மூன்றாம் தவணை பரீட்சை தொடர்பில் வௌியான........!
மூன்றாம் தவணை பரீட்சை தொடர்பில் வௌியான........!
மூன்றாம் தவணை பரீட்சை தொடர்பில் வௌியான
2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
6 ஆம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகளை நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குறிப்பாக அனைத்துப் பாடசாலை அதிபர்களும் இந்த அறிவுறுத்தலை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை அடுத்த தரங்களுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 11 ஆம் தர மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சையை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தால் சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு
வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு நேற்று (15) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ‘டிட்வா’ புயல் காரணமாக தமது வதிவிடத்திலிருந்து சேவை நிலையத்திற்கு பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தடைப்பட்டதால் சேவைக்கு சமூகமளிக்க முடியாத உத்தியோகத்தர்கள், வீதித் தடைகள் காரணமாக அல்லது அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டமை காரணமாக சேவைக்கு சமூகமளிக்க முடியாத உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்படுகின்றது.
அரசாங்க உத்தியோகத்தர்கள் தாம் கடமைக்கு சமூகமளிக்க முடியாத காரணத்தைக் குறிப்பிட்டு, பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட தமது பகுதியின் கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன் கூடிய விண்ணப்பத்தை நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தரின் விண்ணப்பத்தை நிறுவனத் தலைவர் பரிசீலித்து, அதன் சரியான தன்மை குறித்து தனிப்பட்ட ரீதியில் திருப்தியடைந்தால் மட்டுமே, சேவைக்கு சமூகமளிக்க முடியாத நாட்களின் எண்ணிக்கைக்கான விசேட விடுமுறையை அங்கீகரிப்பதற்காக திணைக்களத் தலைவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விசேட விடுமுறை வழங்குதல் நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு மாத்திரம் பொருத்தமான வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பாடசாலைகளுக்கு விடுமுறை
இயற்கை அனர்த்தங்களுக்கு பின்னர் பல பாடசாலைகள் 16/12/2025 கல்வி நடவடிக்கைகளுக்கான திறக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த கல்வி நடவடிக்கை 19 ஆம் திகதி வரையிலும் தொடரும். அத்துடன், நத்தார் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மீண்டும் மூடப்பட்டு 29 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இடைநிறுத்தப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீள நடத்தப்படும் 2026 ஜனவரி மாதத்தில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையை கருத்திற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
பிரேசிலில் சரிந்த சிலை
தெற்கு பிரேசிலில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீட்டர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை திங்கட்கிழமை (15) அன்று வீசிய பலத்த சூறாவளிக் காற்றால் கீழே விழுந்து நொறுங்கியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குவைபா நகரில் பரபரப்பான வீதியில் வாகனங்கள் தொடர்ந்து பயணிக்கும் நேரத்தில் சுதந்திர தேவி சிலை கீழே விழுந்து நொறுங்கியதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
முன்னதாக கடும் சூறாவளி காற்று வீசுவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிலையை அதே இடத்தில் நிறுவவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலையகத்தில் புதிய வீடுகள்
லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான மாத்தளை நாலந்த தோட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
இந்திய நிதியுதவியின் கீழ் இந்த வீடுகளின் நிர்மாணம் இடம்பெற்றது. ஒரு வீட்டிற்கென 28 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ் மாத்தளை மாவட்டத்தில் 270 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் நிறைவடைந்த 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான நிகழ்வு பிரதியமைச்சர் கமகெதர திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
▪️விசேட செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளும் வகையில் இன்றே எமது குழுமத்தில் இணைந்துக் கொள்ளுங்கள்..!
காவல்துறை சார்ஜன்ட் பணி இடைநீக்கம்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவை சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நந்த குமார் தக்சி 90 நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நந்த குமார் தக்சியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த காவல்துறை சார்ஜன்ட், சந்தேக நபருடன் பிஸ்கட்டை இரண்டாக உடைத்து கை சைகைகள் மூலம் செய்திகளைப் பரிமாறிக்கொண்டது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பிலே அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது.
ஊவா மாகாண பாடசாலை ஆரம்பமாகும் திகதி
ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இம்மாதம் 29 ஆம் திகதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 16/12/2025 நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் திறக்கப்படாததற்கு போக்குவரத்து சிரமங்கள் மற்றும் நிவாரண முகாம்களின் செயல்பாடுகள் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுபாஷினி இந்திகா குமாரி லியனகே ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகளை 7 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் பரீட்சையில்,குறிப்பிட்ட பாட வினாத்தாளின் 2 ஆம் பகுதியில் இருக்கும் 5 வினாக்களும் முதல் வினாத்தாளுக்கு விடை எழுதவும். வரலாற்று பாடம் மற்றும் நடைபெறுவதால் வினாத்தாள் 1 மற்றும் 2 ஆம் பகுதிகளில் இருக்கும் அனைத்து வினாத்தாள்களுக்கும் அந்த காலப்பகுதியில் நடத்தப்படவுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
202,627 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும், நிலவும் பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வேறு பரீட்சை மையங்கள் தேவைப்பட்டால், பரீட்சைகள் திணைக்களத்திற்கு பாடசாலை அதிபர்கள் மூலம் தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தனியார் பரீட்சாத்திகள் நேரடியாக 1911 அல்லது 0112 784 208, 0112 784 537 அல்லது 0112 788 616 என்ற எண்களுக்கு அழைத்து வேறு பரீட்சை மையத்தைக் கோரலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
மூன்றாம் தவணை பரீட்சை தொடர்பில் வௌியான........!

No comments