, டிசம்பர் இரண்டாம் வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அரசாங்கம் சாதகமான பதிலளிக்கத் தவறினால், இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவும் தயங்க மாட்டோம்.
கடந்த சில வாரங்களாக பாடசாலைகளுக்கு சென்று ஆசிரியர்களுடன் இது குறித்து கலந்துரையாடி வருகிறோம். அவர்கள் குறித்த முடிவுக்கு எதிராக உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
தனது சகோதரனை மிரட்டி பாலியல் உறவில் ஈடுபட்ட இளம் பெண்
உடன்பிறந்த சகோதரனை தொடர்ச்சியாக அச்சுறுத்தி பாலியல் உறவில் ஈடுபட்ட நிலையில் கர்ப்பமான பெண் ஒருவர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரைச்சல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிஷாந்த பிரதிப் குமாரவின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பெண்ணின் தந்தை கல் வாடியில் வேலை செய்வதுடன் தாய் இல்லத்தரசியாக இருக்கின்றதாக தெரியவந்துள்ளது.
சகோதரனுக்கு சுமார் 11 வயது இருக்கும் போது சகோதரிக்கு 18 வயதாகிய நிலையில் இச்சம்பவம் ஆரம்பமாகியுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கு உடன்பிறந்த சகோதரன் எதிர்ப்பு தெரிவித்த போதும் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் மிரட்டிய சகோதரி தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது 22 வயதான குறித்த பெண்ணின் வயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது முறைகேடான உறவினால் 2 மாத கர்ப்பம் தரித்த விடயம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்
வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 மானியம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று தென்னை சாகுபடி சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
புதிதாக பயிரிடப்படும் தென்னை நிலங்களுக்கு நீர் வசதிகளைப் பெறும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் கூறினார்.
இந்த தென்னை முக்கோண வலயத்தில் 1 மில்லியன் மரக்கன்றுகளை வளர்க்கும் திட்டத்துடன் இணைந்து இந்த மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் தேங்காய் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் வடக்கில் இந்த தென்னை முக்கோண வலயம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பீப்பாய்கள் என்பன இன்றைய தினம் (05) கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிசார் தேவிபுரம் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர்.
இதன்போது, கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11 இலட்சத்து 69 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பீப்பாய்கள் என்பன புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர்களை தேடி மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நியூயோர்க் நகரத்தின் முஸ்லிம் மேயர் தெரிவு!
நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
ஸோஹ்ரான் மாம்டானி ஒரு ஜனநாயக சோசலிஸ்ட் வேட்பாளர் ஆவார். இவர் உகாண்டாவில் பிறந்தவர்.
இவரது பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (தந்தை குஜராத்தைச் சேர்ந்த முஸ்லிம்; தாய் ஒடிசாவைச் சேர்ந்த இந்து).
இவர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, முன்னாள் ஆளுநரும் சுயேச்சையாகப் போட்டியிட்டவருமான எண்ட்ரூ கியூமோ, மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்ட்டிஸ் ஸ்லிவா ஆகியோரைத் தோற்கடித்து இந்த வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளார்.
நியூயோர்க் நகரின் வாழ்க்கைச் செலவு மற்றும் மலிவுத் திறன் போன்ற முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இவரது பிரச்சாரம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments