2026 ஆம் ஆண்டும் மாணவர்களுக்கு கொடுப்பனவு.......!

    2026 ஆம் ஆண்டும் மாணவர்களுக்கு கொடுப்பனவு..............! 




2026 ஆம் ஆண்டும் மாணவர்களுக்கு கொடுப்பனவு.......!




2026 ஆம் ஆண்டும் மாணவர்களுக்கு கொடுப்பனவு.......!


பாதுகாப்பான மற்றும் தரமான கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில், மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்ய தலா ரூ. 6,000 கொடுப்பனவை 2026 ஆம் ஆண்டும் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.


அஸ்வெசும குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், 300 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலுள்ள மாணவர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படும்.


ஜனவரி 15 முதல் நாட்டின் மழை நிலைமை 


ஜனவரி 15 ஆம் திகதி முதல் நாட்டில் மழை நிலைமை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


13/01/2026 பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


அதன்படி, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன்படி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும்.


மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.


இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.


காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யும் அதேவேளை, நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.


காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.


சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையும் உள்ள கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.


சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையும் உள்ள கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.


நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் சாதாரணமானது முதல் மிதமான அலை வரை காணப்படும்.


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிராந்தியங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் அக்கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


முதல் சந்திரகிரகணம் மார்ச்சில்...


2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகண நிகழ்வு மார்ச் மாதம் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இந்த கிரகணத்தின்போது சந்திரன் 82 நிமிடங்கள் இரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


தற்போதைய வானியல் தரவுகளின்படி, மார்ச் நிகழ்வில் இந்த முழுமை நிலை சுமார் 58 நிமிடங்கள் மற்றும் 19 வினாடிகள் நீடிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், வளிமண்டல நிலைமைகளைப் பொறுத்து, நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும் அந்த நிலை சுமார் 82 நிமிடங்கள் வரை நீடிப்பது போன்ற உணர்வைத் தரக்கூடும் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


கிழக்காசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பசிபிக் பெருங்கடல் பகுதிகள் மற்றும் வட மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த கிரகணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ காண முடியும் என்றும், ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்கள், அந்தந்த ஊர் உள்ளூர் நேரத்தைப் பொறுத்தும், வானில் நிலவு இருக்கும் நிலையைப் பொறுத்தும் இந்த கிரகணத்தை ஓரளவிற்குத் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முழு கிரகணம் கிழக்கு ஆசியா மற்றும் அவுஸ்திரேலியாவில்: மார்ச் 3 அன்று இரவு நேரத்தில் இந்த கிரகணம் தெரியும். வட அமெரிக்காவில் மார்ச் 3 அன்று அதிகாலையில் இது நிகழும். இந்திய நேரப்படி இந்த நிகழ்வு மார்ச் 3 அன்று மாலை சுமார் 02:14 மணிக்கு தொடங்கி இரவு 07:53 மணி வரை நீடிக்கும்.



குரங்குகளின் எண்ணிக்கை


பயிர்ச் செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வனவிலங்குகளில், குரங்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தமக்குத் தகவல் தெரிவித்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.


இந்தக் குரங்குகளின் அச்சுறுத்தல் குறைவடைந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பயிர்களை அழிக்கும் வனவிலங்குகளுக்காக காப்புக்காடுகளில் ஐந்து குளங்களை நிர்மாணிப்பதற்கும், அந்த விலங்குகளின் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


சிறைச்சாலைகளின் கைதிகள் நிவாரண உதவி...


டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இலங்கையிலுள்ள 10 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் தங்களது ஒரு வேளை உணவைத் தியாகம் செய்துள்ளனர்.


அந்தவகையில் 34.6 இலட்சம் ரூபா மதிப்பிலான உணவுப் பொருட்களைப் பங்களிப்பாக வழங்கியுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


சிறைக்கைதிகள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒரு வேளை உணவைத் தவிர்த்து, அதன் மூலம் மிச்சப்படுத்தப்பட்ட பெருமளவிலான நிதியை உணவுப் பொருட்களாக வழங்கியுள்ளனர். 


அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் 540,679 ரூபாவும் மெகசின் சிறைச்சாலையில் 450,710 ரூபாவும் வெலிக்கடை சிறைச்சாலையில் 454,630 ரூபாவும் மகர சிறைச்சாலையில் 386,010 ரூபாவும் போகம்பரை சிறைச்சாலையில் 367,949 ரூபாவும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 258,612 ரூபாவும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் 209,224 ரூபாவும் குருவிட்ட சிறைச்சாலையில் 195,150 ரூபாவும் மாத்தறை சிறைச்சாலையில் 105,046 ரூபாவும் மொனராகலை சிறைச்சாலையில் 96,471 ரூபாவும் வழங்கியுள்ளனர்.


இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள கைதிகள் இன, மத பேதமின்றிப் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுக்காகத் தங்களது உணவைத் தியாகம் செய்து இந்த மனிதாபிமான உதவியைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அதிகரித்துள்ள வைரஸ் தொற்று...


நாட்டில் வைரஸ் நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் ஆலோசகர் மருத்துவர் கே.வி.சி. ஜனக தெரிவித்துள்ளார்.


இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பி பரவல் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா அல்லாத வைரஸ் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் சிக்குன்குனியா வழக்குகளின் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டின் முதல் ஒன்பது நாட்களில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 2,170 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இம் மாதத்தின் 11 நாட்களில் 94,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் 


இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ஜனவரி 2026 முதல் 11 நாட்களுக்குள் 94,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளனர்.


ஜனவரி 01-11, 2026 க்கு இடையில் மொத்தம் 94,041 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்ததாக SLTDA தெரிவித்துள்ளது.


அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை இந்தியாவிலிருந்து பதிவாகியுள்ளது, இது 16,772 ஆகும், அதைத் தொடர்ந்து ரஷ்யா (10,9270), ஐக்கிய இராச்சியம் (8,676), ஜெர்மனி (7,060) மற்றும் ஆஸ்திரேலியா (4,591) ஆகியவை உள்ளன.


2026 ஆம் ஆண்டும் மாணவர்களுக்கு கொடுப்பனவு.......!

No comments

Theme images by fpm. Powered by Blogger.