மரங்களுக்கு அடியில் இருக்க வேண்டாம் ... . - !
மரங்களுக்கு அடியில் இருக்க வேண்டாம் ... . - !
மரங்களுக்கு அடியில் இருக்க வேண்டாம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்
மேலும் மின்னல் தாக்கும் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு வானிலை ஆய்வுத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் வெளியில் அல்லது மரங்களுக்கு அடியில் இருக்க வேண்டாம் என்றும், பாதுகாப்பான கட்டிடம் அல்லது வாகனத்திற்குள் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மக்களுக்கு வழங்கப்படும் முழுமையான நிவாரணத் தொகை...
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகைகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வின்போது விசேட உரை ஒன்றை நிகழ்த்தி ஜனாதிபதி குறித்த நிவாரணத் திட்டங்களை அறிவித்தார்.
நிவாரணத் தொகைகள்
சீரற்ற காலநிலை ஏற்படுத்திய பேரிழிவினால் உயிரிழந்த மக்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய வீடுகளை சுத்தம் செய்வதற்கு 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
வீட்டுக்கான உரித்து பொருட்படுத்தப்படாமல், வீட்டுக்குரிய அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு 50 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால், மீண்டும் குடியேற முடியாத, முற்றிலுமாக சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பொருட்டு 50 இலட்சம் ரூபா நிவாரணத் தொகை வழங்கப்படும்.
மேலும், அனர்த்தங்களால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச காணி வழங்கப்படும் அல்லாத பட்சத்தில், காணி கொள்வனவிற்காக 50 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படும். எனினும், பாதுகாப்பற்ற இடங்களுக்கு அனுமதி கிடையாது.
அனர்த்தங்களின் போது பகுதியளவு சேதமடைந்த வீடுகளை மீள புனரமைத்துக் கொள்வதற்காக நான்கு கட்டங்களின் ஊடாக 25 இலட்சம் ரூபா வரையில் கொடுப்பனவு வழங்கப்படும்.
அத்துடன், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வணிக கட்டடங்களை மீள ஆரம்பிக்க 50 இலட்சம் கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பட்டார்.
இலங்கையில் வாகன பாவனை தொடர்பில்
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய அல்லது அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை முழு ஆய்வு இல்லாமல் பயன்படுத்த வேண்டாம் என போக்குவரத்து பொறியியலாளரான நுவான் மதநாயக்க தெரிவித்துள்ளார்.
நீரில் மூழ்கிய வாகனங்களை இயக்காமல் தொழில்நுட்ப வசதிக்கு கொண்டு சென்று முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.
அனைத்து வகையான ஒயில், பிரேக், பவர் ஸ்டீயரிங், கியர் எண்ணெய், என்ஜின் எண்ணை உட்பட அனைத்தை அகற்ற வேண்டும். மேலும் அவை வெண்மையாக மாறியிருந்தால், என்ஜினை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
சுமார் 2-3 நாட்கள் முழுமையாக நீரில் மூழ்கியிருக்கும் வாகனங்களின் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க முடியும், ஆனால் அவற்றின் மின் அமைப்புகளைப் பயன்படுத்தவே கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்காலிகமாக மீட்டமைக்கப்பட்டாலும், அது எதிர்காலத்தில் அரிக்கப்பட்டு பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனவே வாகனத்தை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் செயலிழக்கச் செய்ய வேண்டும் அல்லது மூன்றாம் தரப்பு காப்பீடு இருந்தால், மின்சுற்றுகளை முழுமையாக மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.
வாகனத்தின் சஸ்பென்ஷன் அமைப்புகளுடன் தொடர்புடைய கிரீஸ் முழுவதுமாக அகற்றப்பட்டு புதியவற்றைப் பயன்படுத்த வேண்டும். அவற்றின் ரப்பர் பாகங்களை மீண்டும் பொருத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வரி செலுத்துவோருக்கு சலுகை காலம் நீடிப்பு...
வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்திருந்த அறிவிப்பு திருத்தப்பட்டுள்ளது.
வரி செலுத்துவோர் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளை 2025 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பித்தால், தாமதமாக சமர்ப்பிப்பதற்கான அபராதம், மதிப்பீடுகளை வெளியிடுதல் அல்லது குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்தல் போன்ற சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகாமல் அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியும்.
அதற்கமைய, இதுவரை அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியாத அனைத்து வரி செலுத்துவோரும் வருமான அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள இந்த சலுகைக் காலத்தை பயன்படுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..
நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
05/12/2025 மாலை 4 மணியளவில் வெளியாக இவ் அறிவிப்பில், ஆபத்துக்களிலிருந்து விலகியிருக்க பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
🚫சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிரதேசங்கள்:
🔴கண்டி மாவட்டம்
🔥கங்கவட்ட கோரளை
🔥தெல்தோட்டை
🔥தொழுவ
🔥தும்பனே
🔥மெததும்பர
🔥மினிப்பே
🔥பாதஹேவாஹெட்ட
🔥யட்டிநுவர
🔥கங்கா இஹல கோரளை
🔥அக்குரணை
🔥உடுநுவர
🔥பன்வில
🔥பாததும்பர
🔥குண்டசாலை
🔥பஸ்பாகே கோரளை
🔥ஹதரலியத்த
🔥உடுதும்பர
🔥பூஜாப்பிட்டிய
🔥ஹரிஸ்பத்துவ
🔥உடபலாத
🔴கேகாலை மாவட்டம்
🔥கலிகமுவ
🔥கேகாலை
🔥மாவனல்லை
🔥ரம்புக்கனை
🔥தெஹியோவிட்ட
🔥வரக்காபொல
🔥தெரணியகல
🔥புளத்கொஹுபிட்டிய
🔥ருவான்வெல்ல
🔥யட்டியாந்தோட்டை
🔥அரநாயக்க
🔴குருநாகல் மாவட்டம்
🔥நாரம்மல
🔥மாவத்தகம
🔥மல்லவபிட்டிய
🔥அலவ்வ
🔥ரிதிகம
🔥பொல்கஹவெல
🔴மாத்தளை மாவட்டம்
🔥இரத்தோட்டை
🔥வில்கமுவ
🔥உக்குவளை
🔥பல்லேபொல
🔥மாத்தளை
🔥லக்கல பல்லேகம
🔥யட்டவத்த
🔥நாவுல
🔥அம்பங்கல கோரளை
🔴நுவரெலியா மாவட்டம்
🔥நில்தண்டஹின்ன
🔥வலப்பனை
🔥ஹங்குரான்கெத்த
மத்துரட்ட
🚫இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 75 மி.மீ. இற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளதால், மழை தொடருமானால் மண்சரிவு, சரிவுகள் இடிந்து விழுதல், பாறைகள் புரளுதல், மண்திட்டு சரிதல் மற்றும் நிலம் தாழிறங்குதல் போன்ற அபாயங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பின்வரும் மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔴பதுளை மாவட்டம்
🔥ஊவா பரணகம
🔥கந்தேகெட்டிய
🔥பண்டாரவளை
🔥சொரணத்தோட்டை
🔥ஹாலிஎல
🔥மீகஹகிவுல
🔥பதுளை
🔥எல்ல
🔥ஹப்புத்தளை
🔥லுணுகல
🔥வெலிமடை
🔥பசறை
🔥ஹல்துமுல்ல
🔴நுவரெலியா மாவட்டம்
🔥நுவரெலியா
🔥அம்பகமுவ கோரளை
🔥தலவாக்கலை
நோர்வுட்
🔥மேற்கு கொத்மலை
🔥கிழக்கு கொத்மலை
🔴இரத்தினபுரி மாவட்டம்
🔥கஹவத்தை
🔥கொடகவெல
🔥கொலன்ன
அனர்த்தங்களால் பதிவான உயிரிழப்புகள்
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தங்களால் 213 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் இன்று மதியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலவிய சீரற்ற வானிலையால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 576,626 குடும்பங்களைச் சேர்ந்த 2,054,535 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
அவர்களில் 33,622 குடும்பங்களைச் சேர்ந்த 114,126 பேர் 956 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
4,309 வீடுகள் முழுமையாகவும், 69,635 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மரங்களுக்கு அடியில் இருக்க வேண்டாம் ... . - !

No comments